Wednesday, January 30, 2013

Ozone - ஐரோப்பிய கண்டுபிடிப்பு 1930. தமிழர்கள் 2.000 வருடமுன்னரே இதையறிவர்.

ஓஸோன் படை (Ozone Layer) 1930களில் ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் 2.000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப்பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியுமறிவர். அதாவது இது 200–300 வருடங்களுக்கு முன்னரே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. 1970 – 1980 களிலேயே இதன் தாக்கங்கள் பற்றியும் ஆறிய ஆரம்பித்தனர்.


                                     புராணவித்தகர் மு.தியாகராசா அவர்கள் .

ஆதற்கு ஆதாரமாகக் கீழுள்ள பாடல் இலங்கை. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சேர்ந்த புராணவித்தகர் மு.தியாகராசா அவர்களால் புறநானூற்றிலிருந்து (43வது பாடல்)பெறப்பட்டு அவரது விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது.


நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக,
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையேன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி
எக்க ரிட்ட மணலினும் பலவே (43)

(பதப்பொருள் விளக்கம்) நிலமிசை வாழ்நர் அலமரல் தீர - இந்த நிலவுலகில் வாழ்கின்ற மக்களின் துன்பச் சுழற்சியினால் ஏற்படும் பாடுகள் நீங்கும்படியாக,

தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி – வெப்பத்தால் தகிக்கின்ற கதிர்களை உடையதாகிய சூரியனது தீமைபயக்கும் பகுதியாகிய வெம்மையின் ஒரு பகுதியை தாமே ஏற்றுக் கொண்டு, 

கால் உணவாக – தமது உணவாகக் காற்றையே உண்டு,

சுடரொடு கொட்கும் - அச்சூரியனோடேய சுழன்று வருகின்ற,

அவிர்சடை முனிவரும் - ஒளிர்ந்து விளங்கும் சடாமுடியை உடைய முனிவர்களும்,

மருள – வியப்பினால் திகைப்புற்று மயங்க,

 கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தின் - வளைந்த சிறகுகளையும் கூரிய நகங்களையும் கொண்ட பருந்தினது, 

ஏறு குறித்து ஒரீஇ - எறிந்து தாக்கிக் கொல்லும் படி வரும் செயலைக் கண்டு பயந்து பறந்து அவ்விடத்தை விட்டு விலகித் தப்பி,

தன் அகம் புக்க – தன்னிடத்தே அடைக்கலமாகப் புகுந்த,

குறு நடைப் புறவின் தபுதி அஞ்சி - குறுகிய நடையினையுடைய புறாவினுடைய அழிவுக்காக அச்சம் கொண்டு,
சீரை புக்க - தனது அழிவுக்காக எவ்வித அச்சமும் கொள்ளாது துலாக் கோலிற்புகுந்து தன்னை அப்புறாவுக்கா அர்ப்பணித்த, 

வரைய ஈகை உரவோன் மருக – எல்லையில்லாத கொடை வளம் கொண்ட மனோவலிமை மிக்கவனாகிய சிபிச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் உதித்தவனே,


நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் - எதிரிகளைப் போர்முனையில் வெற்றி கொண்டு அம்மாறுபாட்டால் ஆய செல்வச் சிறப்புக் கொண்ட,

தேர்வண் கிள்ளி தம்பி – தேர்ப்படைப் பெருக்கு உடையவனாய நலங் கிள்ளியின் தம்பியே, 

வார்கோல் கொடுமர மறவர் பெரும – நீண்ட அம்பினையும் வளைத்த வில்லையுமுடைய போர்வீரர்களின் பெருமானே,

கடுமான் கைவண் தோன்றல் - மிக்க விரைந்து ஓடும் குதிரையை உன் கைவண்ணத்தால் அடக்கிச் செலுத்தும் தோன்றலே,

ஐயம் உடையேன் - உனது பிறப்பிலே ஐயப்பாடு கொள்கிறேன்.

ஆர்புனை தெரியல் முன்னோர் எல்லாம் - ஆத்தி மலர் மாலை அணிந்த உனது மூதாதையர்கள் எல்லாரும்,

பார்ப்பார் நோவன செய்யார் - பிராமணர்கள் மனம் நோக எதனையும் செய்ததில்லை,

மற்று இது நினக்கு நீர்த்தோ என – அப்படி இருக்க இப்பொழுது பிராமணனாய் தனக்கு சூதாடு காயால் ஊறு செய்தது) இது உனக்கு உன்னுடைய தகைமைக்கு ஏற்றதோ என,

வெறுப்பக் கூறி – (அரசனாகிய) நீ வெறுக்கும் படியாகிய வார்த்தைகளை நான் சொல்லி,

நின் யான் பிழைத்தது நோவாய் எனினும் - உன்னை நான் அவ்வாறு ஏசியதை எண்ணி நீ வருத்தப்பட்டு என்னை என்தவறுக்காக வெறுக்கமாட்டாய் என்றாலும்,

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – நீ தான் ஏதோ பிழை விட்டு விட்டதாக எண்ணி மிக்க நாணத்தோடு எதுவும் பேசாது இருந்து விட்டாயே,


தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் - தமக்குப் பிழை செய்தவர்களைப் பொறுத்தருளும் ஆண்மகனே,

இக்குடிப் பிறந்;தோர்க்கு எண்மை காணும் என - இச்சிறந்த குடியிற் பிறந்தவர்கள் எளிமையோடேயே இருப்பார்கள். காண்பீர்;களாக என,

காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின் - எல்லாராலும் நன்கு அறியப்பட்ட பராக்கிரமம் மிக்கவனே அதைக் காட்டி விட்டாய் அல்லவா,

யானே பிழைத்தனென் - உண்மையில் நான்தன் பிழை விட்டுவிட்டேன். என்னை மன்னிப்பாயாக,

மிக்கு வரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பல – மிகுந்து பெருகி வரும் நன்னிரைக் கொண்ட காவிரியாற்றின் கரையிலே பரந்திருக்கும் மணலின் எண்ணிக்கையிலும் பார்க்கப் பல்லாண்டுகள்,

நின்ஆயுள் சிறக்க – உனது ஆயுளானது சிறந்து நீடிப்பதாக,


(அரும்பொருள்) அலமரல் - துன்பத்தில் சுழலுதல், தெறு – வருத்தும், கனலி - சூரியன், கொட்கும் - சுற்றிச்சுழலும், அவிர் - ஒளிபொருந்திய, கொடும்சிறை – வளைந்த சிறகுகள், ஏறு – எறிதல் (இங்கு கொல்லுதல்) ஒரீஇ - விலகி, தபுதி –அழிவு, சீரை – துலாக்கோல், வரையா – எல்லைஇல்லா, நேரார் - பகைவர், வார்கோல் - நீண்டஅம்பு, கொடுமரம் - வளைந்த வில், கடுமான் - விரையும் குதிரை, ஆர் - ஆத்தி, தெரியல் - மாலை, நீர்த்தோ - இயல்புக்கு ஏற்றதோ, எண்மை – எளிமை, மொய்ம்ப – புயபலம் உடையானே, எக்கர் - கரை.

(பிரதான குறிப்பு) உலகம் இயங்குவதற்கும் உயிர்கள் வாழ்வதற்கும் பெருந்துணை புரிவது சூரியன். அதன் ஒளியினாலும் வெப்பத்தினாலும் நாம் அடையும் பயன் அளவில. யாவரும் அறிந்ததே ஞாயிற்றின் வெப்பமான வெப்ப ஒளி அலைகள் அதன் ஏழு நிறங்களில் செம்மைக்கு முன்னாலும் ஊதாவுக்கு அப்பாலும் உள்ளவை. மனிதக் காட்சிக்கு உட்படுவன அல்ல. ஊதாவுக்கு அப்பாலுள்ள (அல்றாவயலெற்) ஒளி அலைகள் பூமியைச் சேர்ந்தால் மனிதன் கொடிய நோய்க்கு ஆளாவான். அப்படி ஆகாது அதைத் தடுத்து நிறுத்துவது ஓசோன் படலம். இது தனித்த பிராணவாயு அணுக்களால் ஆயதென்றும் வேறு வாயுக்கள் கலந்தால் சீரழிந்து விடுமென்றும் இக்கால விஞ்ஞானிகள் கூறுவது நாம் அறிவோம். இப்படி ஒன்று உண்டென்பது சங்கச் சான்றோர் அறிந்ததொன்று மிக்க ஆற்றல் உள்ள இயற்கையன் நிலைப்பாடுகளை பூதம் என்றோ முனிவர் என்றோ அவர்கள் குறிப்பிடுவதுண்டு. இந்த ஓசோன் தான் 'நிலமிசை....... முனிவரும்' என இப்பாட்டில் குறிப்பிடப்பட்டது. 'விண்செலன் மரபின் ஐயர்' என முருகாற்றுப்படையும், 'சுடரொடு திரிதரு முனிவரும்' எனச் சிலம்பும் கூறின.

மேலும் இதைப்பற்றி படிக்கhttp://en.wikipedia.org/wiki/Ozone_depletion#Verification_of_observations

Friday, January 25, 2013

7 மாதக் குழந்தை ஆடும் "கங்னம் ஸ்டைல்" ஆட்டம்.

இக் குழந்தையின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்று. ஆனால் நம்பத்தான் வேண்டும்.கங்னம் ஸ்டைல் கொரிய பாட்டுக்கான ஆட்ட வீடியோ உலகெங்கும் youtube மூலம் பிரசித்த்மான ஒன்று. அதை கிரிக்கெட்  ஆட்டங்களின் போதுமேற்கிந்திய கிரிக்கெட் வீரர் Chris Gayle ஆடிக் காட்டி அதைப் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் வேறு அவர் சொல்லி விட  அந்தப் பாடல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தற்போது பிரபலமாகி அதனை 2,713,109 1,238,260,832 பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
அதனை இந்த 7 மாதக் குழந்தையும் பார்த்து  ஆடத் தொடங்கி விட்டது. 
இதோ அந்த வீடியோ.

 

இதோ அந்த ஒரிஜினல் வீடியோ Gangnam Style .

 

Thursday, January 24, 2013

இந்த படத்தின் பின்னாலுள்ள பெண் முகத்தைப் பாருங்கள்.

இன்டர்நெட்டில் இன்று மிகவும் பிரபலமான படம். பின்னாலுள்ள அந்த முகத்தில் தெரிவது ஆனந்தமா? பொறாமையா? ஏக்கமா? அண்மையில் தான மூன்று வருடமாகக் காதலித்த பெண்ணிடம்  அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் முழங்காலில் நின்று கொண்டு மோதிரத்தை கையில் ஏந்திய வண்ணம்  நீ என்னை மணமுடிப்பாயா என்று காதலன் காதலியிடம் கேட்டான்.


அந்த நிகழ்வை  அவனது நண்பனும் படமெடுத்துள்ளான். படம் வெளியான பின்தான் அந்த நிகழ்வை பின்னால் நின்ற அறிமுகமில்லாத பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்பதை அந்த ஜோடி பார்த்துள்ளனர்.
பிறகென்ன அந்தப் படம் இன்டர்நெட்டில் அவர்களால் போடப்பட்டது.

அவளது  முகபாவம்தான் "photobomping " என இன்று இன்டர்நெட்டைக் கலக்குகின்றது.
அது சரி அவளது முக பாவம் சொல்வது என்ன? ஆனந்தமா? பொறாமையா? ஏக்கமா?

Friday, January 18, 2013

உங்கள் மோட்டார் சைக்கிள் (ரூவீலர்) பெற்றோலைக் குடிக்கிறதா?

மொப்பெட், ஸ்கூட்டி  போன்றவற்றை சரியாக பராமரித்தால் குறைந்தளவு பெட்ரோலில் கூடிய அளவு தூரம் ஓடலாம். ரூவீலர் பராமரிக்க  முக்கியமான தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று, உங்கள் ரூவீலர்
4 ஸ்ற்றொக் என்ஜினா அல்லது 2 ஸ்ற்றொக் என்ஜினா என்பதை.

2 ஸ்ற்றொக் என்ஜினாயின் பெட்ரோல் தாங்கி நிரப்பும் பொழுதோ அல்லது தனியாக ஒரு சிறு பெட்டி ஒன்றினுள்ளோ  எண்ணை  விட வேண்டியிருக்கும்.

4 ஸ்ற்றொக் என்ஜினாயின் பெட்ரோல் மட்டுமே தாங்கியில்  நிரப்புவீர்கள்.

சரி விடயத்திற்கு வருவோம்.
உங்கள்  ரூவீலர் பெட்ரோல் ஆவியையும் சூழலில் இருந்து பெறப்படும் காற்றையும் சரியான அளவில் கலந்து ஓடும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. (1 கிராம்  எண்ணைக்கு  14.7 கிராம் காற்று தேவை.)
இதற்குத் தேவையான காற்று சுத்திகரிப்பியுனூடாகப் (Air Filter) பெறப்படுகிறது.

எனவே  காற்று சுத்திகரிப்பி (Air Filter) அடிக்கடி மாற்றவோ அல்லது சுத்திகரிக்கப்படவோ  வேண்டிய ஒன்று. இதனை செய்யத்தவறும் பட்சத்தில் என்ஜின் காற்றுக்குப் பதிலாக பெட்ரோலை பாவிக்கத் தொடங்கி விடும்.இதற்காக காற்று சுத்திகரிப்பியை (Air Filter) கழற்றி விட்டு ஓடாதீர்கள். இவ்வாறு செய்வதனால் காற்றிலுள்ள மண்  தூசு  போன்றவை இயந்திரத்துள் சென்று அதனைப் பளுதாக்கிவிடும்.
இதுதான்  பெட்ரோல் கூடுதலாகப் பாவிப்பதற்கான   முதலாவது காரணி.
அடிக்கடி பிரேக்(Break) பிடித்தல்,
அடிக்கடி கியர் (Gear)மாற்றுதல்
டாப் கியரில் (top gear) செல்லாமை,
உரிய அளவு காற்று டயர்களில் (Tyre) இல்லாமை
பிரேக் (Break Setting)  சரியான முறையில் பூட்டாமை.
(என்னேரமும் இது உராய்ந்தபடிஇருத்தல்) 
என்பனவும் உங்கள்  பெட்ரோல் பாவனையைக் கூட்டலாம்.

ஒரே லெவலில் (Level) பெட்ரோல் நிரப்பிப்  பாவியுங்கள்.
கூடுதலான அளவில் நிரப்பி பாவித்து விட்டு குறைந்த அளவில் நிரப்பி பாவிப்பீர்களாயின் மேலுள்ள இடத்தில் துருப்பிடித்து அது பெற்றோளுள் விழுந்து பின்னர் அது பெட்ரோல் பில்டர் (Filter) இனுள் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் நடுவழியில் நிற்க நேரிடும்.

மெக்கானிக்கிடம் செல்லும் பொது மறக்காமல்
1.காற்று சுத்திகரிப்பி (Air Filter)


2. பிரேக் Setting 
3. பெட்ரோல் பில்டர் (Filter)
என்பனவற்றை  சோதித்துக் கொள்ளுங்கள்.

அக்சலரேட்டர் கேபிள்,  க்ளட்ச் கேபிள் என்பனவற்றுக்கு அவர்களிடம் சொல்லி எண்ணெய் விட்டுகொள்ளுங்கள். அக்செலரேடர் கேபிள் இலகுவாக இருந்தால் திடீரென எஞ்சின் speed ஆவதைத் தடுக்கலாம்.


4 ஸ்ற்றொக் என்ஜினாயின் இடையிடை  உங்கள் சைலன்சருள்  சிறிதளவு என்ஜின் ஆயில் விட்டு என்ஜினை  சிறிது ஓட  விடவும். இதன்  மூலம்  உங்கள் சைலன்சர் உள்புறமாக துருப் பிடிப்பதை சிறிது தடுக்கலாம்.

2 ஸ்ற்றொக் என்ஜினாயின் என்ஜினுடன் சைலன்சரைப் பூட்டும் இடத்தில் கார்பன் வளர்ந்து  ரூவீலரின் ஓடும் சக்தி குறையும். ஏற்றங்களில் ஏறும்போது
வேகம்  மிகவும் குறையுமாயின் உடன் கார்பன் துப்பரவாக்கப் பட வேண்டும்.


 


Wednesday, January 16, 2013

வீட்டில் அதிகம் மின்சாரத்தை விழுங்கும் சாதனம் எது?

கரண்ட் பில்  வந்தவுடன் அதைப் பார்த்து தலையில் கை வைப்பவர்களுக்கு. கீழுள்ள சாதனங்கள்  வீட்டில் அதிக அளவில் மின்சாரத்தை பாவிக்கக்  கூடியவை. அவற்றை சரியான முறையில் பாவித்து உங்கள் மின் கட்டணத்தை நன்றாகக்  குறைக்க முடியும்.

1.A/C  குளிரூட்டி
2. மின் அடுப்பு
3. குளிர்சாதனப் பெட்டி
4. T V  தொலைக்காட்சி
5. கம்பியூட்டர்
6. சவுண்ட் சிஸ்டம்
7.ரங்க்ஸ்டன் பல்ப்
8. ரேடியோ


A/C  குளிரூட்டி - இதனைப்  பூட்ட முன்னர் வீடு இதற்கென திட்டமிடப் பட்டு கட்டப்பட வேண்டும். அங்கிருந்து காற்றும் குளிரும் வெளியே செல்லப் படாது. கதவுகள் யன்னல்கள் அதே போல கவனமாகச் செய்யப்பட வேண்டும். சூரியனின் நேர் தாக்கம் இந்த அறைக்கு இருக்கப்படாது. அல்லாத பட்டசத்தில் A/C  (குளிரூட்டி) நிற்காமல் தொடர்ந்து ஓடி உங்களுக்கு மாதந்தோறும் பெரிய பில்லைத்  தரமுடியும்.

மின் அடுப்பு (hot plate)
இது வேலை செய்யும் போது இதன் மேலுள்ள சட்டியையோ பானையை  மட்டுமல்லாமல் சுற்று சூழலுக்கும் இது சூட்டை இழக்கிறது. இதனால் இது வீட்டிலுள்ள மின் பாவனைப் பொருட்களில் அதிகம் நஷ்டத்தை பாவனையின்  போ து ஏற்படுத்தக் கூடிய ஒன்று . இதனை வீடுகளில் தவிர்ப்பது  நல்லது


குளிர்சாதனப் பெட்டி.
தேவையிலாத பொருட்களை இதனுள் வைத்திருப்பதும் அடிகடி கதவைத் திறப்பதுவும் இதனைத் தொடந்து ஓடவைத்து மின் கட்டணத்தைக் கூட வைக்கிறது. இதன் பின்புறம் கூலிங் தட்டு இருப்பின் அதனைத் தூசு தட்டி வைத்துக்கொள்ளவும். அதேபோல குளிர்சாதனப் பெட்டியை சுவரில் இருந்து ஒரு அடி முன்பாக வைக்கவும். இது சூட்டு கடத்தலை இலகுவாக்கி அதன் பாவனையை இலகுவாக்குகிறது.

T V  தொலைக்காட்சி.
இது சத்தம் கூடக் கூடக் கரண்டை கூடப் பாவிக்கும். எனவே குறைந்த அளவில் சத்தத்தை வைத்தல் குறைநத அளவில் மின்சாரத்தை பாவிக்கும்கம்பியூட்டர்
இதுவும் நன்றாக மின்சாரத்தைப் பாவிக்கும். தேவையிலாத நேரத்தில் மறக்காமல் நிறுத்தி விடவும். அல்லது மொனிட்டரை தேவையில்லாத வேளையில் தானாகவே ST/BY க்கு மாறி  மின்சாரத்தை சேமிக்க செய்யலாம்.


ரங்க்ஸ்டன் பல்ப.
இது அதிகளவு மின்சாரத்தை பாவிக்கக்  கூடிய ஒன்று.இதற்குப் பதிலாக டியூப் லைட் அல்லது CFL பல்ப. பாவிப்பது உங்கள்  மின்சார கட்டணத்தை வெகுவாகக் குறைக்கும்.

ரேடியோ
நீங்கள் எந்த அளவுக்கு சத்தம் வைத்தாலும் ரேடியோ ஒரேயளவு மின்சாரத்தையே பாவிக்கும்  ஆனால் tape recorder, CD player என்பன சத்தங்  கூடக் கூட அதிக அளவில்  மின்சாரத்தைப் பாவிக்கும்.
.

கோழிப் புத்தி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?


ஏன்னுடன் வேலை செய்பவர்களில் ஆபிரிக்காகாரன ஒருவனுமிருந்தான்.. மிக நல்லவன் நல்ல பகிடிகாரன். ஒரு நாள் மேலதிகாரி ஒருவர் வந்து தேவையில்லாமல் மிக அதிகமாக அவனிடம் கத்தினார். அவனோ மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான் ஏதோ ஆப்பிரிக்க மொழியில் சொல்லிவிட்டு பழையபடி வேலை செய்யத் தொடங்கினான். சிறிது நேரம் அவனது கோபம் அடங்க விட்டு மெதுவாக அவனிடம் என்னநடந்தது என்னக் கேட்டேன். மேலதிகாரி போன பக்கம் பார்த்து 'சிக்கன் மைண்டட் மான்'; என்றான்

இப்போ எனக்கு நடந்த பிரச்சனை பற்றி கேட்ட கேள்வி மேலான ஆவல் போய் கோழிப் புத்தி பத்தி கேட்க வேணும் போல இருந்தது.
மெதுவாக கோழிப் புத்தி பற்றி கேட்டேன். அது என்னடாப்பா  அந்த கோழிப் புத்தி?

மிக ஆறுதலாக என்னைப் பார்த்தான் பின்னர் நடந்ததை நினைத்து வாய் விட்டுச ;சிரித்ததான். பின்னர் சொன்னான் இந்த மேலாளருக்கு எவ்வளவோ வேலைகள் அவர் கண் முன்னால் உள்ளன. அதெல்லாம் விட்டு விட்டு என்னுடைய சிறிய பிழையை பெரிதாக பார்க்கிறார், கத்துகிறார். அதற்குத்தான் என்றான்.

இப்ப பார் கோழிக்கு முன்னால் பெரிய மலையாக அரிசி இருந்தாலும் அது அதனை நேராக கொத்தி சாப்பிடாது ஆனால் அதை கிளறிக் கிளறித்தான் சாப்பிடும் என்றான். நான் வியப்பில் ஆழ்ந்தேன். உண்மையும் அதுதானே? மலையளவு இருந்தாலும்
கோழி அதனைக்  கிளறிக் கிளறித்தானே  சாப்பிடும்.
அந்த மேலதிகாரி முன்னாலுள்ள பெரிய பிரச்சனைகளை காணத்தெரியாமல் எங்கேயோ கிடக்கும் சிறிய பிரச்சனைளைக் கிளறி எடுக்கிறாரே என்பது தான் அவன் கருத்து.

வேண்டுமானால் ஒரு மூடை அரிசியை நிலத்தில் கொட்டிவிட்டு ஒரு கோழியையும் விட்டுப் பாருங்க அது எப்படி சாப்பிடுகிறது என.

பக்கத்திலிருந்த தமிழ் நாட்டுககரரிடம் அவன் சொல்லுகிற ஆபிரிக்க முன்னுதாரணம் நன்றாய் இருக்கிறதுதானே என்றேன். அதற்கு அவர் இவன் சொல்வது நல்லாய் தான் இருகிறது. ஆனால் இவன் மடையன். கோழி கிளறி சாப்பிடுகிறதோ அல்லது சும்மா சாப்பிடுகிறதோ, அது சாப்பிட்ட அரிசி தன் வயிற்றுக்குளதானே; செல்கிறது என்றாரே பார்க்கலாம். 


கோழிகள் புத்தி கூர்மையானவை. இதோ அதற்கான ஆதாரம்.


 

அமெரிக்க வீஸா லொத்தரில் இந்தியர்களுக்கு ஏன் அனுமதியில்லை?

Green card Lottery எனவும் DV Lottery எனவும் அழைக்கப்படும் அமெரிக்க குடியேற்ற வீஸாக்கள் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 50.000 பேருக்கு கம்பியூட்டர் வொத்தர் மூலம் வழங்கப்படுகிறன. இருப்பினும் இந்தியா. பாகிஸ்தான் மற்றும் வேறு சிலநாடுகளையும் சேர்ந்தோருக்கு இந்த லொத்தரில் பங்கு பற்ற அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளிப்பதில்லை.
ஏன்?
இந்த அமெரிக்க வீஸா லொத்தர் (கிறீன் காட் லொத்தர் எனவும் அழைக்கப்படும்.) ஆனது அமெரிக்காவில் வசிக்கும் பல்லின மக்களினதும் அளவைச் சமப்படுத்தும் வகையில் அங்கு குறைவாகவுள்ள நாட்டு மக்களைக் குடியேற்றும் வகையில் அமெரிக்க அரசினால் இது நடாத்தப்படுகின்றது.
எனவே அமெரிக்க அரசு கடந்த 5 வருடங்களுக்குள் 50,000 க்குக் கூடுதலான அளவில் தமது நாட்டுக் குடியேற்றவாசிகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய நாட்டில் பிறந்தவர்களை இந்தப்போட்டியில் பங்கு பற்ற அனுமதி அளிக்கவில்லை. அவ்வகையில் இந்திய நாட்டில் பிறந்தவர்களும் வேறு சிலநாட்டில் பிறந்தவர்களும் இந்த அமெரிக்க வீஸா லொத்தரில் பங்குபெற அனுமதி அளிக்கப்படவில்லை.எனினும் ஒரு இந்தியரின் பிறப்பு அமெரிக்க குடியேற்ற வீஸா வொத்தரில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்ட நாட்டில் நடைபெற்றிருப்பின் (இலங்கை, ஆபிரிக்க நாடுகளிலொன்றில்) அவர் இந்தப்போட்டியில் பங்கேற்கமுடியும்.
ஒரு இந்தியர் அமெரிக்க குடியேற்ற வீஸா வொத்தரில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்ட நாட்டில் பிறந்த ஒருவரை மணமுடித்திருப்பின் துணையின் நாட்டினைக் காட்டி இந்த அமெரிக்க வீஸா லொத்தரில் பங்கு பற்ற முடியும். லொத்தரில் வெற்றி பெற்று வீஸாக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் தனியாக அங்கு செல்ல முடியாது கட்டாயம் அவரது துணையுடனேயே செல்லவேண்டும்.

இந்த லொத்தரில் வைத்திருக்கும் பாஸ்போடடோ அல்லது குடியேற்ற அனுமதியோ செல்லுபடியாகாது. உங்கள் பிறப்பு நிகழ்ந்த நாடே இந்த லொத்தரில் பங்கு பற்ற அனுமதியளிக்கமுடியும்.

மேலதிக விபரங்களுக்கு http://www.bbsnetting.com/
 

Tuesday, January 15, 2013

பேஸ்புக் அங்கத்தவரா? கட்டாயம் இதைப் படியுங்கள்.

இன்று பேஸ்புக் புதிய தேடும் முறை ஒன்றை அறிமுகம்  செய்துள்ளது. இது பேஸ்புக்கில்  பதிவு செய்துள்ள அங்கத்தவர்களையும் அவர்களது படங்கள் விருப்பங்கள், பொழுது போக்குகள், அவர்கள் சென்ற  இடங்கள் என்பனவற்றை காட்டகூடிய கட்டமைப்பைக் கொண்டது.

எனவே நீங்கள் குடும்பமாக எங்காவது செல்ல விரும்பினாலோ, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல விரும்பினாலோ அதனை பேஸ்புக்கில்  பதிவு செய்யாதீர்கள். யாராவது கள்வர்களோ திருடர்களோ "விடுமுறையில் வீட்டை விட்டு விடுமுறையில் சென்றுள்ளோர்" என தேடும் பட்சத்தில் உங்களது பெயரைக் காண்பிக்கலாம்.
வெளிநாடுகளில் நீங்கள் வசிப்பீர்களாயின் சிமார்ட்போன் மூலம் உங்கள் வீட்டைக் கண்டுபிடித்து களவெடுப்பது அவர்களுக்கு இக இலகுவாகலாம். 

ஏற்கனவே வெளிநாடுகளில் சாதாரண தேடும் முறையை வைத்தே கள்வர்கள் ஆட்களில்லாத வீடுகளை கண்டுபிடிதது  கொள்ளை அடிததுச் சென்றுள்ளனர். பேஸ்புக் இதனை மேலு இலகுவாக்கிக் கொடுக்குமோ தெரியவில்லை.


அதேபோல உங்கள் பிரேத்தியக படங்களை தரவேற்றம் செய்யும் போதும் கவனமாயிருங்கள் . ஏனெனில் அவையும் எவராவது படங்களைத் தேடும்போது கண்பிக்கப்படலாம்.
1. வீட்டிலுள எல்லோருமாக எங்காவது உல்லாசப் பயணம் செல்வீர்களாயின் அதை பேஸ்புக் இல் போடாதீர்கள்.
2. திருமணங்கள் வீட்டில் நடந்தால் சரி அல்லது அந்த இன்விட்டேசனை உங்கள் பக்கத்தில் போடாதீர்கள்.
3. வெளிநாட்டில் வெளியூரில் நிற்பதாக ஸ்டேடஸ் போடாதீர்கள்.
4. அடிக்கடி உங்கள் பர்சனல் ப்ரைவசி செற்றிங்கை போய்ப் பாருங்கள் ஏனெனில்  பேஸ்புக் அடிக்கடி இதில் குளறுபடி செய்வதற்கு மிகவும் பிரசித்தமானது.

ஆகமொத்தம் பேஸ்புக்கில்  யாரும் செய்யும் பதிவுகளை  மட்டும் பார்வையிட்டு விட்டு நல்ல பிள்ளையாக இருப்பது மிக நல்லது.

Monday, January 14, 2013

இனிய நெஞ்சங்களுக்கு எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய நெஞ்சங்களுக்கு எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.
எனது எழுத்தை ரசிப்பவர்களுக்கும்,
என்னை நம்பி எனது பக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும்,
என்னக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கும் 
எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கும்
மீண்டும் மீண்டும் தலை வணங்கி
எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

வழமை போல டிவி முன்னிருந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டுக் கொண்டு வீட்டில் செய்த பொங்கல் பலகாரங்களையும் பக்கத்து வீட்டிலிருந்து வந்தவைகளையும் வயிறார சாப்பிட்டு விட்டு என்ன செய்வது என்று முழிக்காமல்
கம்பியூற்றரையும்  நிறுத்திவைத்த்விட்டு
சந்தோசமாக அம்மா அப்பவையும், உறவினர்களையும், நண்பர்களையும் நேரில சென்று பார்வையிடுங்கள். உங்கள் அன்பைத் தெரிவியுங்கள்.

இதைவிட இந்நாளை சிறப்பாக கொண்டாட வேறு வழியிருந்தால் என்னக்கு சொல்லுங்களேன். நன்றி.


Sunday, January 13, 2013

ரம்போ ஸ்டைலில் நாய்.சிறந்த வீடியோகளில் ஒன்று

VW கார் விளம்பரம்.16,000,000 பேர் பார்வையிட்டுளனர்.நாயின் கவலையும், உடற்பயிற்சி முறைகளும் அதனது வெற்றியும் மிக தத்ரூபமாக  மிக குறுகிய நேரத்துள் காட்டும் வகையில் படமாக்கப்பட்டு விளம்பரமாக அமெரிக்காவில் சென்ற வருடம் நடைபெற்ற சுப்பர் பவுல் இடைவேளை நேரத்தில் காண்பிக்கப்பட்டது. இது  மிகப் பெரிய வரவேற்பை அவ்வேளையிலேயே   பெற்ற ஒன்று. இன்றும் இது தொடர்ந்து யூரீயூப்பில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியே ஓடி வரும்  VW காருடன் ஓடுவதற்காக இந்த நாய் வீட்டுக் கதவில் செய்யப்பட்டுள்ள சிறிய கதவினூடாக வெளியே செல்ல முயற்சித்த வேளையில் அதனது பருத்த உடலுடன்  அதனூடாக நுழைய முடியவில்லை.
பின்னர் அது அதனூடாக செல்வதற்காக எவ்வாறு ரம்போ (Rambo movie Style) ஸ்டைலில் உடற்பயிற்சி செய்கிறது என்று பாருங்கள்.

இதோ அந்த வீடியோ.


Saturday, January 12, 2013

அந்தரத்தில் இருந்து அதிசயம் காட்டி உழைப்பவர்

ஒல்லாந்தைச் சேர்ந்தவர் இந்திய மந்திரவித்தை காண்பித்து கோடிக் கணக்கில் உழைக்கின்றார். நம்ம ஊரு ஸ்வாமிமாரும் இதைச்  செய்து நூற்றுக்கணக்கில் மட்டுமே  சம்பாதிக்க முடிந்துள்ளது.


ஒல்லாந்தைச் சேர்ந்த (நிஜப்பெயர் Wouter Bijdendijk) ரமணன் என்ற பெயர் சூடிக்கொண்டவ்ர் ஐரோப்பிய நகரங்கள் டிவி நிகழ்ச்சிகள் வெள்ளைமாளிகை முன்பாக என பலஇடங்களில் இதனைச் செய்துகாட்டி பிரபலமாகினார்.

அத்துடன் விட்டாரா பல முன்னணி நிறுவனங்களுக்காக மிக அழகான தோற்றத்தில் தனது மந்திர வித்தையை விளம்பரமாக செய்து கோடிக் கணக்கில் உழைக்கின்றார்.இது எப்படி சாத்தியமானது என இங்கு காண்பிக்கிறார்கள்.


இது எப்படி சாத்தியமானது என இங்கு காண்பிக்கிறார்கள்.இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளது.எப்படி"நா"எழுத்தை என் பதிவு fevicon ஆக்கினேன்?

எனது பதிவுகளின்  பெயரின் முன்னால் காண்பிக்கப்படும்  "B" என்ற Blogger லோகோவை ( fevicon) எப்படி "நா - " என்று மாற்றினேன்? நீங்களும் உங்களுக்கு விருப்பமான எழுத்தையோ படத்தையோ உங்களது பதிவுகளின்  பெயரின் முன்னால் கண்பிக்க விரும்புகிறீர்களா?

முதலில் இந்த இணையத் தளத்துக்கு செல்லுங்கள் http://www.favicon.cc/
அங்கு உங்களுக்கு விருப்பமான ஒரு படத்தையோ எழுத்தையோ தரப்பட்டுள்ள  Tool  மூலம் தயாரியுங்கள் அல்லது உங்ககளுக்கு விருப்பமான படமொன்றை Upload செய்யுங்கள்.
பின் அதனை download செய்து உங்கள் கம்பியுட்டரில் சேமிததுக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் Blogger கணக்கில் நுழைந்து Layout பகுதிக்கு சென்றால் இடது மேன்மூலையில்  Favicon Edit என்பது காணப்படும். Edit ஐ அழுத்தி அங்கு காணப்படும் இடத்தில் உங்கள் படம்  இருக்கும் இடத்தை கொடுத்து upload செய்துவிட்டு save arrangement ஐயும் கிளிக் செய்யவும்.
அந்தப் படம் உடனே வராது. 3 - 4 மணித்தியாலங்களின் பின் அது உங்கள் பதிவின் முன்னால் தோன்றும். அனிமேஷன் போடவேண்டாம், அது வேலை செய்யது.
படத்தின் அளவு 16 x 16 பிக்ஸ்சல்களாகும்.
பைல் பெயர்  fevicon
ஏதாவது தேவையெனின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

                                                                  

Friday, January 11, 2013

சாரதி இல்லாத கார் Video. 11,000,000 பேர் பார்த்துள்ளனர்.

சாரதி இல்லாமல் ஓடும்  இந்தக் கார் பலரை பயப்படுத்தவும், திகிலடயவும் செயதுள்ளது. இவர் இந்த காரை பல இடங்களில் உள்ள  தயாரித்த  உணவுகளை  கார்களில் வருவோர்க்கு  விற்பனை செய்யும் நிலையங்களில் நிறுத்தி தனது விளையாட்டைக் கட்டியுள்ளார். 

மேலும் இந்த வீடியோவை எடுத்தவர் அதனை எப்படி எடுத்தது என்றும் உங்களுக்கு செய்து காட்டியுள்ளார். இதுவரை இந்த வீடியோவை 11,000,000 மேற்பட்டோர் youtube இணையத் தளத்தில் பார்வையிட்டுள்ளனர்.
இதனை தயாரித்தவர் பெயர் ரகாத் என்பதாகும். இவரது பொழுது போக்கும் இதுபோன்ற வீடியோ எடுப்பதுதான். அவரது youtube பகுதியில் இதுபோன்ற பல வியக்க வைக்கும் வீடியோயோக்களைப் பார்வையிடலாம்.இதோ அந்த வீடியோ. பார்த்து ரசியுங்கள்.
பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாம்பே ஜெயஸ்ரீ  Life of Pi என்ற ஆங்கில படத்தில் தானே எழுதிப்  பாடிய டைட்டில் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைகப்பட்டுள்ளது. அவருக்கு பரிசு கிடைக்குதோ இல்லையோ நீங்கள் இப் பாடல் தமிழ் என்னும்போது சந்தோசப் படுவீர்கள்தானே?
இசை அமைப்பு மைக்கல் டான - Mychael Danna - இவரும் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் சரியாக நடந்தால் ஜனவரி 24இல் அமெரிக்க பரிசளிப்பு விழாவில் இவர்களைப் பார்க்க முடியும்.
இதோ அந்தப்பாடல்


Thursday, January 10, 2013

கருணா கூரையில் - கடவுள்?


கருணா கடவுள்  பக்தி மிகுந்தவன்.  தினமும் குளித்து 3 முறை  ஆசாடமாக பூசை செய்யத் தவறாதவன், எடுக்காத காவடியா படிக்காத தோத்திரங்களா?
அவனுக்குக் கடவுள் தான் எல்லாமே.
கடவுளும் எல்லாவற்றையும் அவனக்கு மறக்காமல் கொடுத்து வந்தார் .

ஊரில் ஒரு பெரிய வெள்ளம் வந்து ஊரிலுள்ள எல்லோருமே தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு புறப்பட்டு செல்லத் தொடங்கினர். அவ் வேலை சிலர் வந்து  கருணாவையும் தம்முடன் வரும் படி அழைத்தனர்.

 கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.

பின்னர் வெள்ளம்  கூடுவதைக்  கண்ட  பொலிஸ் அவருக்கு ஒரு டிராக் வண்டியை அனுப்பி அதில் அவரை வரச்சொல்லி அழைத்தனர்.
கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மீண்டும் மறுத்து விட்டார்.

வெள்ளம் மிகவும் கூடி கருணா வீட்டுக் கூரையில் தனது உயிரைக்காக்க ஏறியிருந்தார்.
கடற்படையின் படகில்  வந்து அவரை வரும்படி அழைத்தனர். அப்போதும் கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.

பின்னர் விமானப்படையின் ஹெலிகாப்டர் வந்து அவரைக் காப்பாற்ற முன்வந்தனர். அப்போதும் கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.
ஆக மொத்தம் அன்றைய பொழுதில்  கருணா வெள்ளத்தில் மூழ்கி  இறைவனடி சேர்ந்தார்.
அங்கே போனவர் சும்மா இருக்காமல்  கடவுளைத் தேடிபோய் சண்டையிடத் தொடங்கினர்.
கடவுளே உன்னை நான் எவ்வளவு தூரம் நம்பினேன் நீ என்னை வந்து கப்பற்றுவாய்  என. ஆனால்  நீயோ என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவிலலையே. ஏன்  நான் உன் பக்தன் இல்லையா?

அதற்கு கடவுள் மடையா  உ ன்னைக் காப்பாற்ற பொலிஸ் டிராக், கடற்படையின் படகு, விமானப்படையின் ஹெலிகாப்டர் எல்லாவற்றிலும் வந்தனே ஏன் நீ அவ்வேளை என்னுடன் வரவில்லை என்றாரே பார்க்கலாம்.

ஆப்ரிக்க தோசையா தமிழ்நாட்டு தோசையா முதலில் தோன்றியது ?

நம்ம ஊரு  தோசையா ஆப்ரிக்க தோசையா முதலில் தோன்றியது என இன்று ஆராய்ச்சி செய்வோமா?
நாம அரிசியையும்   உளுந்தையும்  சேர்த்து  அரைத்து   புளிக்க வைத்து மறுநாள் தோசை சுடுறகிறோம்.
அபிசீனியா என்று  சரித்திர காலத்தில் அழைக்கப்பட்டு தற்போது எதியோப்பியா என்று அழைக்கப்படும் ஆப்ரிக்க கண்ட நாட்டில் எமது தோசைக்கு சமனான உணவு ஒன்று உள்ளது. அதன் பெயா "இஞ்செர" எனப்படும்.
இது உளுந்திலிருந்து செய்யப் படுவதில்லை பதிலாக  teff flour டெப் மாவு என்பதிலிருந்து செய்யப் படுகிறது. இதுவும் தோசை மாவு போல புளிக்கவைத்து பின் தோசை போலவே சுடப்படுகிறது. இந்த தானியம் வெள்ளை, கருப்பு, சிவப்பு எனக் கிடைகிறது எனவே தயாரிக்கப்படும்  "இஞ்செர" வும் இக் கலர்களில் கிடைக்கின்றது.
தொட்டுக்கொண்டு சாப்பிட சட்ட்னி சாம்பார் கிடையாது பதிலாக காரமான உறைப்பு கறிகளை  தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
 இவர்களும் நம்மைப் போல வித விதமான உணவு வகைகளை சமைப்பதில் படு கில்லாடிகள்.

"இஞ்செர"

நம்மூர்  பொண்ணுங்க இல்லிங்க  இவங்க  எதியோப்பிய பொண்ணுங்க..இது நம்ப  ஊரு தோசைங்கோ - நெட்ல சுட்டதுதாங்கோ.


Tuesday, January 8, 2013

கந்தசாமியும் கப்பலில் வேலையும்.

கந்தசாமி ஊர்ல சைக்கிள் கடை வைத்துக் கொண்டு தானும் தன்பாடுமாக வெற்றிலை வாயும் பிறிஸ்டல் சிகரட்டுமாக இருந்தவன். மனிசியின் ஆய்க்கினை தாங்காமல் கப்பல் வேலைக்கென ஏஜன்ரிடம் காசு கட்டினான்.

கந்தசாமியின் மனிசி எந்நேரமும் நகைகளையெல்லாம் அவனுக்கு முன் நீட்டி பிடித்தபடி இந்தா பாரப்பா மோகன் கப்பல்ல உழைச்சு லட்ச்ச லட்ச்சமா கொண்டுவந்து கொட்டுறான். நீ இப்பவே போய்  ஏஜன்ரிடம் காசு கட்டு இந்தா  இந்த நகைகளை அடவு வை அல்லது வில் என்னக்கு நகை பிரச்சினை இல்லை. நீ நல்ல உழைத்து கொண்டு வரவேண்டும் அது தான் என்னக்கு  தேவை.


ஒருமாதிரி கப்பல் வேலைக்கும் கந்தசாமி வந்து சேந்திட்டான் . பாஷைப் பிரச்சனை. இங்கிலீஷ் தெரியாது. தமிழ் ஆக்கள் இருந்தபடியால் கும்பல்ல கோவிந்தா எல்லோரடையும் சேர்ந்து கூட்டல் கழுவல் என்ன வேலை போகும்.
வீடுச்சாப்பாடும் இல்லை மனிசியும் இல்லை. மனிசியின் போட்டோ முன்னால் இருந்து திட்டுவது இரவில் அடுத்த அறைக்காரனை தூக்கமில்லால் பண்ணிவிடும். காலையில் சாப்பிடபோகும்போது  கந்தசாமிக்கு நல்ல மங்களம்  விழும்.
அண்ணா கோவிக்காதே எண்டு காலில்  விழாக்குறையாக சமாளித்து விடுவான்.
ஒருநாள் கப்பலில் வேலை செய்த ஒருவர் காண்ட்ராக் முடிந்து வீடு சென்று விட்டார். புதிதாக வருபவருக்கு அறை சுத்தம் பண்ணும் பணி கந்தசாமிக்கு கிடைத்தது. எல்லாவற்றையும் அழகாக சுத்தம் செய்து விட்டு பழைய கடலோடி விட்டு சென்ற  சாமான்கள்  சம்பூ, சோப்பு செருப்பு  என்ன எல்லாவற்றையும் கந்தசாமி தனது அறைக்கு கொண்டு போய்விட்டான்.

 கந்தசாமிக்கு இங்கிலீஷ் தெரியாது தானே கொண்டுபோன சாமான்களை இரவு ஒவ்வொன்றாக பாவித்து பார்த்துள்ளான்.

காலையில் வந்து சொன்னான் தனக்கு ஒரு டூத் பேஸ்ட் கிடைத்துள்ளதாகவும்  அதனைப் போட்டு பல் விளக்கினால் நுரை நுரயாகவே வருவதாகவும் கழுவவே முடியவில்லை என்றும் சொன்னான்.
அதை பார்ப்போம்  எண்டு போய்ப் பார்த்தால் அது  டூத் பேஸ்ட் இல்லை ஷேவிங் க்ரீம். அதை அவனுக்கு விளங்கபடுத்தி சொன்னபோது அண்ணை இதை ஆரிட்டையும் சொல்லிப்போடதேங்கோ என்று  கெஞ்சினான் . சரி பிழைச்சுப் போ எண்ண்டு விட்டாச்சு.

இன்னொருமுறை கந்தசாமியும் கப்டனும் பேசுவதை கேட்க முடிந்தது.
கப்டன் இங்கிலீஷ்ல்  சொன்னான் இதை  முதலில் மூடு
கந்தசாமி ஓகே சார் .

கப்டன் மீளவும் இங்கிலீஷ்ல்  சொன்னான் இதை கழுவி வை
கந்தசாமி ஓகே சார் .
இப்படியாக கப்டன் 4 - 5 வேலை சொன்னான்  கந்தசாமியும் எல்லாத்துக்கும்  ஓகே சார், ஓகே சார் என்று சொன்னான்.


அடே கந்தசாமி கப்டன் இங்கிலீஷ்ல சொன்னதெல்லாத்துக்கும் ஓகே சார், ஓகே சார் எண்டியெ உனக்கு இங்கிலீஷ் விளங்குமாடப்பா?
நீங்கதான் பக்கத்தில நிண்டு கேட்டனீங்க தானே அதுதான் ஓகே சொன்னனான.
என்னென்ன வேலை அவன் சொனவன் அண்ணை எண்டானே பார்க்கலாம்

கடைசியாக கிடைத்த செய்தியின் படி மோட்டார் சைக்கிள் ஓடத் தெரியாத கந்தசாமி கப்பல் காசில் புதிதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி முதன் முதலாக அதில் கோவிலுக்கு போவோமென்று சொல்லி மனிசியையும்  பினால் ஏற்றிக்கொண்டு  அதனை  ஸ்டார்ட் பண்ணி நேராக ஓடிக் கொண்டுபோய் லைட் போஸ்டில் அடித்து முழங்கால்  சில்லு உடைந்து வைத்தியசாலையில் இருப்பதாக கேள்விப்பட்டோம்.

Monday, January 7, 2013

காமெடி கதைகள் 2

சில வருடங்களுக்கு முன்னர் ரேடியோவில் கேட்டது. சத்தியமாக சொல்லுகிறேன் இது என்னுடைய கதையல்ல. உரிமையாளர் இருப்பின் உரிமை கோரலாம்.
ஓரு ஊருக்கு நம்ப கதாநாயகன் படப்பிடிப்பு சம்பந்தமாகச் சென்றிருந்தார். அவ்வூர் பெரியமனிதர் ஒருவர் அவருக்கு விருந்து வைக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். மறுக்க முடியாமல் கதாநாயகனும் குறித்த நேரத்தில் பெரியமனிதர் வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேர உரையாடலின் பின் வீட்டுக்காரர் தட்டிலா வாழையிலையிலா உணவருந்த விரும்புகிறீர்களெனக் கேட்டார். நம்ப கதாநாயகனும் பெரிதாகத் தலையாட்டியபடி  வாழை இலையிலேயே சாப்பிட்டுருவோமேன்னாரு.


இதைக்கேட்டதும் வீட்டுக்காரர் முகம் வாடிவிட்டது. தம்பி இருந்த வாழை இலையெல்லாம் முன்னாடி வந்தவங்க பாவிச்சிட்டாங்க. இருந்தாலும் அதுல நல்ல ஒண்ண எடுத்து கழுவிக் கொண்டாரேன்னார். நம்பாளு பாஞ்சு விழுந்து நா தட்டிலேயே சாப்பிட்டுக்கிறேன்னு குழறத் தொடங்கினார்.

ஒருமாதிரி உணவருந்தி முடிந்த பின்னர் பெரியமனிதருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார். நம்ப கதாநாயகன் வாசலருகே சென்றிருக்கமாட்டார் மீள வந்து 'சரி ஐயா, நான் வரும் போதும் சரி, போகும் போதும் சரி, உங்க நாய் வாலாட்டிக் கிட்டிருந்தது. ஆனா நான் சாப்பிடும்போது மட்டும் அது ஏன் என்னப்பாத்து உறுமிக்கிட்டேயிருந்திச்சு என்றார்.'
ஓ அதுவா, நம்ம டாமிக்கு யாராச்சும் அதோட தட்டில சாப்பிட்டா அவ்வளவா பிடிக்காது. நீ;ங்க அதோட தட்டில சாப்பிட்டிங்கள்லா, அதுக்குத்தான் அது உறுமிக்கிட்டு இருந்திச்சு என்றார்.

நம்ப கதாநாயகன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து அங்கிருந்த திண்ணையில அமர்ந்திருந்த பொக்குவாய்ப் பாட்டிக்கு அருகிலமர்ந்தார்.
பாட்டிக்கு அருகில் வெற்றிலைப் பெட்டியைக் கண்டதும் இவருக்கு வெற்றிலை போட ஆசை வந்து பாட்டி ஒரு வாய் வெற்றிலை கொடேன் என்றார்.

இந்தாப்பா ஒரு முழுப்பாக்கும் ஒரேயொரு வெற்றிலையும் தான் இருக்கிறது எனக்கொடுத்தாள்.

நம்ப கதாநாயகனும் ஒரே கடியில் பாக்கை உடைத்து வெற்றிலையுடன் மெல்லத் தொடங்கினார். இதைப் பார்த்த பாட்டி அடேங்கப்பா உன் பல்லுங்க சரியான ஸ்ராங்கு. நானும் ஒரு வாரமா இந்தப் பாக்கை உடைக்கணுமுன்னு வாயுக்குள்ளேயே வைச்சிருந்து எவ்வளவோ முயற்சி  செஞ்சேன். ஓண்ணுமே சரிவரல்ல.


பாட்டி ஒரு வாரமா இந்தப் பாக்கை வாயுக்குள்ளேயே வைச்சிருந்தியா எனக்கேட்டார் நம்ப கதாநாயகன்.
ஆமா. ஏன் கசக்குதா என்று பாட்டி கேட்டாள்.

அன்னிக்கு அந்த வீட்டைவிட்டு ஓடத்தொடங்கிய நம்ப கதாநாயகனை யாரும் கண்டதாகத் தகவல் இல்லீங்க.