Sunday, September 2, 2012

கொத்து ரொட்டி என்ற பெயரில் கொத்தாத ரொட்டி.


மொக்கன் கடை புட்டும் ஆட்டிறைச்சிக் கறியும் குடிக்கவும் விட்டுச் சாப்பிடவும் எலும்பு ரசமும் என்றிருந்த காலம் மாறி கொத்து ரொட்டியும் கொக்கோ கோலாவும் என இளைஞர்கள் மாற்றமடையப்பட வைக்கப்பட்டுள்ளனர்.  இரவு 11 – 12க்கும் கூட டண டண என கொத்து ரொட்டி கொத்தின காலமும் இருந்தது. அப்பெல்லாம் நைற் கடைகளிருந்தன ஆனால் இரவு 2 மணிக்குக்கு கொத்து செக்ஸன் மட்டும் பூட்டப் பட்டுவிடும். இப்பவும் பின்னேரத்திலயிருந்து விடிய விடிய கொத்து ரொட்டியிருக்கு ஆனால் அந்தக் கொத்திற சத்தந்தானில்லை.


கொத்துரொட்டி தயாரிப்பும் பயங்கரமாக முன்னேறி பல வகையான கொத்துரொட்டிகள் வந்துவிட்டன.
1. கோழிக் (சிக்கன் ) கொத்துரொட்டி.
றோஸ்ட் சிக்கனா? கறிக்குள் போட்ட சிக்கனா?;
றோஸ்ட் சிக்கன் எண்டால் உடைத்துப் போடுவதா முழுசா போடுறதா?
2. மீன்; கொத்துரொட்டி.
3. சீஸ் கொத்துரொட்டி.
4. முட்டை கொத்துரொட்டி.
5. மரக்கறிக் கொத்துரொட்டி.
அதென்ன கொத்தாத ரொட்டி?
இப்போ கொழும்பில் எதற்கெடுத்தாலும் வழக்கு வழக்கு அதற்குமேல் தண்டனை.
கொத்து ரொட்டி கடைகளுக்கு அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் தங்களுக்கு தூக்கம் கெடுவதாக கொத்து ரொட்டி கடைகளுக்கு எதிராக வழக்கு போடப்போவதாக மிரட்டுவதனால் கடை முதலாளிகள் முதல் நாள்  கொத்து ரொட்டிக்கெனப்போடப்படும் ரொட்டியை தூளாக வெட்டி வைத்துக்கொள்வார்கள்.


யாராவது கொத்து ரொட்டி ஓடர் செய்தால் முட்டையை உடைத்து கொத்து ரொட்டி தட்டில் பொரியவிட்டு பின் கொத்து ரொட்டிக்கான சகல சாமான்களையும் அத்துடன் போட்டு 4 புரட்டல், 2 சுழாவல், 2 தட்டல். ஆகா உங்கள் கொத்து ரொட்டி ரெடி. சத்தமே இல்லாத கொத்தாத கொத்து ரொட்டி இதுதான்.
(கொத்து ரொட்டியின் பெயரை மாற்றி புரோட்டா புரட்டு என்போமா?)
வேணுமா வேணாமா? ஓட்டுப்போடுங்க.

No comments:

Post a Comment