Saturday, September 11, 2010
ஆண்களுக்கு மட்டும். உங்களுக்கு வயதாகிவிட்டதா இல்லையா?
இன்றைய தமிழ் சினிமாவில மட்டுமல்ல அன்றய தமிழ் சினிமாவிலுங் கூட 60 வயது கதாநாயகர்கள் 18 வயது கதாநாயகிகளை மரங்களுக்கு முன்னாலும் பின்னாலும் கலைத்துக் களைத்துப் பாடுவார்கள்,ஓடுவார்கள். காசைக் கொடுத்து இதையெல்லாம் பார்த்துவிட்டு பின்னர் வெளியே வந்து ஆகா ஓகோ என்று பினாத்தல் வேறு. கமல், ரஜனி போன்ற இன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்களாகட்டும், சிவாஜி, எம்ஜிஆர் போன்ற அன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்களாகட்டும் ஒரு பப்பிளிக் மீற்றிங்குக்கு வந்தால் கும்முனு இருக்காங்களே அது எப்படி?
அது அவங்களோட சமையல்காரர், வைத்தியர், ஒப்பனையாளரரோட திறமையால இப்படி அழகாகத் தோற்றமளிக்கிறாங்க. அவங்கெல்லாம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைன்னு உடம்பை சூப்பரா வச்சுக்கணும். ஏன்னா அது தான் அவங்களோட தொழிலுக்கு முதலீடு.
இது சரி உங்களுக்கு வயசாயிடுச்சா இல்லையா? தெரியலையா?
சரி. கீழேயுள்ள ஒரு கேள்விக்காவது ஆம் என்று பதிலளித்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று உங்க அம்மா அப்பாவிற்கு இருந்த வருத்தங்களைச் சொல்லி உடலை சோதனை பண்ணுங்க தேவையென்றால் மருந்து எடுங்க. ஏன்னா உங்களை நம்பிக் கொஞ்சப் பேருங்க வீட்ல இருக்காங்கல்ல அதுக்குத்தான்.
பஸ்ல உங்களக் கண்டா எந்திரிச்சு சீற் தாராங்களா?
ஒரு ரூபா காசு கீழே விழுந்தா குனிந்து எடுக்க மனம் வருகிதில்லையா?
பக்கத்து வீட்டு இளம்பெண் உங்களைப் பார்த்து அங்கிள் ரைம் என்னான்னு பயமில்லாம கேட்கிறாளா?
சம்சாரம் பக்கத்தில வராம கொஞ்சம் முன்னாடியோ பின்னாடியோ நடந்து வாராங்களா?
பாதையை கடக்கப் போனா வாகனங்கள் உடனேயே நிறுத்தி உங்களை கடந்து போகச் சொல்லுறாங்களா?
கிழவிங்க உங்களைக் கண்டால் நிலத்த பார்த்துக்கிட்டு போறாங்களா?
என்ன ஆமா ஆமா என்னுகிட்டே வந்தீங்களா?
சரி சரி ஏன் ஒங்க மனச உடைக்கணும்? நானும் எல்லாத்ததுக்கும் ஆமாதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment