Sunday, September 26, 2010

உங்கள் நேரத்தை இங்கு வந்து வீணாக்காதீர்கள்

உங்கள் நேரத்தை இங்கு வந்து வீணாக்காதீர்கள். அநியாத்துக்கு இந்த வீடியோ ரொம்ப நல்லது .




இது நாய்ப் பாடல்

Saturday, September 11, 2010

ஆண்களுக்கு மட்டும். உங்களுக்கு வயதாகிவிட்டதா இல்லையா?



இன்றைய தமிழ் சினிமாவில மட்டுமல்ல அன்றய தமிழ் சினிமாவிலுங் கூட 60 வயது கதாநாயகர்கள் 18 வயது கதாநாயகிகளை மரங்களுக்கு முன்னாலும் பின்னாலும் கலைத்துக் களைத்துப் பாடுவார்கள்,ஓடுவார்கள். காசைக் கொடுத்து இதையெல்லாம் பார்த்துவிட்டு பின்னர் வெளியே வந்து ஆகா ஓகோ என்று பினாத்தல் வேறு. கமல், ரஜனி போன்ற இன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்களாகட்டும், சிவாஜி, எம்ஜிஆர் போன்ற அன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்களாகட்டும் ஒரு பப்பிளிக் மீற்றிங்குக்கு வந்தால் கும்முனு இருக்காங்களே அது எப்படி?
அது அவங்களோட சமையல்காரர், வைத்தியர், ஒப்பனையாளரரோட திறமையால இப்படி அழகாகத் தோற்றமளிக்கிறாங்க. அவங்கெல்லாம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைன்னு உடம்பை சூப்பரா வச்சுக்கணும். ஏன்னா அது தான் அவங்களோட தொழிலுக்கு முதலீடு.
இது சரி உங்களுக்கு வயசாயிடுச்சா இல்லையா? தெரியலையா?
சரி. கீழேயுள்ள ஒரு கேள்விக்காவது ஆம் என்று பதிலளித்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று உங்க அம்மா அப்பாவிற்கு இருந்த வருத்தங்களைச் சொல்லி உடலை சோதனை பண்ணுங்க தேவையென்றால் மருந்து எடுங்க. ஏன்னா உங்களை நம்பிக் கொஞ்சப் பேருங்க வீட்ல இருக்காங்கல்ல அதுக்குத்தான்.
பஸ்ல உங்களக் கண்டா எந்திரிச்சு சீற் தாராங்களா?
ஒரு ரூபா காசு கீழே விழுந்தா குனிந்து எடுக்க மனம் வருகிதில்லையா?
பக்கத்து வீட்டு இளம்பெண் உங்களைப் பார்த்து அங்கிள் ரைம் என்னான்னு பயமில்லாம கேட்கிறாளா?
சம்சாரம் பக்கத்தில வராம கொஞ்சம் முன்னாடியோ பின்னாடியோ நடந்து வாராங்களா?

பாதையை கடக்கப் போனா வாகனங்கள் உடனேயே நிறுத்தி உங்களை கடந்து போகச் சொல்லுறாங்களா?
கிழவிங்க உங்களைக் கண்டால் நிலத்த பார்த்துக்கிட்டு போறாங்களா?
என்ன ஆமா ஆமா என்னுகிட்டே வந்தீங்களா?
சரி சரி ஏன் ஒங்க மனச உடைக்கணும்? நானும் எல்லாத்ததுக்கும் ஆமாதான்.

Wednesday, September 8, 2010

உனக்கு எப்படியடா தாய்க்கு இப்படிச் சொல்ல மனம் வந்தது?


சில வருடங்களுக்கு முன் கொட்டாஞ்சேனையிலுள்ள கொம்மினிகேசனில் எனது போனுக்கு றீலோட் போட நின்றுகொண்டிருந்தேன். ஒருவயதான தாய் ஒருவர் அவசரமாக உள்ளே வந்தார். தம்பி என்னர மகனோட ஒருக்கா அவசரமாய்க் கதைக்க வேணும். கையில காசில்ல, அவனும் கனகாலமாய் அனுப்பவுமில்லை. அவனும் வேலைக்குப் போயிடுவான். அதுக்குள்ள ஆளைப் பிடிக்கவேணும். நான் ஒருக்கா கதைச்சிட்டு விடட்டே எண்டா என்னைப் பார்த்து.
சரி என்று சொல்லி விலகி நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ரெண்டுபேர் போட்டோ கொப்பியடிக்க கொடுத்து விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். மறுபுறத்தில் இளம் பெண்ணொருவர் கொப்பியோ பேனையோ வாங்கிக்கொண்டிருந்தார்.
முதலாளி போலும் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.
பூத்தில தரவோ இதில கதைக்கப் போறியளோ?
இல்லையில்லை. நீங்க ஒரு நிமிடக்கோல் கதைத்து மகனை உங்கட நம்பருக்கு எடுக்கச் சொல்லுங்கோ.
மகன்ர பெயர்?
அம்மா பெயரைச் சொன்னா.

எந்த நாடு?
பிரான்ஸ்.

ரவுண்?
பரிஸ்.

நம்பர் சரியே?
இந்த துண்டில இருக்கிறது சரியான நம்பர். நான் இங்கயிருந்து கன தடவை அங்க கதைத்திருக்கிறன்.

அம்மா, நான் கதைத்துச் சொல்லவோ அல்லது ஸ்பீக்கர் போட்டு நீங்களுங் கேட்கப் போறியளோ?
ஸ்பீக்கர் போட்டா நானுங் கேட்கலாந்தானே.
முதலாளி ஸ்பெசலாக ஸ்பீக்கர் போட்டு வைத்து இருக்கிறார் போல வாறவைக்கு கோல் போகுதுதான் எண்டதை உறுதிப்படுத்திக் காட்ட.
முதலாளி நம்பரை அடிக்க ஸ்பீக்கர்ல கணீரென ரெலிபோன் அடிப்பது அங்கு நிண்ட எங்களெல்லோருக்குங் கேட்கிறது.
மறுபுறம் ஒரு இளம் பெண் எடுத்து கலோ என்றார். எங்களெல்லோருக்கும் அது தெளிவாகக் கேட்டது.
உடனே முதலாளி கொழும்பிலயிருந்து கொம்மினிகேசனில '--------'ட அம்மா கதைக்கிறா எண்டவுடன்
இஞ்சேருமப்பா கொழும்பிலயிருந்து அம்மா கதைக்கிறா, என்ன சொல்ல, மறுபக்கம் அந்தப்பெண் கத்தினாள். அதுவும் எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
அதற்கு மகன் சொன்ன மறுமொழியும் ஸ்பீக்கர்ல அங்கு நின்ற எங்களெல்லோருக்குங் தெளிவாகக் கேட்டது. நான் இல்லை எண்டு சொல்லும்.
அந்தப்பெண் அவர் (அங்கே அருகிலிருந்த பாதகனைப்பார்த்த வண்ணம்) கொஞ்சம் முந்தித்தான் வேலைக்குப் போனவர் எண்டாள் சண்டாளி.
முதலாளி போனை வைத்து விட்டு அந்தத் தாயை சோகமாய்ப் பார்த்தார்.
எனக்கென்றால் என் நெஞ்சினுள் ஈட்டி பாய்ந்தது போலிருந்தது.
பெற்ற தாய்க்கு இந்த மறுமொழியாடா பாவி. என் மனம் சபித்தது.
அந்தத் தாய் எதுவுமே நடவாதது போல எவ்வளவு தம்பி காசென்றார்.
முதலாளியும் ஒரு நிமிசந்தானே அடுத்த முறை வரேக்க தாங்கோ எண்டாh.;
நான் போனுக்கு றீலோட் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன் ஆனால் முதலாளியையோ அங்கிருந்தவர்களையோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
ஏனெண்டால் நாங்களெல்லோரும் ஸ்பீக்கர்ல கதையை கேட்டோமல்லவா.
(கற்பனையல்ல முற்றிலும் உண்மை.)

Tuesday, September 7, 2010

மிஸ்கோல் மன்னர்கள்.


மிஸ்கோல் மன்னர்கள்.
மொபைல் போன்களை எதுவித தேவையுமின்றி எல்லோரும் வாங்குகிறார்களென வாங்கி விட்டு கோல் ஒன்றும் வருகுதே இல்லையெனப் புலம்பிக் கொண்டிருக்கும் 75 வீதமானோரே மிஸ்கோல் மன்னர்கள,; ராணிகளாக மாறுபவர்கள்.
ஆரம்பத்தில் தமது நண்பர்களுக்கு மிஸ்கோல் போட்டுப் பார்ப்பார்கள். அவர்களெடுத்து ஏன் மிஸ் கோலென்றால்
1. போனில காசு குறைவாயிருந்தது ஆனால் உன்னோட கதைக்கவேணும் போலிருந்தபடியுhல் மிஸ்கோல் போட்டனான் என்பார்கள்.
2. பக்கத்தில் றீலோட்போட இடமில்லை.
3. உங்களுக்கத்தான் இலவச நிமிடங்களுள்ளனவே கதையுங்களேன்..
4. போன் றிங் பண்ணுதா எண்டு பார்த்தனான்.
5. மிஸ் கோலொண்டு இருந்தது அழிச்சுப் போட்டன். பிறகுதான் உங்கடையோ எண்டு அடிச்சுப் பார்த்தன்.பிறகு டக்கெண்டு நிப்பாட்டிவிட்டன்.
6. சின்னவன் வைத்து விழையாடிக் கொண்டிருந்தவன் அடிச்சிட்டான் போல இருக்கு.

வேற ஏதும் இருந்தா போட்டுத்தாங்கோ இங்க போடுவதற்கு.
பின்னர் முன்னேறி பத்திரிகை புத்தகங்களிலுள்ள மொபைல் போன்களது இலக்கங்களுக்கு கோலடித்துப் பார்ப்பார்கள். லாண்ட் லைன் பக்கமே போகமாட்டார்கள். தப்பித்தவறி எடுத்து விட்டால் மிஸ்கோல் சந்தோசமும் போய் போன்ல இருந்த காசும் போய்விடும்.
அண்மையில் நண்பரொருவர் தமது சேவை ஒன்றைப் பற்றி பத்திரிகையில் விளம்பரமிட்டாராம்.
எஸ்எம்எஸ் மூலம் பெயரையும் விலாசத்தையும் தனது மொபைலுக்கு அனுப்பினால் முழுவிபரத்தையும் தபால்மூலம் அனுப்புவதாக. அடப் பாவிகளே இரக்கமில்லாமல் ஒருநாளைக்கு 15 மிஸ்கோல் போடுகிறார்களென அழுதார்.
அடுத்த நொக்கியா மாடல் மிஸ்கோல்காரருக்குச் செலவு வைக்கும் மொடலாம்?

Saturday, September 4, 2010

ரஜனி வீட்டு திருமணமும் ரஜினி ரசிகர்களும்


ரஜனி வீட்டு திருமணமும் ரஜினி ரசிகர்களும்.
ரஜனியை எப்போது எங்கே முதன் முதலில் கண்டோம்?
அபூர்வ ராகங்கள் படத்தில் பெயர் தெரியாத ஒருவராகக் கண்டோம்.
அதன் பின் அவரது ஒவ்வொரு படங்களையும் அவர் புதிதாக இந்தப்படத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க அநேகமானோர் சென்றோம். நாங்கள் அவரின் ரசிகர்கள். அவர் திருமணம் செய்த போது ஒரு ரசிகர் கூட கவலைப்படவில்லை எங்களைத் திருமணத்துக்குக் கூப்பிடவிலையென .
இப்போ மட்டும் ஏன் கோபப்பட வேண்டும் அவரது மகளின் திருமணத்துக் கூப்பிடவில்லைஎன.

என்ன இந்த திருமணத்தை மெரினா பீச்சில வச்சிருக்க வேணுமா?
இது அவரது மகளை கட்டிக்க பொறவரோட பர்சனல் விடயம்.
இது அவரது மகளோட பர்சனல் விடயம்.
இது ரஜனியோட பர்சனல் விடயம்.
இதிலெல்லாம் நாங்க தலையிடுறது நாகரீகம் இல்ல .
அவர திரையில பார்த்தோம் சந்தோசமயிருந்தோம் அங்கேய அவர விட்டுடுவோம். எங்கயாவது செட்டில பார்த்தா பகத்தில நிண்டு படம் எடுக்க விடாட்ட அது குற்றம் . அதை எழுதுங்க கலியாணத்துக்குக் கூப்பிடவில்லைஎன அழுவதும் எழுதுவதும் மகா அசிங்கம்.
ரஜனி பெரிய பிழை விட்டுட்டார் என்ன நினைக்கிறன். அதாவது ரஜினி இந்த திருமணத்தை 2-1/2 மணி நேரப்படமாக படமாகஎடுதது ரிலீஸ் பண்ணியிருந்தால் எத்தனையோ கோடி உழைத்திருந்திருக்கலாம் வசூலாக.
ஆனால் ரஜினிகாந்த் நல்ல மனுஷன் எல்லாரிட்டையும் பேச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார். சரி சரி வாங்க எந்திரனைப் பார்த்து சந்தோசப் படுவோம் வாங்க.
மச்சான்.காம்

Friday, September 3, 2010

தீ பிடிக்கும் 230, 000 டாலர் பெறுமதியான கார்கள்

















தீ
பிடிக்கும் 230, 000 அமெரிக்க டாலர் பெறுமதியான கார்கள். வேறு எதுவும் அல்ல. இத்தாலியின் பெராரி இத்தாலியா 458 மாடல் கார்களே வேகமாக செல்லும் பொது தீ பற்றுகின்றன. இந்த சூப்பர் கார்கள் அண்மையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
இவற்ற்றின் தயாரிப்பில் ஓட்டுவதற்குப் பாவிக்கப்பட்ட பொருளே இந்த தீக்குக் காரணம் எனக் கண்டறியப் பட்டு விற்பனை செய்யப்பட்ட அனைத்து கார்களும் திருத்தங்களுக்காக மீள அளைக்க்கப்பட்டுளன.
இருவர் மட்டுமே செல்லக் கூடிய இக் கார்கள் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.35 செகன்களில் எட்டக் கூடியவை.
அதி கூடிய வேகமாக 325 கிலோமீட்டர் வேகத்தை மிக லாவகமாகக் கையாளக் கூடியவை.

இந்தக் கார் உலகின் அதி கூடிய பணக்காரர்களின் விளையாட்டுப் பொருள்.
நம்பினால் நம்புங்கள் சீனாவில் பலர் இந்தக் கார்களை வைத்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலரின் கார்களும் தீ பிடித்துள்ளது. எனினும் தீ பிடித்த கார்களுக்குப் பதிலாக பெராரி நிறுவனம் புத்தம் புதிய கார்களை மீள அள்ளிக்கின்றது.
இதைப் படித்தவுடன் உங்களுக்கு வயிறு பத்தி எரியுமே?
கடவுள் உங்களுக்கு வேறு வயிறு தரமாட்டார் எனவே தண்ணீர் நிரம்ப குடித்துக் கொள்ளுங்கள்.