Sunday, March 26, 2017

ரஜினிகாந்த் இலங்கை வராததையிட்டு மனம் வருந்துவோர்.

இவரது யாழ்ப்பாண விஜயத்தை கைவிட்டதையிட்டு கவலையடைவோர் பட்டியலை பாருங்கள்.சுப்பிரமணியசாமி: அனைத்து சினிமா ஸ்டார்களும் கோழைகள், ரஜினிகாந்த் மட்டும் அதில் வேறுபட்டவர் இல்லை. ( All cinema stars are chicken. Rajnikant no different)

முன்னாள் இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸ:
இலங்கையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. அதன்படி எந்தவொரு நடிகரும் இலங்கை வருவதில் தவறில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்:  நடிகர் ரஜனிகாந்தின் வடக்கு விஜயத்தை அரசியலாக்கி ஏழைகளின் எதிர்ப்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் ஏமாற்றத்தை விதைத்துள்ளார்கள்.

 மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:
 நடிகர் ரஜினிகாந்த் வீடு வழங்க இலங்கை செல்வதில் தவறு இல்லை. தமிழனுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும், எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாக இருந்தால் கூட அவரை பாராட்டுவேன்.

 லொள்ளுசபா நடிகரும், தீவிர ரஜினி ரசிகருமான ஜீவா:
 போரில் பாதிக்கபட்ட மக்களுக்கு வேறு யாராவது வீடு கொடுத்தால், உதவி செய்தால் பிடிக்காது. காரணம் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது.


வடக்குத் தமிழ் மக்களுக்கும் ரஜினிகாந்த்துக்கும் என்ன தொடர்பு?
இவர் யாழ்ப்பாணத்தவரா? இலங்கையரா ? தமிழரா அல்லது தமிழ்நாட்டில்தான்  பிறந்து வளர்ந்தவரா? இவர்  தனது பணத்தில் 150 வீடுகள் கட்டி அவற்றை வழங்க வருகிறாரா? இவற்றில் எதுவுமே இல்லை.
இவரது 2.0  படத்தை எடுக்கும் சர்வதேச முதலாளி(லைகா)யின் நிகழ்வு  ஒன்றுக்கு கூட்டம் சேர்ப்பதற்குத்தான் (சிறப்பு விருந்தினராக) இவர் செல்லவிருந்தார். தற்போது  தமிழ்நாட்டு மக்களின்  எதிர்ப்பையிட்டு பயணத்தை கைவிட்டுள்ளார்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொல் திருமாவளவன் :
வறட்டுக் கவுரவம் பார்க்காமல், வீண்பிடிவாதம் செய்யாமல், எவருடையத் தூண்டுதலுக்கும் இரையாகாமல், மிகவும் தன்னியல்பான வகையில், எங்களது வேண்டுகோளை ஏற்று,
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவரின் இந்த முடிவு அவர் மீதான நன்மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. அவர் மாற்றார் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பவரல்ல. சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர் என்பது இம்முடிவிலிருந்து உணரமுடிகிறது.
நாங்கள் இந்த வேண்டுகோளை விடுத்ததில் அரசியல் உள்நோக்கமோ விளம்பர நாட்டமோ ஏதுவும் இல்லை. ஈழத்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தான் ஊடகங்கள் வாயிலாக இந்த வேண்டுகோளை முன்வைத்தோம்.

Tuesday, March 21, 2017

2017, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்.

தினகரன் தன்னிச்சையாக அதிமுக ஆர்.கே.நகர் வேட்பாளராக களமிறங்கியது சசிகலாவிற்குத் தெரியாமலே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இவர்அதிமுக, துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.
மேலும் படிக்க

Sunday, March 19, 2017

இளையராஜாவின் இசைப் பயணம் வங்குரோத்தாகி விட்டதா?

தமிழ் நாட்டிலிருந்து இளையராஜாவின் வக்கீல், தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் தமிழகமெங்கும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க இங்கே

இளையராஜாவின் இசைமைப்பில் உருவான பாடல்களை முன்னனுமதி பெறாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என, தனக்கு அவர் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பிபிசி

இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை' என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தினமலர்

Saturday, March 18, 2017

டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த தீர்வு பப்பாஇலை தான்.


பப்பா இலையை இடித்து சாறெடுத்து ஒரு மேசைக் கரண்டி காலை மாலை குடித்து வந்தால் நோய் குணமடையும். நோயுள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுத்து வந்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். மிக உண்மை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இந்த இலையை இந்தோனேஷியா பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் தினமும் கீரை போல சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
இது ஆங்கில மருந்துகளுடன் எதுவித எதிர்ப்பும் செய்யாது. பயமின்றி அதனுடன் பாவிக்கலாம்.
பப்பா இலை சாறு கப்சுல் ஆகவும் மருந்துக்கடைகளில் விற்கப்படுகிறது.













 

Medicine For Dengue.. ஆங்கிலத்தில்

Thursday, March 9, 2017

பொா்க்கி” என தமிழரை எழுதும் சுசாவை கைது செய்க. இவன் மகிந்தவின் நண்பனுங்கூட.

பொா்க்கி புகழ் சுசா, இவன் இலங்கையின் ஜனாதிபதித் தோ்தல் பொதுத்தோ்தல் போன்றவற்றில் படு தோல்வியடைந்தவனும் இலங்கைத் தமிழா் கொலைக்களத்திற்கும் காரணமானவனுமான மகிந்தவின் நண்பன் என்பதை விட மேலதிகமாக மகிந்தவிற்கு ”பாரத ரத்னா” பட்டம் வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சிபார்சுக் கடிதமெழுதியவனுமான ஒருவன். இப்படியான கடிதம் கிடைத்ததென பின்னர் பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டார்.

இப்போது, ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Friday, April 10, 2015

கதிர்காம பயணம்.2015ல். (Going to Kathirgamam)

                                                           

இப்போதெல்லாம் மிக வேகமாக கதிர்காமத்துக்குப்  பயணம் செய்ய முடிகிறது. முன்னர் 10 - 12 மணித்தியாலங்களாக இருந்த பயண நேரம் தற்போது 5 மணித்தியாலங்களாகியுள்ளது.

                                                       கோவிலண்மையில் 
                                                                             

எங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்?
1. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்.
மாத்தறை வரை ரயிலில் சென்று பின் பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்

2.  கொழும்பு கோட்டை பஸ் நிலையம். 32ம் இலக்க பஸ்சில் கதிர்காமம் செல்லலாம். சாதாரண கட்டணம்

 3. கொழும்பு கோட்டை எக்ஸ்பிரஸ் பஸ் நிலையம் 
  எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக கதிர்காமம் செல்லலாம்
கட்டணம் ரூபா 800.00

 5. மகரகம பஸ் நிலையம். இங்கிருந்து எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக மாத்தறைவரை செல்லு ம். காலை 9.00 மணியில் இருந்து கதிர்காமத்துக்கு நேரடி பஸ் உள்ளது. அல்லது இங்கிருந்து திஸ்ஸ என்று அழைக்கப்படும் திஸ்ஸமஹராமவுக்கு பஸ்சில் சென்று பின் அங்கிருந்து இன்னொரு பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்.
மகரகம - மாத்தறைவரை கட்டணம் ரூபா 445.00  (2.30 மணித்தியலங்கள் )
மாத்தறை - திஸ்ஸமஹராம கட்டணம் ரூபா 135.00 (3 மணித்தியலங்கள் )
திஸ்ஸமஹராம - கதிர்காமம் கட்டணம் ரூபா 35.00 (20 நிமிடங்கள் )

எங்கு தங்கலாம்?


கதிர்காம யாத்திரிகர் தங்குமிடம்  (இந்து கலாச்சார அமைச்சு)
சாதாரண அறை கட்டணம் ரூபா 350.00 (இரண்டு கட்டில்கள் , நுளம்பு வலை மின்விசிறி இணைந்த குளியல் அறை)

இலங்கை வங்கி ரெஸ்ட்
லேககவுஸ் ரெஸ்ட் (அறை கட்டணம் ரூபா 900.00 இரண்டு கட்டில்கள் )

                                          மாத்தறை பொது பஸ் தரிப்பிடம்
                                           
                                               பஸ்சின் உட்புறம்


                                                   
                                              பஸ்சின் வெளிப்புறம்
                                                     

                                                மாத்தறையில்  டீக்கு நிறுத்தல்

                                                                             








தாஜ்மஹாலுக்கு கீழே சிவன் கோவில் இருக்கிறது - துவாரகை பீட சங்கரச்சாரியார்.

ஷீரடி சாய்பாபா பற்றி புது விளக்கம் கூறி இந்தியா முழுவதும் அவரின் பக்தர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவைத்த சர்ச்சைக்குரிய இந்து மதத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முழு செய்தியும் படிக்க http://tamils4.com/?p=1734

ஆந்திராவில் 20 பேர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.

 முழு செய்தியும் படிக்க http://tamils4.com/?p=1727