Friday, April 10, 2015

கதிர்காம பயணம்.2015ல். (Going to Kathirgamam)

                                                           

இப்போதெல்லாம் மிக வேகமாக கதிர்காமத்துக்குப்  பயணம் செய்ய முடிகிறது. முன்னர் 10 - 12 மணித்தியாலங்களாக இருந்த பயண நேரம் தற்போது 5 மணித்தியாலங்களாகியுள்ளது.

                                                       கோவிலண்மையில் 
                                                                             

எங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்?
1. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்.
மாத்தறை வரை ரயிலில் சென்று பின் பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்

2.  கொழும்பு கோட்டை பஸ் நிலையம். 32ம் இலக்க பஸ்சில் கதிர்காமம் செல்லலாம். சாதாரண கட்டணம்

 3. கொழும்பு கோட்டை எக்ஸ்பிரஸ் பஸ் நிலையம் 
  எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக கதிர்காமம் செல்லலாம்
கட்டணம் ரூபா 800.00

 5. மகரகம பஸ் நிலையம். இங்கிருந்து எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக மாத்தறைவரை செல்லு ம். காலை 9.00 மணியில் இருந்து கதிர்காமத்துக்கு நேரடி பஸ் உள்ளது. அல்லது இங்கிருந்து திஸ்ஸ என்று அழைக்கப்படும் திஸ்ஸமஹராமவுக்கு பஸ்சில் சென்று பின் அங்கிருந்து இன்னொரு பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்.
மகரகம - மாத்தறைவரை கட்டணம் ரூபா 445.00  (2.30 மணித்தியலங்கள் )
மாத்தறை - திஸ்ஸமஹராம கட்டணம் ரூபா 135.00 (3 மணித்தியலங்கள் )
திஸ்ஸமஹராம - கதிர்காமம் கட்டணம் ரூபா 35.00 (20 நிமிடங்கள் )

எங்கு தங்கலாம்?


கதிர்காம யாத்திரிகர் தங்குமிடம்  (இந்து கலாச்சார அமைச்சு)
சாதாரண அறை கட்டணம் ரூபா 350.00 (இரண்டு கட்டில்கள் , நுளம்பு வலை மின்விசிறி இணைந்த குளியல் அறை)

இலங்கை வங்கி ரெஸ்ட்
லேககவுஸ் ரெஸ்ட் (அறை கட்டணம் ரூபா 900.00 இரண்டு கட்டில்கள் )

                                          மாத்தறை பொது பஸ் தரிப்பிடம்
                                           
                                               பஸ்சின் உட்புறம்


                                                   
                                              பஸ்சின் வெளிப்புறம்
                                                     

                                                மாத்தறையில்  டீக்கு நிறுத்தல்

                                                                             








தாஜ்மஹாலுக்கு கீழே சிவன் கோவில் இருக்கிறது - துவாரகை பீட சங்கரச்சாரியார்.

ஷீரடி சாய்பாபா பற்றி புது விளக்கம் கூறி இந்தியா முழுவதும் அவரின் பக்தர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவைத்த சர்ச்சைக்குரிய இந்து மதத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முழு செய்தியும் படிக்க http://tamils4.com/?p=1734

ஆந்திராவில் 20 பேர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.

 முழு செய்தியும் படிக்க http://tamils4.com/?p=1727

Wednesday, April 8, 2015

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ – நாகூர் ஹனிபா காலமானார்.

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ – நாகூர் ஹனிபா காலமானார்.
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா (வயது  96 ) காலமானார்.  அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவரது பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
http://tamils4.com/?p=1685

அமெரிக்காவில் நிராயுதபாணி கருப்பு ஆணை சுடும் வெள்ளையின போலீஸ் அதிகாரி. இனவெறி கொலை?
அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் வெள்ளையின பொலிஸ்காரர் (Slager ) ஒருவர், நிராயுதபாணி  கருப்பின 50 வயது ஆண்( Scott )ஒருவரை சுட்டுக் கொல்வதாகக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அந்த பொலிஸ்காரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க
http://tamils4.com/?p=1679

Tuesday, April 7, 2015

வெள்ளைக்காாியின் காவடி ஆட்டம் கதிா்காமத்தில்.

 அழகாக காவடி ஆடிய வெள்ளைக்காரப்பெண்.
வெளிநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உட்பட 9 பேர் அடங்கிய குடும்பமொன்று கதிர்காமக் கந்தனுக்கு காவடி எடுத்ததை அங்கு வழிபாட்டுக்கு வந்திருந்த தமிழ் சிங்கள மக்கள் பெரும் ஆவலுடன் பார்வையிட்டனர். இது நேர்த்திக் கடனுக்கோ அல்லது அவர்களின் ஆவலினால் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. மாணிக்ககங்கையின் மேலுள்ள பாலத்தின் மேலாக ஆடியபடி வந்தவர்கள் பின் பிரதரன வீதியுடாக கோவிலுள் வந்தபோது இரவு பூஜைகள் ஆரம்பித்தபடியால் காவடிகளை இறக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.பின்னர் பூஜைகள் நிறைவு பெற்றபின் மீண்டும் காவடிகளை தோள்களிலேற்றி கோவில் வீதியில்; சுற்றி ஆடியபடி வந்து காவடிகளை இறக்கினர்.

வீடியோ. Here.