Sunday, May 15, 2011

வடிவேலு தாடிவேலு ஆகி தலைமறைவு?


தேதிமுக மதுரையில் வலை வீச்சு. வடிவேலு என்கின்ற எடுப்பார் கைப்புள்ள எஸ்கேப்.
நக்கல்காரன் களிப்பு. தப்பு தப்பு கணிப்பு (எப்பவுமே தப்பாத்தான் எலக்ஸன கணிப்பாங்களோ?)
அம்மா வீட்டு முன் அங்கத்துவ பத்திரத்துடன் நிற்கிறாராம் என கேள்வி. தேதிமுக ஆளுங்களுக்குச் சொல்லிடாதீங்க. அவங்க உருட்டுக்கட்டையோட மதராஸ் முழுக்கத் தேடுறாங்களாமில்ல.
சரி நம்ம வடிவேலுதல தலைல அடிச்சிக்கிட்டு என்னதான் சொன்னாருன்னு கேட்போமே?
மாட்டிவிட்டுட்டாங்கையா மாட்டிவிட்டுட்டாங்க.
'எனக்கு இருக்கற மொத பயம் இவ ரொம்ப நல்லவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறான்னு சொல்லி தமிழ்நாடு பூராவுமுள்ள தேதிமுக கிளை அலுவலகங்கள்ள நாலு, நாலு நாளைக்கு வைச்சு அடிக்கப்போறாங்கிறாங்களோ என்கிறதுதான்.

படிச்சுப் படிச்சு சொன்னேன் சவால் விட்டபடி விஜயகாந் 'சாரோட' (சார் சொல்லிப் பாப்பம் அப்பவாவது உருட்டுக்கட்டய விட்டிர்ராங்களான்னு) எதிர்த்து எலக்ஸன்ல நிக்கிறேன்னு. பாவிப் பயங்க அட்வைஸ் அட்வைஸ்னு என்ன சொன்னாங்க?
ஓட்டுக் கேட்டு தொகுதிக்குப் போனே, அண்ணனோட ஆளுங்க டிராயர மொத மீட்டிங்ல மொத மேடயிலேயே உருவிடுவாங்கன்னாங்க. சரி சினிமாவில வாறமாதிரி ஜீன்ஸ போட்டா உருவ சான்சே இல்லைன்னேன்.
விட்டாங்களா? டிப்பாஸிட் கிடைக்கவே கிடைக்காதுன்னாங்க. மதுரக்காரங்க படம் எடுத்தது மாதிரின்னாங்க. பானருக்குப் பணம், மீட்டிங் செலவு, வாக்காளப்பெரு மக்களுக்கு குடிக்குப் பணம். அப்பப்பா ஏற்கனவே நம்ம உடன் பிறவா அண்ணன் சிமுக்கு (சிங்கமுத்து அண்ணே உங்க பேரைக்கூட மருவாதயாத்தான் சொல்லுறன், அந்த உருட்டுக்கட்டை விவகாரத்தை கை விட்டுருங்கண்ணே.) பணங் கொடுத்து தலயில துண்ட போட்டுக்கிட்டிருக்கன். இதுக்குள்ள எலக்ஸன்ல இது வேற செலவா?
வேண்டாம், மேடைல ஒரு பக்கமா நின்னு விஜயகாந் 'சார' ஒரேயொரு கேள்வி கேட்டுட்டுப் போயிடுறேன்னேன். அப்புறமா மீட்டிங் முடிஞ்சாப்புறம் பெரியவரு சொன்னாரு அடேங்கப்பா ஒன்னப் பாக்க இவ்வளவு கூட்டமா? தமிழ் நாட்டயே ஒரு சுத்து சுத்திவான்னாரு. நேத்திக்கு அவர்கிட்ட போய் நிலமய சொன்னேன்.
இந்தப் பெரிய சீஎம்மையே தமிழ்நாட்டுக்காரங்க ஓய்வெடுக்கச் சொல்லிட்டாங்க, நீ எம்மாத்திரம்னாரே.
அண்ணே வடிவேலு கோச்சுக்காத பிளாக்கில சிரிக்கணும்ணு எழுதினதுதாண்ணே.
எலக்ஸன் நேரத்ல தலைவரா இருந்தவர எலக்ஸன் முடிஞ்சப்புறம் இந்த வலைப்பின்னல்காரங்க எல்லாம் சேர்ந்து ரொம்ப பின்னி எடுத்து நாறடிச்சிட்டாங்க.
tamilmanam.net/forward_url.php?url=http://ragariz.blogspot.com/2011/05/i-will-meet-vijaykanth-vadivelu.html&id=864972
thevarcommunity.blogspot.com/2011/04/blog-post_7715.html

Monday, February 21, 2011

கம்பியூட்டர் மொனிற்றர் திருத்தல் - காமெடி முறை.

கம்பியூட்டர் மொனிற்றர் திருத்தல் மட்டுமல்ல ரேடியோ போன்றவற்றிற்கும் இது பொருந்தும் என தமிழ் மக்கள் அறிவர். எனினும் சில குடிமக்கள் போதையில் தமது மனைவியரையும் திருத்த இதனைப் பாவிப்பார்கள். மறுநாள் காலையில் தமது மனைவி ரொம்ப நல்லவளென (சாப்பாட்டைப் பெறுவதற்காக) வீட்டு வாசலிலிருந்து போறவர் வாறவர்களுக்கு றீல் விட்டுக்கொண்டிருப்பார்கள்.

Latest technique to repair PC Monitor


Monday, February 14, 2011

காட்டெருமைகள் நடாத்திய அசாத்தியத் தாக்குதல். தவறவிடப்படாத ஒன்று.

காட்டெருமைகளைச் சிங்கங்கள் கூட்டமாகத் தாக்கியபோது முதலைகளும் நடுவில் புகுந்து நடாத்திய மிகப்பெரிய அட்டகாசமே வீடியோவாக இங்கு தரப்பட்டுள்ளது. நடந்தவற்றைப் பாருங்கள். குடும்ப ஒற்றுமையும் பாசமும் தமிழ்ப்படத்தைத்தான் நினைவூட்டுகின்றன. ஆபிரிக்காவில் உள்ள காடொன்றில் நடந்துள்ள இந்த நிகழ்வை அற்புதமாப் படமாக்கியுள்ளனர். முடிவைச் சொன்னால் ஆர்வமில்லாமற் போய்விடுமல்லவா? கடைசிவரை பாருங்கள். தமிழ்ப்படம் போலக் கடைசியில் பொலிஸ் வராவிட்டாலும் ......

Sunday, February 13, 2011

அரண்மனை மணியை பசு அடித்ததை நம்பாதவர்களுக்கு.

மனுநீதி கண்டசோழனின் அரண்மனை மணியை பசு அடித்ததை நம்பாதவர்களுக்கு என இந்த வீடியோ இங்கு அளிக்கப்பட்டுள்ளது. நல்ல காலம் நமப மு.அ ஆட்சியில் மணி கட்டப்படவில்லை.

இந்த இரண்டு மாடுகளுமே புத்தி கூர்மையுள்ளவையாம். இவற்றில் எது கூடியது?
உடன் பதியுங்கள்.



Saturday, February 12, 2011

இந்த கிளி தான்தான் சுப்பர்ஸ்ராராம்.

பேசுவதைத் திருப்பிப் பேசும் கிளிகளைப் பார்த்துள்ளீர்கள். ஆனால் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இக்கிளியைப் பாருங்கள். தனது பெயரைச் சொல்கிறது. நீ பிரபலமானவரா என்றால் தான் சுப்பர்ஸ்ரார் என்கிறது. சேவல் போல கூவச்சொன்னால் கூவுகிறது. இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.








இந்த lyre bird தான் வாழும் இடத்திற் கேட்கும் சப்தங்களை அப்படியே அச்சொட்டாகத் தரவல்லது. பறவைகளாகட்டும், கார், புல்லாங்குழல் எதுவாகட்டும் அப்படியே ஒலிக்கவல்லது. நம்மூரு அசத்தப்போவது யாரு ஸ்டார்களை எல்லாம் இது தூக்கி சாப்பிட்டுவிட்டுதுங்கோய்.


David Attenborough presents the amazing lyre bird, which mimics the calls of other birds - and chainsaws and camera shutters - in this video clip from The Life of Birds. This clever creature is one of the most impressive and funny in nature, with unbelievable sounds to match the beautiful pictures. From the BBC.
http://en.wikipedia.org/wiki/Lyrebird

பாம்பென்றால் இந்த முயலுக்கு ஜுஜுபி.

பாம்பென்றால் இந்த முயலுக்கு ஜுஜுபி.
பாம்பென்றால் படையும் நடுங்குந்தானே ஆனால் இங்கு முயலென்றால் பாம்பு நடுங்குவது மட்டுமல்லாமல் ஓட்டமும் எடுக்கிறது. ஓரு வேளை ரஜனி சார் வீட்டு முயலோ?

வந்ததுதான் வந்தீர்கள் போனஸ்ஆக இந்தப் பூனைகளின் அட்டகாசங்களையும் பாருங்கள்.
Rabbit Vs Snake


Funny cats

Sunday, January 30, 2011

தமிழ் பழைய பாட்டா வேண்டாம். புதிதானவைதான் கேட்போம்.

இசைக்கு வயசில்லை. இதோ இந்தத் ஆங்கிலப்பாட்டுக்கள் என்ன ஓட்டம் ஓடுகின்றன எனப் பாருங்கள்.

How Much Is That Doggie In The Window - Patti Page



Lolipop



Tony Orlando & Dawn KNOCK THREE TIMES

Wednesday, January 26, 2011

வேற்றுக்கிரகவாசிகளின் விளையாட்டா? இந்தோனேசியாவில் பரபரப்பு.

இவ்வாரம் இந்தோனேசியாவில் யோயகார்த்தா எனும் இடத்தில் வயல்களின் நடுவே 70 மீற்றர் சுற்றுவட்டத்திற்கு சரியாக அளவெடுத்து செய்ததுபோல பூ போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. யார் இதனைச் செய்தார்களென அங்கு கூடும் மக்கள் கூட்டம் யோசிக்கின்றனர்.
இது இந்து மத்தின் மூலாதாரச் சக்கரத்தை ஒத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அது சரி அங்கு கடைகளும் போட்டு அதனைப் பார்ப்பதற்கு கட்டணமும் வசூலிக்கத் தொடங்கி விட்டார்கள். நம்ம ஊர்காரன்களோ?
இதோ இங்கு பாருங்கள்.

This particular crop circle is fascinating because of its striking resemblance to the muladhara chakra -- one of the basic chakras in Tantric Hinduism





Tuesday, January 25, 2011

அடி உதவுமாற் போல அண்ணன் தம்பி உதவாது. அது இவருக்குச் சரி.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்திலுள்ள மெக்சிக்கன் ரெஸ்ரோறன்ற்; உரிமையாளருக்கு இது நன்றாகத் தெரிந்துள்ளது போலும். இவரது மெக்சிக்கன் சாப்பாடான ராக்கோஸ் - சுருளாக்கப்பட்ட ரொட்டிக்குள் சமைத்த உணவுகளை பரிமாறல் - சான்ட்விச் போல. அத்துடன் மெக்சிக்கோவிற்குரித்தான ரெக்கிலா குடிபானமும் கிடைக்கும். (விஸ்கிக்கு சமனானது சொட் அடிப்பதற்கானது. பயங்கர விலை. இதைக் குடிப்பதற்கு தனி முறைகளுண்டு)
இவர் இவ்வளவு காலமும் சாதாரண இறைச்சி வகைகளை ராக்கோஸ் உள்ளே வைத்துக் கொடுத்தவர்.வியாபாரம் ஏற ஏற வாத்து, ஆமை, தவளைக்கால்கள், என முன்னேறி பாம்பு, கலைமான், முதலை, கங்காரு இறைச்சி என கொடிக்கட்டிப் பறந்தவர் திடீரென சிங்கத்தின் இறைச்சி வைத்த ராக்கோஸ் எட்டு டாலருக்கு வழங்கவுள்ளதாக இவர் அறிவித்ததுதான் தாமதம் வாடிக்கையாளர்கள், உறவினர்கள், எனப் பலரும் இவருக்கு கோல் எடுக்கப் பயந்து போன இவர் சிங்கத்தின் இறைச்சி திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். என்றாலும் எதிர்காலத்தில் பல புதுவகை இறைச்சிகளை அறிமுகப் படுத்தவுள்ளதாக பினாத்திக் கொண்டுள்ளார்.
இதைக்குடிக்க ஊறுகாயில்ல உப்புந் தேசிக்காயும்;தான் தேவை.
ஆணா? பெண்ணா? வித்தியாசமேயில்ல ஜமாய்ங்க. ஊரு அப்படி.
அப்படியே அந்த வீடியோவை நினைவில வச்சுக்கங்க, நாளைக்கு அமெரிக்கா போனா தேவைப்படுமல்லவா?






Sunday, January 23, 2011

எந்திரனில் வந்துள்ள பாடலை போன்றதா?

இந்த பழைய ஆங்கிலப் பாடல் எந்திரனில் வந்துள்ள பாடலைப் போலுள்ளதென நண்பரொருவர் சொல்கிறார்.
இசை எம்மொழியில் வந்தாலும் படம் எம்மொழியில் வந்தாலும் ரசிப்பது என் பொழுது போக்கு. சரி நீங்களும் ஒரு முறை கேட்டு, பார்த்து உங்கள் முடிவை எழுதுங்களேன்.



உலகின் உல்லாசபுரி பிரேஸில்.

வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்த பிரேஸில் மக்கள். தங்களது சுய அடையாளத்தையும் பாரம்பரியங்களையும் போர்த்துக்கேயரின் அடக்குமுறையில் இழந்தவர்கள்.
இன்று அங்கு ஏராளமானோர் சாப்பிட வழியின்றித் தவிக்கையில் பலர் தங்க கரண்டிகள் மூலம் உணவருந்துகின்றனர். என்ன கஸ்டம் வந்தாலும் ஞாயிறு சர்ச்சுகளுக்குச் செல்வதைக் கைவிடமாட்டார்கள். அதன் பின்னர் இருக்கும் பணத்திற்கு கடற்கரையிலும் பார்களிலும் அவர்களுக்கேயுரிய சம்பா பாட்டும் சம்பா நடனமும்தான். மாலையானால் உதைபந்தாட்டம்தான். கடற்கரைகளில் மட்டும் 50 – 60 மாட்ச் நடக்குமென்றால் பாருங்களேன்.
இங்கு உல்லாசப் பயணிகளுக்கான சகலவையும் வசதிகளுக்கும் எவ்விதக் குறைவுமில்லை. கள்வர்களையும் சேர்த்துத்தான்.
வருடந்தோறும் பெப்ரவரியில் வரும் கர்னவால் நிகழ்வு பிரேஸில் முழுவதும் குதூகலமாகச் சகலரினாலுங் கொண்டாடப்படும். இதன் மிகப் பெரிய விழா றியோடி ஜெனைரோ நகரிற் கொண்டாடப்படும். உலகெங்குமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடும் நிகழ்வாக இதுமாறியுள்ளது. இந் நகர நிகழ்வை ஒருநான் இரவு நல்ல இருக்கையிலிருந்து பர்வையிட 400டாலர் கட்டணம் என்றால் பாருங்களேன்.

This Brazilian carnaval or carnival, event must be seen in live at leat once in your life time. If you have money make there in February and enjoy it. My self lucky, my career took me there with out any expenses. Watch some videos of that carnaval event. What a fun loving people.





Tuesday, January 11, 2011

சிங்கங்கள் இவ்வளவு நல்லவையா?

சிங்கங்கள் இவ்வளவு நல்லவை என்றால் நாங்களும் ஒன்று இரண்டு வீட்டில் வளர்க்கலாமே? இங்கே பாருங்கள் எப்படி இவரைக் கட்டிப்பிடித்து விளையாடுகின்றன என்று. இந்த வீடியோ தென்ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. கீழுள்ள அடுத்த வீடியோ 5 நிமிடம் வரையானது. நிச்சயமாக அதைப் பார்க்கத் தொடங்கினால் நிறுத்தமாட்டீர்கள். அவ்வளவு தூரம் அங்கு சாகசங்காட்டும் நாய்கள் உங்களைக் கவர்ந்து விடும்.




இது நாய்களின் வீடியோ கட்டாயம் பாருங்கள்

Sunday, January 9, 2011

பரதநாட்டியம் தெரியும். சட்னி நடனம், பாட்டு தெரியுமா?

இந்திய கலாச்சாரம் மேற்கிந்திய தீவுகளில் குடியேறியவர்களால் தொடர்ந்து முன்னெற்றப்படுகிறதாம். சட்னி நடனம், சட்னி பாட்டு என்பன அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைகளாம். பார்த்துப் புளகாங்கிதமடையுங்கள். இயலுமானால் சம்பல் பாட்டும் சம்பல் நடனமும் உருவாக்கி கலாச்சாரத்தை வளருங்கள்.




குடிகாரக் குரங்குகளும் அவற்றின் கூத்துக்களும்.

எமது மூதாதையர் என வர்ணிக்கப்படும் குரங்குகள் குடித்துக் கூத்தாடுவதைப் பார்த்தால் எமது ஊர் பெருங்குடி மக்களினதும் அவர்களது அட்டகாசங்களுமே உங்களுக்கு நினைவிற்கு வரக்கூடும்.
இங்குள்ள வீடியோ மேற்கிந்தியத்தீவுகளென அழைக்கப்படும் கரிபியன் தீவுகளில் படமாக்கப்பட்டது. அந்தி சாய்ந்தாலும் மந்தி கொப்புத் தவறாதாம் ஆனால் இந்தக் கூட்டத்திற்கு மரக் கொப்புகள் தெரியுமோ எனத்தெரியவில்லை.
பாருங்கள் வீடியோவை ரசியுங்கள் ஆனால் அந்தக் குரங்குகளைப் போல களவெடுத்துக் குடிக்காதீர்கள் அப்படிக் குடித்தாலும் அவற்றைப் போலக் கூத்தாடாதீர்கள்.





சரி சரி இந்தக்கூட்டத்தையும் பாருங்களேன்.

பிச்சைகாரர் மீண்டும் வானொலி அறிவிப்பாளர்

அமெரிக்கப் பத்திரிகையொன்றில் வேலை செய்யும் வீடியோ படப்பிடிப்பாளர் வீடு இல்லாமல் வீதியில் வசிப்பவர்களுக்கு சிறு பண உதவி செய்பவர். ஒருமுறை இவ்வாறான ஒருவருக்குப் பண உதவி செய்யும் போது தான் ஒரு பழைய வானொலி அறிவிப்பாளரென மட்டையில் எழுதிவைத்திருந்ததைக் கவனித்துவிட்டார்.
மீண்டும் அவ்வழியாக அவர் தனது வீடியோ கமெராவுடன் வந்தபோது அந்த பிச்சை எடுப்பவரைக் கண்டு அவரது வானொலித் திறமையைக் காண்பிக்கச் சொல்லி அதனைத் தனது வீடியோவில் பதிவு செய்து தனது காரியாலயத்தில் கொடுத்துள்ளார்.
பிச்சைஎடுப்பவரின் கணீர் என்ற குரலைக் கேட்ட காரியாலயத்திலிருந்த ஒருவர் அதனைத் தங்களது இணையத்தில் போட்டுவிட்டார். அங்கு அதனைக் பார்த்துங் கேட்ட ஒருவர் அதனைக் காப்பி பண்ணி யுரியூப் இணையத்தில் போட்டு விட்டார்.
கணீர் என்ற குரலைக்கொண்ட அந்த வீடியோ 48 மணிநேரத்தில் 13,000,000 பார்வையாளர்களால் பர்வையிடப்பட யார் அந்த பிச்சைகாரரென முழு அமெரிக்காவுமே தேடத்தொடங்கியது.
இன்று அந்த பிச்சைகாரர் மீண்டும் தனது வேலையை ஆரம்பிக்கிறார்.
ஆம் பழைய அறிவிப்பாளர் மது; போதை என வாழ்க்கையை தொலைத்தவருக்கு கடவுள் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.