யாழ்ப்பாணத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் பொருட்களை இடத்துக்கிடம் எடுத்து செல்ல பெரும் பங்காற்றின. இம் மாடுகள் வடக்கன் மாடு காங்கேயன் மாடுகள் என அழைக்கப்பட்டன இம் மக்களால் அழைக்கப்பட்டன. அழகான வெள்ளை நிற மாடுகள் கழுத்தில் பெல்டில் கட்டிய சலங்கைகள் குலுங்க குலுங்க இவை செல்லும் அழகே அழகு.
(இது சிறிய வண்டில்)
இவை இழுத்துச்செல்லும் வண்டில்கள் பெரியவை. அதன் அடிப்புறத்தில் இவற்றுக்கான சாப்பாடுகள் கட்டப்பட்டிருக்கும். பின்புறத்தில் ஒரு மண்எண்ணெயில் எரியக்கூடிய அரிக்கன் லாம்பு கட்டப்பட்டிருக்கும். இது இரவு நேரத்தில் வண்டியை அடையாளங் காட்டவென எரியவிடப்படும்.
கொடிகாமம் சாவகச்சேரி பக்கங்களில் இருந்து பின்னிய தென்ஓலைகள் இம் மாட்டு வண்டிகள் ஏற்றி யாழ் நகரை இரவு வந்தடைந்து வீடு மேயவும் வேலியடைகவும் என ஓலைகளை வீடு வீடாக பறித்துவிட்டு செல்வார்கள்.
அதேபோல தீவுப்பகுதிகளிலிருந்து வண்டில் வண்டிலாக பூவரசம் இலைகள் ஏற்றிக்கொண்டு யாழ் நகரை இரவு வந்தடைந்து சத்திரம் சந்தி,நாவலர் சந்தி போன்ற இடங்களில் தங்கி காலையில் கொக்குவில், இணுவில் சுன்னாகம் போன்ற இடங்களுக்கு சென்று விற்பார்கள்.
அதே போல இவ்வகை வண்டில்கள் சுன்னாகம் மருதனாமடம் போன்ற இடங்களில் இருந்து வாழைக்குலைகளை ஏற்றிக்கொண்டு யாழ் நகரை பகல் வேளைகளில் அடைந்து சந்தையில் கொடுப்பார்கள்.
இவற்றை விட மாட்டுவண்டில் சவாரிக்கு என விசேட வகை மாடுகள் இங்கு வளர்த்தார்கள் இன்றும் வளர்க்கிறார்கள் . இவற்றின் பெயர்கள் புதுமையானவை.கலருக்கேற்ப இவை வழங்கப்படும். நரையன் பொட்டன் வெள்ளையன் என்ன விதம் விதமாக வழங்கப்படும். போட்டிகளில் இரட்டை திருக்கை ஒற்றைத் திருக்கை என இரண்டு வகைப்படும். போட்டிகளின் முன் சிலர் மாடுகளுக்கு சாராயம் பருக்கி விடுவார்கள் வேகமாக ஓடுமென்று. மாட்டுவண்டில்கள் போட்டிகளில் ஓடும்போது மாடுகளை துவரங் கம்புகளால் அடிப்பார்கள். அதன் அடியில் பொருத்தி வைத்துள்ள ஆணிகளால் குத்துவார்கள். சிறு வில்லுக் கத்திகளாலும் குத்துவார்கள். அதை விட வண்டில் சாரதிகளின் கால்கள் மாடுகளின் கால்களுக்கிடயிலும் புகுந்து விளையாடும்.
அநேகமான போட்டிகள் யாழ் முற்றவெளியில் நடக்கும். முன்னர் நடந்த தினகரன் விழா இதற்கு மிகவும் பிரசித்தம். இப்போதும் வல்லைவெளியில் கோவில் திருவிழா நடக்கும் காலங்களில்திருவிழா பார்க்கபோகும் வண்டில்காரர்களுக்கிடையில் ஓட்டப்போட்டி நடப்பது வழக்கம்.

No comments:
Post a Comment