Wednesday, February 27, 2013

கயிறு பாம்பு போல எழுந்து தடியாக மாறுகிறது.

பின்னர் அதில் ஒரு சிறுவன் ஏறுகிறான். அதன் பின் அது மீளவும் கயிறாக கீழே பொததென விழுகிறது. வீடியோவைப் பாருங்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


Tuesday, February 26, 2013

ஆஸ்கார் விருது சரியான நடிகைக்கே கிடைத்துள்ளது .

பரிசுக்கு மேடைஏறும்போது  தடுக்கி விழுந்தார். தளராமல் மேடையில் பரிசுடன் நின்று  நான் கீழே  விழுந்த படியால் தானே எல்லோரும் எழுந்து நிற்கிறீர்கள் என சிரித்தபடி சொன்னாரே பார்க்கலாம்.சிரிப்புக்கும் இளமைக்கும் பெயர் போன 21 வயது ஜெனிபர் லோறன்ஸ் தனது முதல் ஆஸ்கார் விருதை பெற்றபின் வழங்கும் பேட்டியை பாருங்கள்.
அந்த பேட்டியை வழங்கும்போது அதை வந்து குழப்பும் 75 வயது நடிகர்  ஜாக் நிக்கல்சனை அவர் கையாளும் விதத்தையும் முகபாவங்களையும் பாருங்கள்.

கடைசியாக தான்  அந்த பெரிய நடிகர்கள் நடிகைகள் பட்டியலில் இடப்பெற்று விட்டதை  ஹாய் ஜாக், ஹாய் ஜெனிபர் சுகமா எனககேட்டு தனது பேட்டியை ஜாலியாக முடிக்கிறார்.

விழுதல்.

பேட்டி( முகபாவங்களைப் பாருங்கள்)
Monday, February 25, 2013

மனிதன் ஆற்றின்மேல் நடக்கும் வீடியோ.

இது இந்துவாதிகளை மிக சந்தோசப்படுத்த, பாருங்கள் எங்கள் யோகிகள் சொன்னது சரிதானேயென்றனர். உண்மையில் நடந்தவர் ஒரு மந்திரவாதி. தனது வரவிருக்கும் டிவி ஷோவிற்கு இதனை விளம்பரமாகப் பயன்படுத்தியுள்ளார். இப்போ உலகம் முழுவதும் இவன் எப்படி நடந்தான் என மண்டையை போட்டு உடைத்த்படியுள்ளனர்.
இது சம்பந்தமாக பலர் இணையத்தளங்களில்  எழுதிக் கொண்டுமுள்ளனர்.
இதோ அந்த வீடியோ.


 இதோ அதற்கான விளக்கம்.
Sunday, February 24, 2013

நீரிழிவினை கட்டுப்படுத்தும் மூலிகை உணவுகள்.

நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற் பயிற்சியின்மையினாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் மூலிகைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள்
கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சளானது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.
நாவல்
நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.
பாகற்காய்
பாகல் இலை, காய், விதைகளில் 'தாவர இன்சுலின்' என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50மூ வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.
வெந்தயம்
வெந்தையத்தில் காணப்படும் 'ட்ரைகோனெல்லின்' அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25மூ அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.
ஆவாரை
ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.
சிறுகுறிஞ்சான்
'சர்க்கரைக் கொல்லி'யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குகிறது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான ர்.னு.டு. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.

கடலழிஞ்சில்

பொன் குறண்டி' எனப்படும் இம் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயர்களுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக 'கடலழிஞ்சில்' நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சீந்தில்

நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான 'இம்யூனோகுளோபுலின் - ஜி' - ன் அளவை, சீந்தில் அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இது சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.

வில்வம்

வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி மூலிகைகள்

மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய சிறப்புகள் உடைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வில்வம் மாத்திரை, சீந்தில் மாத்திரை, கடலழிஞ்சில் மாத்திரை, நாவல்மாத்திரை, நீரிழிவு சூரணம், ஆவாரை, குடிநீர், திரிபலா கற்பம், சிறுகுறிஞ்சான் சூரணம் போன்ற பல மருந்துகளில் ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம். மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்
 

Saturday, February 23, 2013

கலைத்தேன், கடித்தேன், அவன் ருசியாகவிருந்தான்.

 போலீஸ் நாயின்  வாக்குமூலம் அதன் கைஎழுத்துக்குப் பதிலாக கால் விரல் அடையளங்களுடன் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திலுள  நீதி மன்ற வேண்டுகோளை அடுத்தே இது நிகழ்ந்துள்ளது.
நீதி மன்றம் இதில் சம்பந்த பட்டுள்ளது நாயல்ல நிஜ போலீஸ் என நினைத்து அதன் வாக்கு மூலத்தை தரும்படி மீள மீள கேட்டபடியால் போலீஸ் நாயின் காப்பாளர் .பொறுக்க முடியாமல் இப்படியான சாட்சியமொன்றை நாய் தந்தது போல சமர்ப்பித்துள்ளார்.
அதற்கும் நீதி மன்றம் எரிச்சலடைந்து விளக்கம் கேட்டுள்ளது.
இப்போ இநத விடயம் இன்டர்நெட்டில் ஓஹோ என பரவி உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரிக்கிறது. இது தான் அந்த ரிப்போர்ட்.

கலைத்தேன், கடித்தேன், அவன் ருசியாகவிருந்தான்.நல்ல பையன். நல்ல பையன் பீச்
கையொப்பம்.
நாயின் கால் அடையாளம்
துப்பாக்கி குண்டு எப்படி துளைக்கிறது?

ஸ்லோ  மோசனில் ஆப்பிள், பால் கிளாஸ், போன்றவற்றின் ஊடக  எப்படி துளைத்து வெளியேறுகிறது என இங்கே பார்க்கலாம். இதற்கு சாதாரண காமெராக்கள் பாவிக்க முடியாது. இதற்கென தயாரிக்கப்பட்ட வீடியோ கமெராக்களே இவ் வகைப் படங்களை எடுக்க முடியும். இதற்குப் பாவிக்க கூடிய வீடியோ காமெராவின் விலையும் மிக அதிகம். சாதரணமாக இவற்றின் விலை அமெரிக்க டாலர்  $118,000 அளவிலாகும்.
இதோ அந்த வீடியோ:இதோ அந்தவகை கேமரா ஒன்று:
Friday, February 22, 2013

கீரியும் பாம்பும் சண்டை பிடித்தால் எது வெல்லும்?

முடிவு கட்டாயம் இங்கு பார்க்கலாம். பலமுறை வீதி ஓரங்களில் இதோ கீரியும்  பாம்பும்   சண்டை,  இதோ கீரியும்  பாம்பும் சண்டை  என பாவ்லா காட்டி பணம் கேட்பார்கள். இங்கு அப்படி எதுவுமில்லை. நேரடியாகவே இரணடும்  றவுண்டு கட்டுகின்றன.

தமிழ் படங்களில் போல பயங்கர சண்டையில்லை. ஆனால் சண்டை நடக்கிறது. ஒருவர் வெல்லுகிறார்.மற்றவர் தோற்கிறார்.

 இதோ அந்த வீடியோ .  Snake and Mongoose Fight Video.கூகிள் இன்டர்நெட் கண்ணாடி விற்பனைக்கு வருகிறது.

முதலில் இது அமெரிக்காவில் 1500 டொலர்களுக்கு கூகுளின் இது பற்றிய போட்டியில் பங்கு பற்றி வெல்பவர்களுக்கு மட்டுமே விற்கப்படவுள்ளது.
ஏற்கனவே இது குறிப்பிட்ட சில கம்பியூட்டர் விற்பன்னர்களுக்கு மட்டும் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இதைப்பற்றி  சிறு குறிப்பும் படங்களும் வீடியோவும் போட்டியில் பங்குபற்றுபவர்களால் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
வெற்றியாளர்களுக்கு இதனை  1500 டொலர்களுக்கு வாங்கமுடியும்
இந்த கூகிள் இன்டர்நெட்  கண்ணாடி நடக்கும் போதே ஸ்மார்ட்போன் போல பல நூற்றுக்கணக்கான வேலைகளை செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்தக் கண்ணாடியின் வீடியோ.


குரங்கு கையில் பூமாலையல்ல துவக்கு.

அதனை அதற்கு கையில் கொடுத்து விட்டு சிரித்தவர்கள்  அது சுடத் தொடங்கியதும்  ஓடும் ஓட்டத்தைப் பாருங்கள். நம்மூரில் குரங்கு கையில் பூமாலை எனப் பழமொழியுண்டு. இனி ஆப்பிரிக்காவில் குரங்கு கையில் துவக்கு எனப் பழமொழி வரும் போலும். இது எப்போ எப்படி நடந்தது என கண்டு பிடிக்க முயன்றேன் முடியவில்லை.
இது Rise of the Planet of the Apes எனும் திரைப்பட வெளியீட்டுடன்  சம்பந்தப் பட்டது என்று மட்டும் தெரிய வருகிறது.

முடிந்தால் கண்டு பிடித்துச்  சொல்லுங்கள்.

Here is the video clip Ape With AK-47
மாஜிக் ஷோவில் மனிதன் எப்படி இரண்டு துண்டாகிறான்?

மாஜிக் ஷோவில் மனிதன்  துண்டாவது எப்படி என இங்கே விவரமாகக் காட்டுகிறார்கள். சுழலும் வட்ட பிளேடால் மிக லாவகமாக மனிதனை இருண்டு துண்டுகளாக வெட்டிக் கட்டுவார்கள்.தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் எனக்காட்டுவார்கள்.   நம்பமுடியாத ஒன்று ஆனால் நம்பினேன்

எவ்வளவோ வருடங்களாக நான் தேடிய ஒன்று இங்கே கிடைத்து விட்டது.
இங்கே பாருங்கள் அது எப்படி சாத்தியமானது என்ன விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் காண்பியுங்கள்.

How they cut a man in to two pieces at the magic show with the big circular cutting machine?
Here you can view the show and the display how it is possible.
 

Thursday, February 21, 2013

இந்த வீடியோவைப் பார்த்தால் உங்கள் மனம் உற்சாகம அடையும்.


குட்டி யானை ஒன்று கடலில் அடிக்கும் லூட்டியை பாருங்கள். உங்கள் மனங்களை இது கட்டாயம் கொள்ளை கொள்ளும். என்ன உற்சாகம். என்ன சிறு பிள்ளைத்தனம். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கும்  கடலுக்குள் நீந்தி விளையாட எண்ணம் தோன்றும்.

அண்மையில் பார்த்த படம் ஒன்றின் காரணமாக இதன் ஒரிஜினல் படத்தைப் பார்க்க வேண்டும் என தோன்றி இன்டர்நெட்டில் தேடியபோது அதன் வீடியோவே கிடைத்துவிட்டது. நீங்களும் ரசியுங்கள்.


நான் முதலில் பார்த்த படம் இதுதான்.


Wednesday, February 20, 2013

உணவுப் பழக்கங்கள் தொடர்பான கருத்துக்கள்

உணவுப் பழக்கங்கள் தொடர்பான கருத்துக்கள்.


இதுதான் உண்மையென காலங்காலமாக நினைத்து வருபவையை 'இல்லை, இக்கருத்து தவறானதொன ஏதோவொன வழியில் நீங்கள் அறியவரும்பொழுது அது உங்கள் மனதுக்கு கஷ;டமாக இருந்தாலும் சில நேரங்களில் ஆச்சரியத்தையும் தருகின்றது அல்லவா? உணவு பழக்கவழக்களும் தொடர்பாக பலருக்கும் இருந்துவரும் சந்தேகங்களும் அல்லது தவறான கருத்துக்களுக்கு இதோ சில மாற்று கருத்துக்கள்.

 
எமது எலும்பு,பல் வளர்ச்சிக்கு கல்சியம்
  அவசியம் என்பது யாவரும்
அறிந்தவொன்றே. பாலினாலான உணவுப்
பொருட்களை உட்கொள்வதன் மூலம் எமது
உடலுக்கு தேவையான கல்கியத்தை பெற்றுக்
கொள்ளலாம் என்பது எல்லோரினதும்
பொதுவான கருத்தாகும்.பால் மாற்றும் யோகட்
மூலம் நிச்சயமாக போதியளவு கல்சியத்தை
பெற்றுக் கொள்ளலாம் ஆனால் பால்
பொருளான பனீரின் மூலம் தேவையான அளவு
கல்சியத்தினை பெற்றுக்கொள்ள முடியாது.
கல்சியத்தி;ன் மூலப்பொருள் பனீரே என்பது
இன்று பலரின் மத்தியிலும் நிலவி வரும் ஒரு
தவாறான கருத்தாகும்.பனீரை புரத்தின் மூலப்
பொருளாக கொள்ளலாம்.ஏனைய பாற்
கட்டிகளை விட இதில் மிகவும் குறைந்தளவு
கொழுப்புச் சத்தே உண்டு.எனவே டயட்
செய்வோருக்கு பனீர் ஒர் சிறந்த உணவாக அமையும்.
  அளவுக்கதிகமாக இனிப்பு பண்டங்களை
உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படுமென்பது தவறான அபிப்பிராயமாகுமென மேலைத்தேய வைத்தியர்கள் கூறுகின்றனர். ஆனால் அளவுக்கதிகமாக உடற்பருமன் அதிகரித்தல் இந்நோய்க்கான காரணமாகும். இனிப்பு பண்டங்களை விரும்பாத, உடற்பருமனானவர்களுக்கு கூட நீரிழிவு நோய் ஏற்படலாம் என்கிறார்கள் வைத்தியர்கள்.
பழங்களில் மற்றும் காய்கறிகளில் (கரட், வெள்ளரிக்காய்) இருந்து பெறப்படும் ஜுஸ் உங்களுக்கு நல்லதுதான். ஆனால் அப்பழத்தையோ அல்லது காய் கறியையே முழுதாக உண்ணும் போது கிடைக்கும் போசணைக் கூறுகள் அனைத்தும் இந்த ஜுஸை மட்டும் பருகுவதால் கிடைக்காமல் போகின்றது.


குறிப்பிட்ட ஒரு காய்கறியினாலோ அல்லது பழத்தினாலே குணமாக்க கூடிய நோயை (மிக்ரெயின், ஆர்த்ரைட்டிஸ், வேறு சில நோய்கள்)இதிலிருந்து பெறப்படும் ஜுஸ் குணமாக்கக்கூடிய வல்லமையை இழந்து விடுகின்றது.
ஆனால் ஆரஞ்சு ஜுஸ் ஒரு ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு விற்றமின் 'சி'யினை கொண்டுள்ளது. ஜுஸை மட்டும் பருகுவதனால் பழத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஏனைய போசனை கூறுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்றது. இதே போன்று ஒரு கோப்பை கெரட் ஜுஸிலும் ஒரு கெரட்டிலுள்ளதை விட அதிகளவு நார் சத்தை இழந்து விடுகின்றோம்.
சில தாய்மார்கள் தங்கள் பிள்ளை ஒல்லியாக இருப்பதைக் கண்டு மனம் வருந்துகிறார்கள். போஷhக்கு குறைபாடு எனக்கருதி, தங்களுக்கு தெரிந்த விற்றமின் மாத்திரைகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார்கள்.
ஒரு சாதாரண மானிட உடலினால் ஓர் குறிப்பிட்டளவு விற்றமினே அகத்துறிஞ்சப்படும். அளவுக்கதிகமாக நாம் உட்கொள்ளும் விற்றமின்களின் மிதமிஞ்சியவை கழிவாகவே அகற்றப்படும். அதனை விட எமக்கு தேவையான விற்றமின்களை நாம் மாத்திரையாக
உள்ளெடுப்பதைவிட தகுந்த உணவின் மூலம் அதனை பெற்றுக்கொள்வதே சிறந்ததாகும்.
வயிற்று வலியா? உடனேயே பார்லி, சோடா வாங்கி அருந்தினால் சரியாகும் என நினைக்கிறீர்களா? வயிற்றில் உபாதைகள் ஏற்படும்போது கூடியளவு பானங்களை (காபனேட் பானங்கள்) தவிர்த்து உலர்ந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் அதுவே வயிற்றுக்கு நல்லது.

 

பப்பாளி பழத்தின் பயன்கள்...

பப்பாளி பழத்தின்  பயன்கள்...
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி துரிதமாகும்.
எலும்பு வளர்ச்சி,பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டால் பருமனான உடல் படிப்படியாக மெலியும்.
       தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும.; பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி,ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கும் மாறி.முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்துவிடும்.பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்,புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் வைத்துக் கட்டினால் உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும.;பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில பூச வலி.விஷம் இறங்கும். பப்பாளி காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் சாதத்தில் சோர்த்துவர பால் சுரப்பு கூடும்.  
 

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்.காற்றோடு கலந்து பரவும் விஷக் கிருமிகளைத் தன்பால் கிரகித்துக் கொள்கின்ற சக்தி வெங்காயத்துக்கு மட்டும் உண்டு. தினமும் அதிகாலை ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாழ்நாள் முழவதும் எந்த நோயும் அணுகாது.
                                உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை உண்டு பண்ணுகிற சிறப்புச் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.வெங்காயத்தை 2 துண்டுகளாக வெட்டி முகர்ந்தாலும் வாயில் போட்டு சப்பினாலும் வாந்தியை தவிர்க்கலாம்.
         தொற்று நோய் பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால் கொ}ஞ்சம் வெங்காயம் எடுத்து செல்வது நல்லது.நோய் கிருமிகள் நம்மைப் பாதிக்கா.வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா?


நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் வெங்காயத்தை வெறுமனேருசிக்காக மாத்திரம் சேர்த்து வருகிறோம்.அது தவிர இதனைப் பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது.இது எப்படிப்பட்டது,இதனை மருத்துவக் குணங்கள் என்ன என்றெல்லாம் எடுத்து நோக்கும் பொழுது வெங்காயத்தின் மகிமையினை உணர்ந்து கொள்ளலாம்.
                                       வெங்காயத்தைச் சாப்பிடும் பொழுது வேகவைத்துச் சாப்பிவதே மிகவும் சிறந்த முறையாகும்.அதற்காகப் பச்சையாகச் சாப்பிடக் கூடாதென்பதல்ல.பச்சையாகச் சாப்பிடுகிறவர்கள் சிறிது நேரம் வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்வதாயின் செல்லவும்.காரணம் பச்சையாக சாப்பிட்டவர்கள்,மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது வெங்காய வாடை வீசும்.
ஏனையோர் அவ்வாடையினால் வெறுப்படைய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.ஏனென்றால்,நூற்றுக்குத் தொண்ணூறு சதவீமானவர்கள் வெங்காய வாடையை வெறுப்பாகள்.
         இவ்வெங்காயத்தினை காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் பொழுது அவ்வுணவு வகைகள் தனிச்சுவை பொற்றுவிடுகின்றன்அது மட்டுமல்ல,இதன் மருத்துவக் குணங்களை எடுத்து நோக்குவோமானால் அது ஒன்றிரண்டு என மட்டுப்படுத்தி விட முடியாது.நிறையவே மருத்துவக் குணங்களை கொண்ட ஒன்று தான் வெங்காயம்.
                            இது பற்றி மருத்துவத்துiயினர் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.வெங்காயம் நச்சுக் கிருமிகளைக் கொல்லுவதுடன் உடற்பருமன் ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கிறது.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வருகையில் உங்கள் குரல் வளம் இனிமை பெறும்.அழகிய குரல் வளம் பெற விரும்புகின்றவர்கள் மேற் கூறிய விடயத்தைக் கைக்கொள்ளலாம்.கிராணி,விஷக்கடி,குழிப்புண் ஆகியவற்றையும் குணமடையச் செய்வதுடன்,பித்தத்தையும் தணியச் செய்யும் குணமும் இதற்குண்டு ம10ளை சுறுசுறுப்பாக இயங்கவும்,காக்கை வலிப்பு போன்ற கெட்ட நோய்கள் நீங்கவும்,வெங்காயம் வழி சமைக்கின்றது.
                  குhலையில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயங்களைத் தனியாகவோ உண்வுகளுடனோ சோர்த்து உண்டு வந்தால் அன்று முழுவதும் உஷணம்,வேறு பிணிகள் எம்மை எட்டிக்கூடப்பார்க்க மறுக்கும்.கோடை காலத்தில் ஒரு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டால்,மயக்கம் போன்ற தன்மைகள் எம்மை அணுகாது என மருத்துவர்கள் கருத்துரைக்கின்றனர்.
                வெங்காயசடசாறு பக்கவாதம்,நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்தாகும்.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வந்தால் பக்கவாதம் ஏற்படாமல் தவிக்க முடியுமென இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று அறிவித்துள்ளது.

      குறிப்பாக புகைபிடிப்பவர்கள் வெங்காயத்தை நாட வேண்டும்.காரணம்,இப்பழக்கத்தினால் நுரையீரல்,இதய நோய்கள் ஏற்படுகின்றன.நச்சுப் பொருளால் இரத்தம் கெடுகின்றது.இவ்வாறன புகைப் பழக்கத்தையுடையவர்கள் வெங்காயத்தை உண்டு வரலாம்.
      இவ்வாறு உண்பதால் புகைப் பழக்கத்தாலேற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.மொத்தத்தில் வெங்காயம் ஒரு உணவுப்பொருளாகவும்,மருத்துவப் பொருளாகவும் இருந்து வருகின்றது.