Thursday, May 1, 2014

உதைபந்தாட்டத்தில் வாழைப்பழம் தடை செய்யப்படுமா?

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களின் பனானா ஒயில் பாவனை பற்றித் தெரியுந்தானே? உதைபந்தாட்டத்தில் வாழைப்பழத்தை எறிவதன் மூலமாக கறுப்பு விளையாட்டு வீரர்களை நன்றாக கோபம் ஏற்ற முடியும் எனவும் அவர்கள் கறுப்புக் குரங்குகள்  என மறைமுகமாக  வாழைப்பழம் எறியும் வெள்ளைத்தோல்காரர்கள் கருதுகின்றனர்.

ஆனால் உதைபந்தாட்ட நிறுவனங்களும் அரசாங்கங்களும் இதை நிற வெறி எனக் கூறி எறிபவர்களுக்கு எதிரக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளன. இவர்கள் குற்றம் உறுதி செய்யப்பட்டால் மூன்று வருடங்கள் மறியலில் இடப்படலாம்.

அதிகமாக வாழைப்பழம் எறியப்படும் வீரர் யார் தெரியுமா?
இத்தாலிய உதைபந்தாட்டவீரர் மரியோ பலட்டோலி தான் (Mario Balotelli.)


அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியொன்றில் விளையாடிய பிரேசில் வீரர் அல்வெஸ் (
Alves)  இந்த வாழைப்பழத்தை நிற வெறி காரணமாக எதிர் கொண்டார். ஆனால் அவர் கோபத்தைக்காட்டாமல் அந்த பழத்தில் பாதியை சாப்பிட்டு விட்டு தனது அணிக்கு கொடுத்த கோர்னர் அடியை சாதாரணமாக அடித்து அந்த ரசிகரின் கோபத்தை மேலும் கூடச் செய்தார் .அத்துடன் அவரின் அணி போட்டியில் வெற்றியும் பெற்று  விட்டது குறிப்பிடத்தக்கது.

பலரின் ஆட்சேபனையின் பின் அந்த  வாழைப்பழம் எறிந்தவர் ஸ்பானிய பொலிசாரால் கைது செய்யப்.பட்டுள்ளார்

இதோ அந்த வீடியோ.