Sunday, January 30, 2011

தமிழ் பழைய பாட்டா வேண்டாம். புதிதானவைதான் கேட்போம்.

இசைக்கு வயசில்லை. இதோ இந்தத் ஆங்கிலப்பாட்டுக்கள் என்ன ஓட்டம் ஓடுகின்றன எனப் பாருங்கள்.

How Much Is That Doggie In The Window - Patti Page



Lolipop



Tony Orlando & Dawn KNOCK THREE TIMES

Wednesday, January 26, 2011

வேற்றுக்கிரகவாசிகளின் விளையாட்டா? இந்தோனேசியாவில் பரபரப்பு.

இவ்வாரம் இந்தோனேசியாவில் யோயகார்த்தா எனும் இடத்தில் வயல்களின் நடுவே 70 மீற்றர் சுற்றுவட்டத்திற்கு சரியாக அளவெடுத்து செய்ததுபோல பூ போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. யார் இதனைச் செய்தார்களென அங்கு கூடும் மக்கள் கூட்டம் யோசிக்கின்றனர்.
இது இந்து மத்தின் மூலாதாரச் சக்கரத்தை ஒத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அது சரி அங்கு கடைகளும் போட்டு அதனைப் பார்ப்பதற்கு கட்டணமும் வசூலிக்கத் தொடங்கி விட்டார்கள். நம்ம ஊர்காரன்களோ?
இதோ இங்கு பாருங்கள்.

This particular crop circle is fascinating because of its striking resemblance to the muladhara chakra -- one of the basic chakras in Tantric Hinduism





Tuesday, January 25, 2011

அடி உதவுமாற் போல அண்ணன் தம்பி உதவாது. அது இவருக்குச் சரி.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்திலுள்ள மெக்சிக்கன் ரெஸ்ரோறன்ற்; உரிமையாளருக்கு இது நன்றாகத் தெரிந்துள்ளது போலும். இவரது மெக்சிக்கன் சாப்பாடான ராக்கோஸ் - சுருளாக்கப்பட்ட ரொட்டிக்குள் சமைத்த உணவுகளை பரிமாறல் - சான்ட்விச் போல. அத்துடன் மெக்சிக்கோவிற்குரித்தான ரெக்கிலா குடிபானமும் கிடைக்கும். (விஸ்கிக்கு சமனானது சொட் அடிப்பதற்கானது. பயங்கர விலை. இதைக் குடிப்பதற்கு தனி முறைகளுண்டு)
இவர் இவ்வளவு காலமும் சாதாரண இறைச்சி வகைகளை ராக்கோஸ் உள்ளே வைத்துக் கொடுத்தவர்.வியாபாரம் ஏற ஏற வாத்து, ஆமை, தவளைக்கால்கள், என முன்னேறி பாம்பு, கலைமான், முதலை, கங்காரு இறைச்சி என கொடிக்கட்டிப் பறந்தவர் திடீரென சிங்கத்தின் இறைச்சி வைத்த ராக்கோஸ் எட்டு டாலருக்கு வழங்கவுள்ளதாக இவர் அறிவித்ததுதான் தாமதம் வாடிக்கையாளர்கள், உறவினர்கள், எனப் பலரும் இவருக்கு கோல் எடுக்கப் பயந்து போன இவர் சிங்கத்தின் இறைச்சி திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். என்றாலும் எதிர்காலத்தில் பல புதுவகை இறைச்சிகளை அறிமுகப் படுத்தவுள்ளதாக பினாத்திக் கொண்டுள்ளார்.
இதைக்குடிக்க ஊறுகாயில்ல உப்புந் தேசிக்காயும்;தான் தேவை.
ஆணா? பெண்ணா? வித்தியாசமேயில்ல ஜமாய்ங்க. ஊரு அப்படி.
அப்படியே அந்த வீடியோவை நினைவில வச்சுக்கங்க, நாளைக்கு அமெரிக்கா போனா தேவைப்படுமல்லவா?






Sunday, January 23, 2011

எந்திரனில் வந்துள்ள பாடலை போன்றதா?

இந்த பழைய ஆங்கிலப் பாடல் எந்திரனில் வந்துள்ள பாடலைப் போலுள்ளதென நண்பரொருவர் சொல்கிறார்.
இசை எம்மொழியில் வந்தாலும் படம் எம்மொழியில் வந்தாலும் ரசிப்பது என் பொழுது போக்கு. சரி நீங்களும் ஒரு முறை கேட்டு, பார்த்து உங்கள் முடிவை எழுதுங்களேன்.



உலகின் உல்லாசபுரி பிரேஸில்.

வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்த பிரேஸில் மக்கள். தங்களது சுய அடையாளத்தையும் பாரம்பரியங்களையும் போர்த்துக்கேயரின் அடக்குமுறையில் இழந்தவர்கள்.
இன்று அங்கு ஏராளமானோர் சாப்பிட வழியின்றித் தவிக்கையில் பலர் தங்க கரண்டிகள் மூலம் உணவருந்துகின்றனர். என்ன கஸ்டம் வந்தாலும் ஞாயிறு சர்ச்சுகளுக்குச் செல்வதைக் கைவிடமாட்டார்கள். அதன் பின்னர் இருக்கும் பணத்திற்கு கடற்கரையிலும் பார்களிலும் அவர்களுக்கேயுரிய சம்பா பாட்டும் சம்பா நடனமும்தான். மாலையானால் உதைபந்தாட்டம்தான். கடற்கரைகளில் மட்டும் 50 – 60 மாட்ச் நடக்குமென்றால் பாருங்களேன்.
இங்கு உல்லாசப் பயணிகளுக்கான சகலவையும் வசதிகளுக்கும் எவ்விதக் குறைவுமில்லை. கள்வர்களையும் சேர்த்துத்தான்.
வருடந்தோறும் பெப்ரவரியில் வரும் கர்னவால் நிகழ்வு பிரேஸில் முழுவதும் குதூகலமாகச் சகலரினாலுங் கொண்டாடப்படும். இதன் மிகப் பெரிய விழா றியோடி ஜெனைரோ நகரிற் கொண்டாடப்படும். உலகெங்குமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடும் நிகழ்வாக இதுமாறியுள்ளது. இந் நகர நிகழ்வை ஒருநான் இரவு நல்ல இருக்கையிலிருந்து பர்வையிட 400டாலர் கட்டணம் என்றால் பாருங்களேன்.

This Brazilian carnaval or carnival, event must be seen in live at leat once in your life time. If you have money make there in February and enjoy it. My self lucky, my career took me there with out any expenses. Watch some videos of that carnaval event. What a fun loving people.





Tuesday, January 11, 2011

சிங்கங்கள் இவ்வளவு நல்லவையா?

சிங்கங்கள் இவ்வளவு நல்லவை என்றால் நாங்களும் ஒன்று இரண்டு வீட்டில் வளர்க்கலாமே? இங்கே பாருங்கள் எப்படி இவரைக் கட்டிப்பிடித்து விளையாடுகின்றன என்று. இந்த வீடியோ தென்ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. கீழுள்ள அடுத்த வீடியோ 5 நிமிடம் வரையானது. நிச்சயமாக அதைப் பார்க்கத் தொடங்கினால் நிறுத்தமாட்டீர்கள். அவ்வளவு தூரம் அங்கு சாகசங்காட்டும் நாய்கள் உங்களைக் கவர்ந்து விடும்.




இது நாய்களின் வீடியோ கட்டாயம் பாருங்கள்

Sunday, January 9, 2011

பரதநாட்டியம் தெரியும். சட்னி நடனம், பாட்டு தெரியுமா?

இந்திய கலாச்சாரம் மேற்கிந்திய தீவுகளில் குடியேறியவர்களால் தொடர்ந்து முன்னெற்றப்படுகிறதாம். சட்னி நடனம், சட்னி பாட்டு என்பன அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைகளாம். பார்த்துப் புளகாங்கிதமடையுங்கள். இயலுமானால் சம்பல் பாட்டும் சம்பல் நடனமும் உருவாக்கி கலாச்சாரத்தை வளருங்கள்.




குடிகாரக் குரங்குகளும் அவற்றின் கூத்துக்களும்.

எமது மூதாதையர் என வர்ணிக்கப்படும் குரங்குகள் குடித்துக் கூத்தாடுவதைப் பார்த்தால் எமது ஊர் பெருங்குடி மக்களினதும் அவர்களது அட்டகாசங்களுமே உங்களுக்கு நினைவிற்கு வரக்கூடும்.
இங்குள்ள வீடியோ மேற்கிந்தியத்தீவுகளென அழைக்கப்படும் கரிபியன் தீவுகளில் படமாக்கப்பட்டது. அந்தி சாய்ந்தாலும் மந்தி கொப்புத் தவறாதாம் ஆனால் இந்தக் கூட்டத்திற்கு மரக் கொப்புகள் தெரியுமோ எனத்தெரியவில்லை.
பாருங்கள் வீடியோவை ரசியுங்கள் ஆனால் அந்தக் குரங்குகளைப் போல களவெடுத்துக் குடிக்காதீர்கள் அப்படிக் குடித்தாலும் அவற்றைப் போலக் கூத்தாடாதீர்கள்.





சரி சரி இந்தக்கூட்டத்தையும் பாருங்களேன்.

பிச்சைகாரர் மீண்டும் வானொலி அறிவிப்பாளர்

அமெரிக்கப் பத்திரிகையொன்றில் வேலை செய்யும் வீடியோ படப்பிடிப்பாளர் வீடு இல்லாமல் வீதியில் வசிப்பவர்களுக்கு சிறு பண உதவி செய்பவர். ஒருமுறை இவ்வாறான ஒருவருக்குப் பண உதவி செய்யும் போது தான் ஒரு பழைய வானொலி அறிவிப்பாளரென மட்டையில் எழுதிவைத்திருந்ததைக் கவனித்துவிட்டார்.
மீண்டும் அவ்வழியாக அவர் தனது வீடியோ கமெராவுடன் வந்தபோது அந்த பிச்சை எடுப்பவரைக் கண்டு அவரது வானொலித் திறமையைக் காண்பிக்கச் சொல்லி அதனைத் தனது வீடியோவில் பதிவு செய்து தனது காரியாலயத்தில் கொடுத்துள்ளார்.
பிச்சைஎடுப்பவரின் கணீர் என்ற குரலைக் கேட்ட காரியாலயத்திலிருந்த ஒருவர் அதனைத் தங்களது இணையத்தில் போட்டுவிட்டார். அங்கு அதனைக் பார்த்துங் கேட்ட ஒருவர் அதனைக் காப்பி பண்ணி யுரியூப் இணையத்தில் போட்டு விட்டார்.
கணீர் என்ற குரலைக்கொண்ட அந்த வீடியோ 48 மணிநேரத்தில் 13,000,000 பார்வையாளர்களால் பர்வையிடப்பட யார் அந்த பிச்சைகாரரென முழு அமெரிக்காவுமே தேடத்தொடங்கியது.
இன்று அந்த பிச்சைகாரர் மீண்டும் தனது வேலையை ஆரம்பிக்கிறார்.
ஆம் பழைய அறிவிப்பாளர் மது; போதை என வாழ்க்கையை தொலைத்தவருக்கு கடவுள் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.