Sunday, March 26, 2017

ரஜினிகாந்த் இலங்கை வராததையிட்டு மனம் வருந்துவோர்.

இவரது யாழ்ப்பாண விஜயத்தை கைவிட்டதையிட்டு கவலையடைவோர் பட்டியலை பாருங்கள்.சுப்பிரமணியசாமி: அனைத்து சினிமா ஸ்டார்களும் கோழைகள், ரஜினிகாந்த் மட்டும் அதில் வேறுபட்டவர் இல்லை. ( All cinema stars are chicken. Rajnikant no different)

முன்னாள் இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸ:
இலங்கையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. அதன்படி எந்தவொரு நடிகரும் இலங்கை வருவதில் தவறில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்:  நடிகர் ரஜனிகாந்தின் வடக்கு விஜயத்தை அரசியலாக்கி ஏழைகளின் எதிர்ப்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் ஏமாற்றத்தை விதைத்துள்ளார்கள்.

 மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:
 நடிகர் ரஜினிகாந்த் வீடு வழங்க இலங்கை செல்வதில் தவறு இல்லை. தமிழனுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும், எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாக இருந்தால் கூட அவரை பாராட்டுவேன்.

 லொள்ளுசபா நடிகரும், தீவிர ரஜினி ரசிகருமான ஜீவா:
 போரில் பாதிக்கபட்ட மக்களுக்கு வேறு யாராவது வீடு கொடுத்தால், உதவி செய்தால் பிடிக்காது. காரணம் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது.


வடக்குத் தமிழ் மக்களுக்கும் ரஜினிகாந்த்துக்கும் என்ன தொடர்பு?
இவர் யாழ்ப்பாணத்தவரா? இலங்கையரா ? தமிழரா அல்லது தமிழ்நாட்டில்தான்  பிறந்து வளர்ந்தவரா? இவர்  தனது பணத்தில் 150 வீடுகள் கட்டி அவற்றை வழங்க வருகிறாரா? இவற்றில் எதுவுமே இல்லை.
இவரது 2.0  படத்தை எடுக்கும் சர்வதேச முதலாளி(லைகா)யின் நிகழ்வு  ஒன்றுக்கு கூட்டம் சேர்ப்பதற்குத்தான் (சிறப்பு விருந்தினராக) இவர் செல்லவிருந்தார். தற்போது  தமிழ்நாட்டு மக்களின்  எதிர்ப்பையிட்டு பயணத்தை கைவிட்டுள்ளார்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொல் திருமாவளவன் :
வறட்டுக் கவுரவம் பார்க்காமல், வீண்பிடிவாதம் செய்யாமல், எவருடையத் தூண்டுதலுக்கும் இரையாகாமல், மிகவும் தன்னியல்பான வகையில், எங்களது வேண்டுகோளை ஏற்று,
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவரின் இந்த முடிவு அவர் மீதான நன்மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. அவர் மாற்றார் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பவரல்ல. சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர் என்பது இம்முடிவிலிருந்து உணரமுடிகிறது.
நாங்கள் இந்த வேண்டுகோளை விடுத்ததில் அரசியல் உள்நோக்கமோ விளம்பர நாட்டமோ ஏதுவும் இல்லை. ஈழத்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தான் ஊடகங்கள் வாயிலாக இந்த வேண்டுகோளை முன்வைத்தோம்.

Tuesday, March 21, 2017

2017, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்.

தினகரன் தன்னிச்சையாக அதிமுக ஆர்.கே.நகர் வேட்பாளராக களமிறங்கியது சசிகலாவிற்குத் தெரியாமலே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இவர்அதிமுக, துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.
மேலும் படிக்க

Sunday, March 19, 2017

இளையராஜாவின் இசைப் பயணம் வங்குரோத்தாகி விட்டதா?

தமிழ் நாட்டிலிருந்து இளையராஜாவின் வக்கீல், தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் தமிழகமெங்கும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க இங்கே

இளையராஜாவின் இசைமைப்பில் உருவான பாடல்களை முன்னனுமதி பெறாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என, தனக்கு அவர் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பிபிசி

இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை' என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தினமலர்

Saturday, March 18, 2017

டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த தீர்வு பப்பாஇலை தான்.


பப்பா இலையை இடித்து சாறெடுத்து ஒரு மேசைக் கரண்டி காலை மாலை குடித்து வந்தால் நோய் குணமடையும். நோயுள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுத்து வந்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். மிக உண்மை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இந்த இலையை இந்தோனேஷியா பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் தினமும் கீரை போல சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
இது ஆங்கில மருந்துகளுடன் எதுவித எதிர்ப்பும் செய்யாது. பயமின்றி அதனுடன் பாவிக்கலாம்.
பப்பா இலை சாறு கப்சுல் ஆகவும் மருந்துக்கடைகளில் விற்கப்படுகிறது.













 

Medicine For Dengue.. ஆங்கிலத்தில்

Thursday, March 9, 2017

பொா்க்கி” என தமிழரை எழுதும் சுசாவை கைது செய்க. இவன் மகிந்தவின் நண்பனுங்கூட.

பொா்க்கி புகழ் சுசா, இவன் இலங்கையின் ஜனாதிபதித் தோ்தல் பொதுத்தோ்தல் போன்றவற்றில் படு தோல்வியடைந்தவனும் இலங்கைத் தமிழா் கொலைக்களத்திற்கும் காரணமானவனுமான மகிந்தவின் நண்பன் என்பதை விட மேலதிகமாக மகிந்தவிற்கு ”பாரத ரத்னா” பட்டம் வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சிபார்சுக் கடிதமெழுதியவனுமான ஒருவன். இப்படியான கடிதம் கிடைத்ததென பின்னர் பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டார்.

இப்போது, ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Friday, April 10, 2015

கதிர்காம பயணம்.2015ல். (Going to Kathirgamam)

                                                           

இப்போதெல்லாம் மிக வேகமாக கதிர்காமத்துக்குப்  பயணம் செய்ய முடிகிறது. முன்னர் 10 - 12 மணித்தியாலங்களாக இருந்த பயண நேரம் தற்போது 5 மணித்தியாலங்களாகியுள்ளது.

                                                       கோவிலண்மையில் 
                                                                             

எங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்?
1. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்.
மாத்தறை வரை ரயிலில் சென்று பின் பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்

2.  கொழும்பு கோட்டை பஸ் நிலையம். 32ம் இலக்க பஸ்சில் கதிர்காமம் செல்லலாம். சாதாரண கட்டணம்

 3. கொழும்பு கோட்டை எக்ஸ்பிரஸ் பஸ் நிலையம் 
  எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக கதிர்காமம் செல்லலாம்
கட்டணம் ரூபா 800.00

 5. மகரகம பஸ் நிலையம். இங்கிருந்து எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக மாத்தறைவரை செல்லு ம். காலை 9.00 மணியில் இருந்து கதிர்காமத்துக்கு நேரடி பஸ் உள்ளது. அல்லது இங்கிருந்து திஸ்ஸ என்று அழைக்கப்படும் திஸ்ஸமஹராமவுக்கு பஸ்சில் சென்று பின் அங்கிருந்து இன்னொரு பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்.
மகரகம - மாத்தறைவரை கட்டணம் ரூபா 445.00  (2.30 மணித்தியலங்கள் )
மாத்தறை - திஸ்ஸமஹராம கட்டணம் ரூபா 135.00 (3 மணித்தியலங்கள் )
திஸ்ஸமஹராம - கதிர்காமம் கட்டணம் ரூபா 35.00 (20 நிமிடங்கள் )

எங்கு தங்கலாம்?


கதிர்காம யாத்திரிகர் தங்குமிடம்  (இந்து கலாச்சார அமைச்சு)
சாதாரண அறை கட்டணம் ரூபா 350.00 (இரண்டு கட்டில்கள் , நுளம்பு வலை மின்விசிறி இணைந்த குளியல் அறை)

இலங்கை வங்கி ரெஸ்ட்
லேககவுஸ் ரெஸ்ட் (அறை கட்டணம் ரூபா 900.00 இரண்டு கட்டில்கள் )

                                          மாத்தறை பொது பஸ் தரிப்பிடம்
                                           
                                               பஸ்சின் உட்புறம்


                                                   
                                              பஸ்சின் வெளிப்புறம்
                                                     

                                                மாத்தறையில்  டீக்கு நிறுத்தல்

                                                                             








தாஜ்மஹாலுக்கு கீழே சிவன் கோவில் இருக்கிறது - துவாரகை பீட சங்கரச்சாரியார்.

ஷீரடி சாய்பாபா பற்றி புது விளக்கம் கூறி இந்தியா முழுவதும் அவரின் பக்தர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவைத்த சர்ச்சைக்குரிய இந்து மதத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முழு செய்தியும் படிக்க http://tamils4.com/?p=1734

ஆந்திராவில் 20 பேர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.

 முழு செய்தியும் படிக்க http://tamils4.com/?p=1727

Wednesday, April 8, 2015

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ – நாகூர் ஹனிபா காலமானார்.

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ – நாகூர் ஹனிபா காலமானார்.
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா (வயது  96 ) காலமானார்.  அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவரது பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
http://tamils4.com/?p=1685

அமெரிக்காவில் நிராயுதபாணி கருப்பு ஆணை சுடும் வெள்ளையின போலீஸ் அதிகாரி. இனவெறி கொலை?
அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் வெள்ளையின பொலிஸ்காரர் (Slager ) ஒருவர், நிராயுதபாணி  கருப்பின 50 வயது ஆண்( Scott )ஒருவரை சுட்டுக் கொல்வதாகக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அந்த பொலிஸ்காரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க
http://tamils4.com/?p=1679

Tuesday, April 7, 2015

வெள்ளைக்காாியின் காவடி ஆட்டம் கதிா்காமத்தில்.

 அழகாக காவடி ஆடிய வெள்ளைக்காரப்பெண்.
வெளிநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உட்பட 9 பேர் அடங்கிய குடும்பமொன்று கதிர்காமக் கந்தனுக்கு காவடி எடுத்ததை அங்கு வழிபாட்டுக்கு வந்திருந்த தமிழ் சிங்கள மக்கள் பெரும் ஆவலுடன் பார்வையிட்டனர். இது நேர்த்திக் கடனுக்கோ அல்லது அவர்களின் ஆவலினால் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. மாணிக்ககங்கையின் மேலுள்ள பாலத்தின் மேலாக ஆடியபடி வந்தவர்கள் பின் பிரதரன வீதியுடாக கோவிலுள் வந்தபோது இரவு பூஜைகள் ஆரம்பித்தபடியால் காவடிகளை இறக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.பின்னர் பூஜைகள் நிறைவு பெற்றபின் மீண்டும் காவடிகளை தோள்களிலேற்றி கோவில் வீதியில்; சுற்றி ஆடியபடி வந்து காவடிகளை இறக்கினர்.

வீடியோ. Here.



Thursday, May 1, 2014

உதைபந்தாட்டத்தில் வாழைப்பழம் தடை செய்யப்படுமா?

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களின் பனானா ஒயில் பாவனை பற்றித் தெரியுந்தானே? உதைபந்தாட்டத்தில் வாழைப்பழத்தை எறிவதன் மூலமாக கறுப்பு விளையாட்டு வீரர்களை நன்றாக கோபம் ஏற்ற முடியும் எனவும் அவர்கள் கறுப்புக் குரங்குகள்  என மறைமுகமாக  வாழைப்பழம் எறியும் வெள்ளைத்தோல்காரர்கள் கருதுகின்றனர்.

ஆனால் உதைபந்தாட்ட நிறுவனங்களும் அரசாங்கங்களும் இதை நிற வெறி எனக் கூறி எறிபவர்களுக்கு எதிரக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளன. இவர்கள் குற்றம் உறுதி செய்யப்பட்டால் மூன்று வருடங்கள் மறியலில் இடப்படலாம்.

அதிகமாக வாழைப்பழம் எறியப்படும் வீரர் யார் தெரியுமா?
இத்தாலிய உதைபந்தாட்டவீரர் மரியோ பலட்டோலி தான் (Mario Balotelli.)


அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியொன்றில் விளையாடிய பிரேசில் வீரர் அல்வெஸ் (
Alves)  இந்த வாழைப்பழத்தை நிற வெறி காரணமாக எதிர் கொண்டார். ஆனால் அவர் கோபத்தைக்காட்டாமல் அந்த பழத்தில் பாதியை சாப்பிட்டு விட்டு தனது அணிக்கு கொடுத்த கோர்னர் அடியை சாதாரணமாக அடித்து அந்த ரசிகரின் கோபத்தை மேலும் கூடச் செய்தார் .அத்துடன் அவரின் அணி போட்டியில் வெற்றியும் பெற்று  விட்டது குறிப்பிடத்தக்கது.

பலரின் ஆட்சேபனையின் பின் அந்த  வாழைப்பழம் எறிந்தவர் ஸ்பானிய பொலிசாரால் கைது செய்யப்.பட்டுள்ளார்

இதோ அந்த வீடியோ.

Sunday, April 27, 2014

திருட்டுத் தீக்கோழி. ஐபோனை அப்படியே விழுங்கிவிட்டது.

ஒரு பார்வை, ஒரு தலை நீட்டல் ம்முக்கும் ஐபோன் அபேஸ். தீக்கோழிக்கு எதைத்தான் விழுங்குவது என்ற விவஸ்தையே கிடையாதா? கல்லை விழுங்குது மண்ணை விழுங்குது. கையிலிருக்கும் போனையும் பறித்து விழுங்கணுமா?
என்ன செய்வது படமெடுப்பதற்காக கையில் போனை வைத்திருந்த குழந்தை கண்ணீருடன் அழுகை. போன் உள்ளே போய் படமெடுக்குமா தெரியவில்லை.


தீக்கோழி.என்னமா ஓடுதுன்னு பாருங்களேன். 40km /h

Saturday, April 26, 2014

இளம்பெண் ஒரு பீர் கேசை பாவாடையூடாக கால்களுக்குள் சொருகி களவெடுக்கிறார்.

இளம்பெண் ஷாப்பிங் வந்து செய்யும் களவைப் பாருங்கள். பாவாடையைத் தூக்குகிறார். கால்களுக்கு இடையே சிறிது எச்சியை பூசுகிறார்.(வலிக்காமல் இருக்கவோ தெரியவில்லை). மிக இலகுவாக ஒரு பீர் கேசை தூக்கி பாவாடையூடாக கால்களுக்கிடையில் சொருகிக் கொண்டு நடந்து செல்கிறார். கூடவே குடும்பமும் செல்கிறது.

முழுவதும் வீடியோ கமெராவில் பதிந்துள்ளது. இம்முறை தப்பியிருக்கலாம்.
அடுத்தமுறை இவர்கள் கடைக்கு வந்தால் கடைக்காரர் அலேட்  ஆகி பினாலேயே காவலுக்கு ஆட்களை அனுப்பலாம்.





அதிகுறைந்த விலை IDD அழைப்புகளுக்கு DID இலக்கங்கள்.

உங்கள் Blog கிற்கு ஒரு www .com  முகவரியைப்  பெறுவது எப்படி?

மோட்டார் சைக்கிள் எவ்வளவு லாகவமாக களவாடப்படுகிறது பாருங்கள்.

உரிமையாளர் காரியாலயத்தின் கீழ் பகுதியில் மோட்டார் சைககிளை நிறுத்தி விட்டு வேலைக்குப் போகிறார். கள்வன் தனது மோட்டார் போல அதன் மேல் இருக்கிறான். பின் அதன்  பக்கமாக போயிருந்து சில வயர்களை வெட்டுகிறான்.

மீண்டும் வந்து தனது மோட்டார் சைக்கிள் போல அதன் மேல் அமர்ந்து வெட்டியா வயர்களை இணைத்து அதனை ஓட்டி செல்கிறான்.

5 மணிக்கு உரிமையாளர் காரியாலயத்திலிருந்து வந்து மோட்டார் சைக்கிளை காணமல் தவித்து போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.





A thief steals a motor cycle acting as his own one after cutting the wires and connecting them as the original owner had left it down and went to work in his upstairs office.

Friday, April 25, 2014

இரவு விடுதிகளில் ஆடப்படும் போல் டான்ஸ். Pole dance.

ஒரு டிவி நிகழ்ச்சியின் போது "போல்  டான்ஸ்" ஆடிக்காட்டிய  இவ் இளம் பெண் தனது லாவகமான உடலாலும் தனது தனித் திறமையாலும் அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். அந்த எஹு கம்பியில் சுழன்றாடி மேலும் கீழுமாக வேகமாக இசைக்கு ஏற்றவாறு அவர் சென்று வருவதைப் பார்க்க  எமக்கு தலை சுற்றுகிறது.

இதோ அந்த வீடியோ (மொத்தமாக பார்வையிட்டோர் தொகை 26,606,803 பேர் )








Ukraine Got Talent - The world's best pole dancer - Anastasia Sokolova

Pole dance is a form of performance art, traditionally associated with strip clubs, which combines dance and acrobatics centered around a vertical pole. This art form has recently gained popularity as a form of fitness and mainstream entertainment, practised by many enthusiasts in gyms and in dedicated dance studios. A wide range of amateur and professional competitions are held in many countries around the world.

நியூசிலாந்து ரக்பி விளையாட்டு வீரர்களின் போர் நடனம். தவறவிடாதீர்கள்.

ரக்பி ஆரம்பிக்க முன் இவர்கள் போடும் கடுமையான போர் நடனம் மற்ற நாட்டு வீரர்களின் ரத்தத்தை கொதிக்க வைக்கும் பார்வையாளர்களையும் சேர்த்துத்தான்.இவர்கள் ஆட்டத்தில் வெல்கிறார்களோ இல்லையோ இப்படி ஆட்டம் போட்டு வெருட்டி விடுவார்கள்.

NZ All Blacks Haka warrior dance.Watch these videos. Really worth.



Second video.


Ka mate! Ka mate! Ka ora! Ka ora!
Ka mate! Ka mate! Ka ora! Ka ora!
Tenei te tangata puhuru huru
Nana nei i tiki mai
Whakawhiti te ra
Hi !!!

I die! I die! I live! I live!
I die! I die! I live! I live!
This is the hairy man
Who fetched the Sun
And caused it to shine again
One upward step! Another upward step!
An upward step, another.. the Sun shines!!

Thursday, April 24, 2014

பேய்.பேய்.பேய்.உதைபந்தாட்டம் பார்த்துக் கொண்டிருபவர்கள் முன்னால் ஓடுகிறது.

 பேய் நிழல் உருவமாக பார்வையாளர்கள் முன்னால் ஓடுகிறது.உலகமே இதைப் பார்த்து வியக்கிறது. பொலிவியா நாட்டில் நடைபெற்ற போட்டி ஒன்றிலேயே  இந்தக் காட்சி ஒளிப்பதிவாகியுள்ளது. இப் போட்டியை டிவியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றே இதனை வெளியிட்டுள்ளது. இன்றயதினத்தில் இன்டநெட்டை இந்த செய்தியும் வீடியோவும் போட்டுக் கலக்குகின்றன.
முக்கிய குறிப்பு அது (பேய்) ஒரு வலையையும் ஊடறுத்து ஓடுகின்றது.

என்ன நினைக்கிறீர்கள்?
ஈவேரா பெரியார் ஆதரவாளர்களே நீங்களும் சொல்லுங்களேன்?


இதோ இதைப்பற்றிய விபரம் ஆங்கிலத்தில்
http://www.dailymail.co.uk/news/article-2611010/Football-spectators-spooked-ghost-appears-run-fans-match-Bolivia.htmlhttp://www.dailymail.co.uk/news/article-2611010/Football-spectators-spooked-ghost-appears-run-fans-match-Bolivia.html

Wednesday, April 23, 2014

சவுதி மன்னரின் மகளைப் பார்த்திருக்கிறீர்களா இதோ இங்கே.

ஆச்ச்ரியப்படதீர்கள், இவர் அழகான நவீன துணிச்சல் மிக்க ஒரு பெண்மணி. பொது இடங்களுக்கு போகும்போது சாதாரண துப்பட்டாவை முகம், தலை முடி கொஞ்சம் தெரியத்தக்கதாக .அணிந்து செல்வார்.

இவர் பெண்களுக்கான உரிமைகளுக்காக ஆதரவளிப்பவர்.

இவர் வெளிநாட்டு விருந்தாளிகள் வரும்போது வரவேற்பில் பங்களிப்பார்.
பெண்களுக்கான திருமண வயதை குறிப்பிடவேண்டுமெனவும் சிறுமிகளுக்கு செய்யப்படும் திருமணத்தையும் ஆதரிக்காதவர்.




"Adlah bint Abdullah bin Abdel Aziz Al Saoud, is a modern women, who calls for the freedom of women and who believes that “Al Niqab” is more of a tradition, while the scarf is more of what Islam calls for!"
Original News.


சிலவற்றை நம்பியேயாகவேண்டும்.

புயலுக்கு வேருடன் சாய்ந்த மரத்தை வெட்டி விறகாக ஆக்கத்  தீர்மானித்து வெட்டத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அடி மரம் அப்படியே  ......... வீடியோவைப் பாருங்கள்.
மரத்துக்கும் உயிர் வாழும் ஆசையுள்ளதோ தெரியவில்லை.



Tuesday, April 22, 2014

அழகிய இளம்பெண்ணின் குரலில் மிருகங்கள் பறவைகள் சத்தம்

அதைவிட அழகு அவர் ஒவ்வொருமுறையும் சத்தம் போட்டுவிட்டு சிரிப்பதும் வெட்கப்படுவதும்.தான். உங்களால் இயலுமென்றால் ஒரு மிருகமோ  அல்லது ஒரு பறவை போல சத்தமிட்டு யூடரியூப்இல்  போடுங்கள் பார்க்கலாம்.
இவருடைய திறமை மெச்சப்பட வேண்டிய ஒன்று அல்லவா.










http://nanavanthan.blogspot.com/2014/03/blog-www-com.html

Monday, April 21, 2014

மிகச் சிறிய இடை அழகியும் மிகப் பெரிய இடை அழகியும்.

இந்த இரு வெளிநாட்டுப்  பெண்களையும் பாருங்கள். சிறிய இடையுடனும் பெரிய  இடையுடனும் உள்ளனர் . தொப்பிளில் பம்பரம் விடும் நம்ப சினிமாக்காரன்கள் கைகளில் இவர்கள் அகப்பட்டால் என்ன சீன் போடுவார்களோ?
சிறிய இடைப்  பெண படுக்கும்போதும் இடுப்புக்கு இறுக்கமான உடை அணிந்துதான் தூங்குவாரம்.
மற்றவர் எப்போதும் சாப்பாடுதான் போல.

இதோ சிறிய இடை அழகி.


பெரிய  இடை அழகி.