Friday, September 14, 2012

திட்டுவோம் வாருங்கள் .


ஒருவரை மற்றவர் திட்டுவதென்பது உண்மையில்  ஒரு கலைதான் . ஒரு சிலரால் திட்டவே முடியாது. ஒரு சிலருக்கு மற்றவர்களைத்  திட்டாமல் இருக்கவே முடியாது.
இவர்கள் திட்டும் சொற்களும் வார்த்தைகளும் இவர்கள் கண்டு பிடித்தவை அல்ல. இவர்கள் பிறப்பின்போதே இவர்களுக்குள் பதிவாகி  வந்தவைதான்  அவை.
இதோ சாம்பிளுக்கு சில.

சரியான அலுகோசு.
அலுகோசு என்பது போர்த்துக்கேய மொழியில் தூக்கிலிடுபவன்

சரியான எம்டன்
எம்டன் என்பது ஜெர்மனியின் அழிக்க முடியாதென கருதப்பட்ட பிரபல சண்டைக் கப்பல்

பரதேசி - பிச்சைக்காரன்

பன்னாடை - பனை ஓலை வளரும் இடத்தில் உள்ளது.

கொள்ளையில் போவானே
கொள்ளை என்பது எலியினால் பரவிய பிளேக் என்னும்காய்ச்சல்.

கோதாரியில போவானே
கோதாரி என்பது காலரா என அழைக்கப்படும் நோய்

பாடையில போவானே
பாடை என்பது இறந்த ஒருவரை சுடலைக்கு கொண்டு செல்ல பயன்படுவது.

முண்டம் 
முண்டம் தலை இல்லாத உடல்.



Sunday, September 9, 2012

வீடுகளில் அதிகம் தேடப்படும் பொருள் எது?

இன்று பாமரன் முதல் பணக்காரன் வீடுவரை காலையிலிருந்து இரவு நித்திரைக்குப் போகும் வரை சிறுவர் முதல் பெரியோர்வரை பாய்ந்து பாய்ந்து தேடி தமக்குப் பக்கத்தில் பதுக்கி வைக்கும் பொருள் எது?
கண்டுபிடிக்க முடியவில்லையா?
ரீவி றிமோட் கொன்றோல்தான்.
இளைய தலைமுறையினர் விளம்பரத்தைக் கண்டவுடன் மள மளவென சனல்களை மாற்றிச்செல்வார்கள். பெரியோர்களால் அந்த வேகத்தில் அதனைப் பார்த்துக் கிரகிக்க முடியாது.
இளைய தலைமுறையினரின் நினைவாற்றல் மிகப்பயங்கரமானது. 10 செக்கன்களுக்குள் 15 சனல்களைப் பார்த்து அவற்றில் எது டிராமா, எது படம், எது சீரியல் என அடையாளங் கண்டுகொள்வர். புடமாயின் அதைப்பற்றிய பூரணவிபரங்களையும் தமது மூளையின் பதிவிலிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

  பெரியோர்களால் ரீவி சனலில் மாறுங் காடசிகளைக் கிரகிக்க முடியாது. சினங்கொண்டு ரீவி றிமோட் கொன்றோல் பாவிக்கும் சிறுவர்மேல் சீறுவர். அல்லது அவர்கள் வருமுன் அதனை எடுத்து ஒளித்து விடுவார்கள்.

Sunday, September 2, 2012

கொத்து ரொட்டி என்ற பெயரில் கொத்தாத ரொட்டி.


மொக்கன் கடை புட்டும் ஆட்டிறைச்சிக் கறியும் குடிக்கவும் விட்டுச் சாப்பிடவும் எலும்பு ரசமும் என்றிருந்த காலம் மாறி கொத்து ரொட்டியும் கொக்கோ கோலாவும் என இளைஞர்கள் மாற்றமடையப்பட வைக்கப்பட்டுள்ளனர்.  இரவு 11 – 12க்கும் கூட டண டண என கொத்து ரொட்டி கொத்தின காலமும் இருந்தது. அப்பெல்லாம் நைற் கடைகளிருந்தன ஆனால் இரவு 2 மணிக்குக்கு கொத்து செக்ஸன் மட்டும் பூட்டப் பட்டுவிடும். இப்பவும் பின்னேரத்திலயிருந்து விடிய விடிய கொத்து ரொட்டியிருக்கு ஆனால் அந்தக் கொத்திற சத்தந்தானில்லை.


கொத்துரொட்டி தயாரிப்பும் பயங்கரமாக முன்னேறி பல வகையான கொத்துரொட்டிகள் வந்துவிட்டன.
1. கோழிக் (சிக்கன் ) கொத்துரொட்டி.
றோஸ்ட் சிக்கனா? கறிக்குள் போட்ட சிக்கனா?;
றோஸ்ட் சிக்கன் எண்டால் உடைத்துப் போடுவதா முழுசா போடுறதா?
2. மீன்; கொத்துரொட்டி.
3. சீஸ் கொத்துரொட்டி.
4. முட்டை கொத்துரொட்டி.
5. மரக்கறிக் கொத்துரொட்டி.
அதென்ன கொத்தாத ரொட்டி?
இப்போ கொழும்பில் எதற்கெடுத்தாலும் வழக்கு வழக்கு அதற்குமேல் தண்டனை.
கொத்து ரொட்டி கடைகளுக்கு அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் தங்களுக்கு தூக்கம் கெடுவதாக கொத்து ரொட்டி கடைகளுக்கு எதிராக வழக்கு போடப்போவதாக மிரட்டுவதனால் கடை முதலாளிகள் முதல் நாள்  கொத்து ரொட்டிக்கெனப்போடப்படும் ரொட்டியை தூளாக வெட்டி வைத்துக்கொள்வார்கள்.


யாராவது கொத்து ரொட்டி ஓடர் செய்தால் முட்டையை உடைத்து கொத்து ரொட்டி தட்டில் பொரியவிட்டு பின் கொத்து ரொட்டிக்கான சகல சாமான்களையும் அத்துடன் போட்டு 4 புரட்டல், 2 சுழாவல், 2 தட்டல். ஆகா உங்கள் கொத்து ரொட்டி ரெடி. சத்தமே இல்லாத கொத்தாத கொத்து ரொட்டி இதுதான்.
(கொத்து ரொட்டியின் பெயரை மாற்றி புரோட்டா புரட்டு என்போமா?)
வேணுமா வேணாமா? ஓட்டுப்போடுங்க.