Tuesday, January 25, 2011

அடி உதவுமாற் போல அண்ணன் தம்பி உதவாது. அது இவருக்குச் சரி.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்திலுள்ள மெக்சிக்கன் ரெஸ்ரோறன்ற்; உரிமையாளருக்கு இது நன்றாகத் தெரிந்துள்ளது போலும். இவரது மெக்சிக்கன் சாப்பாடான ராக்கோஸ் - சுருளாக்கப்பட்ட ரொட்டிக்குள் சமைத்த உணவுகளை பரிமாறல் - சான்ட்விச் போல. அத்துடன் மெக்சிக்கோவிற்குரித்தான ரெக்கிலா குடிபானமும் கிடைக்கும். (விஸ்கிக்கு சமனானது சொட் அடிப்பதற்கானது. பயங்கர விலை. இதைக் குடிப்பதற்கு தனி முறைகளுண்டு)
இவர் இவ்வளவு காலமும் சாதாரண இறைச்சி வகைகளை ராக்கோஸ் உள்ளே வைத்துக் கொடுத்தவர்.வியாபாரம் ஏற ஏற வாத்து, ஆமை, தவளைக்கால்கள், என முன்னேறி பாம்பு, கலைமான், முதலை, கங்காரு இறைச்சி என கொடிக்கட்டிப் பறந்தவர் திடீரென சிங்கத்தின் இறைச்சி வைத்த ராக்கோஸ் எட்டு டாலருக்கு வழங்கவுள்ளதாக இவர் அறிவித்ததுதான் தாமதம் வாடிக்கையாளர்கள், உறவினர்கள், எனப் பலரும் இவருக்கு கோல் எடுக்கப் பயந்து போன இவர் சிங்கத்தின் இறைச்சி திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். என்றாலும் எதிர்காலத்தில் பல புதுவகை இறைச்சிகளை அறிமுகப் படுத்தவுள்ளதாக பினாத்திக் கொண்டுள்ளார்.
இதைக்குடிக்க ஊறுகாயில்ல உப்புந் தேசிக்காயும்;தான் தேவை.
ஆணா? பெண்ணா? வித்தியாசமேயில்ல ஜமாய்ங்க. ஊரு அப்படி.
அப்படியே அந்த வீடியோவை நினைவில வச்சுக்கங்க, நாளைக்கு அமெரிக்கா போனா தேவைப்படுமல்லவா?






No comments:

Post a Comment