Sunday, May 15, 2011

வடிவேலு தாடிவேலு ஆகி தலைமறைவு?


தேதிமுக மதுரையில் வலை வீச்சு. வடிவேலு என்கின்ற எடுப்பார் கைப்புள்ள எஸ்கேப்.
நக்கல்காரன் களிப்பு. தப்பு தப்பு கணிப்பு (எப்பவுமே தப்பாத்தான் எலக்ஸன கணிப்பாங்களோ?)
அம்மா வீட்டு முன் அங்கத்துவ பத்திரத்துடன் நிற்கிறாராம் என கேள்வி. தேதிமுக ஆளுங்களுக்குச் சொல்லிடாதீங்க. அவங்க உருட்டுக்கட்டையோட மதராஸ் முழுக்கத் தேடுறாங்களாமில்ல.
சரி நம்ம வடிவேலுதல தலைல அடிச்சிக்கிட்டு என்னதான் சொன்னாருன்னு கேட்போமே?
மாட்டிவிட்டுட்டாங்கையா மாட்டிவிட்டுட்டாங்க.
'எனக்கு இருக்கற மொத பயம் இவ ரொம்ப நல்லவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறான்னு சொல்லி தமிழ்நாடு பூராவுமுள்ள தேதிமுக கிளை அலுவலகங்கள்ள நாலு, நாலு நாளைக்கு வைச்சு அடிக்கப்போறாங்கிறாங்களோ என்கிறதுதான்.

படிச்சுப் படிச்சு சொன்னேன் சவால் விட்டபடி விஜயகாந் 'சாரோட' (சார் சொல்லிப் பாப்பம் அப்பவாவது உருட்டுக்கட்டய விட்டிர்ராங்களான்னு) எதிர்த்து எலக்ஸன்ல நிக்கிறேன்னு. பாவிப் பயங்க அட்வைஸ் அட்வைஸ்னு என்ன சொன்னாங்க?
ஓட்டுக் கேட்டு தொகுதிக்குப் போனே, அண்ணனோட ஆளுங்க டிராயர மொத மீட்டிங்ல மொத மேடயிலேயே உருவிடுவாங்கன்னாங்க. சரி சினிமாவில வாறமாதிரி ஜீன்ஸ போட்டா உருவ சான்சே இல்லைன்னேன்.
விட்டாங்களா? டிப்பாஸிட் கிடைக்கவே கிடைக்காதுன்னாங்க. மதுரக்காரங்க படம் எடுத்தது மாதிரின்னாங்க. பானருக்குப் பணம், மீட்டிங் செலவு, வாக்காளப்பெரு மக்களுக்கு குடிக்குப் பணம். அப்பப்பா ஏற்கனவே நம்ம உடன் பிறவா அண்ணன் சிமுக்கு (சிங்கமுத்து அண்ணே உங்க பேரைக்கூட மருவாதயாத்தான் சொல்லுறன், அந்த உருட்டுக்கட்டை விவகாரத்தை கை விட்டுருங்கண்ணே.) பணங் கொடுத்து தலயில துண்ட போட்டுக்கிட்டிருக்கன். இதுக்குள்ள எலக்ஸன்ல இது வேற செலவா?
வேண்டாம், மேடைல ஒரு பக்கமா நின்னு விஜயகாந் 'சார' ஒரேயொரு கேள்வி கேட்டுட்டுப் போயிடுறேன்னேன். அப்புறமா மீட்டிங் முடிஞ்சாப்புறம் பெரியவரு சொன்னாரு அடேங்கப்பா ஒன்னப் பாக்க இவ்வளவு கூட்டமா? தமிழ் நாட்டயே ஒரு சுத்து சுத்திவான்னாரு. நேத்திக்கு அவர்கிட்ட போய் நிலமய சொன்னேன்.
இந்தப் பெரிய சீஎம்மையே தமிழ்நாட்டுக்காரங்க ஓய்வெடுக்கச் சொல்லிட்டாங்க, நீ எம்மாத்திரம்னாரே.
அண்ணே வடிவேலு கோச்சுக்காத பிளாக்கில சிரிக்கணும்ணு எழுதினதுதாண்ணே.
எலக்ஸன் நேரத்ல தலைவரா இருந்தவர எலக்ஸன் முடிஞ்சப்புறம் இந்த வலைப்பின்னல்காரங்க எல்லாம் சேர்ந்து ரொம்ப பின்னி எடுத்து நாறடிச்சிட்டாங்க.
tamilmanam.net/forward_url.php?url=http://ragariz.blogspot.com/2011/05/i-will-meet-vijaykanth-vadivelu.html&id=864972
thevarcommunity.blogspot.com/2011/04/blog-post_7715.html

2 comments:

rajamelaiyur said...

Vadivelu ku aappu ready

rajamelaiyur said...

Vadivelu ku paytheyam. .

Post a Comment