ஒருவரை மற்றவர் திட்டுவதென்பது உண்மையில் ஒரு கலைதான் . ஒரு சிலரால் திட்டவே முடியாது. ஒரு சிலருக்கு மற்றவர்களைத் திட்டாமல் இருக்கவே முடியாது.
இவர்கள் திட்டும் சொற்களும் வார்த்தைகளும் இவர்கள் கண்டு பிடித்தவை அல்ல. இவர்கள் பிறப்பின்போதே இவர்களுக்குள் பதிவாகி வந்தவைதான் அவை.
இதோ சாம்பிளுக்கு சில.
சரியான அலுகோசு.
அலுகோசு என்பது போர்த்துக்கேய மொழியில் தூக்கிலிடுபவன்
சரியான எம்டன்
எம்டன் என்பது ஜெர்மனியின் அழிக்க முடியாதென கருதப்பட்ட பிரபல சண்டைக் கப்பல்
பரதேசி - பிச்சைக்காரன்
பன்னாடை - பனை ஓலை வளரும் இடத்தில் உள்ளது.
கொள்ளையில் போவானே
கொள்ளை என்பது எலியினால் பரவிய பிளேக் என்னும்காய்ச்சல்.
கோதாரியில போவானே
கோதாரி என்பது காலரா என அழைக்கப்படும் நோய்
பாடையில போவானே
பாடை என்பது இறந்த ஒருவரை சுடலைக்கு கொண்டு செல்ல பயன்படுவது.
முண்டம்
முண்டம் தலை இல்லாத உடல்.
No comments:
Post a Comment