யாழ் மக்களின் வாழ்க்கையோடு சினிமாவும் பின்னிப்பிணைந்துள்ளது என்பது அசைக்க முடியாத உண்மை ஒன்று.புது மணத்தம்பதிகளா? பரீட்சையில் பாஸா? தீபாவளி, பொங்கலா, புது வருடப்பிறப்பா நேராக சினிமாதான்.
யால் நகரில் மொத்தம் 11 தியேட்டர்கள் இருந்தன.
மனோகரா
ராஜா
வின்ட்சர்
லிடோ
வெலிங்டன்
ஸ்ரீதர்
ராணி
சாந்தி
ஹரன்
ரீகல்
றியோ
செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் தூரவுள்ள ரசிகர்களுக்காக விசேட பட பஸ் இரவு 12 மணியளவில் எல்லா ஊர்களுக்கும் விடப்படும்.
24 மணி நேர சாப்பாட்டுக்கடைகள் எல்லாமே அசைவ உணவுக்கடைகள் கொத்து ரொட்டியுடன் படம் பார்த்து விட்டு வரும் ரசிகர்களுக்காக இரவு 12 மணிக்கும் திறந்திருப்பார்கள். A/L பரீட்சைக்கு இரவு இரவாக படிக்கும் மாணவர்களும் இங்கே வருவார்கள்.
பிளவுஸ், பரடைஸ், அலியா ஹோட்டல் என்பன அப்போதய பிரசித்த கடைகள். தற்போது பரோட்டா என அழைக்கப்படுவது முன்னர் வீச்சு ரொட்டி என இங்கு அழைக்கப்பட்டது. விலை 5 சதங்கள் மட்டுமே.பிளேன் டீயும் 5 சதம்தான்.
கலரியில் இருந்து படம் பார்க்க 50 சதங்கள் அதுவே பழைய படமாயின் 35 சதங்கள மட்டுமே. ஒரு தியேட்டர் மட்டும் பழைய ஆங்கில படங்களை பெயரை வெட்டிவிட்டு புதிய படம் மாதிரி புதிய பெயர் வெளியில் போட்டு 50 சதம் கட்டணம் வசூலிப்பர். நமது வித்துவான்கலீல் ஒருவர் எப்படியாவது கண்டுபிடித்து விடுவார். அவர் எழும்பி நின்று அடுத்த சீனில கார் நெருப்பு பத்தின இது அந்த படம் என பெயர் சொல்லுவர். அப்படி நடந்தால் தியேட்டரில் உள்ள அனைவரும் எழும்பி நின்று ஓவென கத்துவார்கள்.பிறகென்ன மேனேஜர் வந்து எல்லோருக்கும் வெளியே போகும்போது 15 சதம் தரப்படும் என்று சொல்லுவர் பின் அதன் படி தரவும்படும்.
ரீகல், றியோவில் சகல ஆங்கில படங்களும் காண்பிக்கப்படும். சத்தமில்லாமல் சகல வயது வந்தோருக்கான படங்களும் காண்பிக்கப்படும். வயது வந்தோருக்கானது என போஸ்டரில் பொடப்பட்டிருக்கும்.இதற்காக ஒருவரும் ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார்கள். சாதாரண படம் ஒன்றை பார்த்தது போல வழமையான ரசிகர்கள் வந்து பார்த்து செல்வார்கள்.
எம்ஜிஆர் படங்கள் என்றால் முதல் நாள் காட்சி இரவு 12 மணிக் காட்சியுடன்தான் ஆரம்பிக்கவேண்டும். வாழை தோரணம் கட்டி படப்பெட்டிக்கு பூசை வைத்துதான் ரசிகர்கள் படத்தை ஆரம்பிக்க விடுவார்கள்.முதல் காட்சிக்கான டிக்கெட்கள் இரசிகர் மன்றகாரர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அநேகமான தியேட்டர்களில் கம்பிக் கூடுகளுக்குள் நின்று தான் டிக்கெட் எடுக்கவேண்டும். தியேட்டர்களில் எராளமான அடியாட்கள் வேலை செய்தார்கள். ஏதாவது பிரச்சனை என்றால் உண்டு இல்லையென்று பண்ணிவிடுவார்கள்.
சைக்கில் உள்ளவர்களுக்கு டிக்கெட்டில் முன்னுரிமை உண்டு ஏனென்றால் சைக்கிள் பார்கிங் கட்டணமுண்டு. அதை விட தியேட்டர்களில் வேலை செய்பவர்கள் அந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு படம் முடிய முன் மீளவும் ஸ்டாண்டில் விட்டுவிடுவார்கள்.
எனது நண்பர்களுடன் படம் பார்த்த அனுபவம்.
கூட்டமாகத்தான் படம் பார்க்கசெல்வோம். குறித்த இரண்டு நண்பர்கள் கிட்டே மட்டும் இருக்கமாட்டேன்.
ஒருவன் படத்தில் யாராவது பயங்கரமாக சண்டையின் போது குத்தினால் அதே குத்தை அவனறியாமலே அருகிலுள நண்பரின் கைகளில் விடுவான். அப்படி இடி எனக்கும் விழுந்துள்ளது. சண்டைப்படமாகில் அவனருகே இருந்து பார்க்கவே மாட்டேன். அவனிடம் அடி வாங்க ஏலாது.
அதே போல இன்னொரு நண்பன் படத்தில் ஏதாவது காமெடி சீன் படத்தில் வந்தால் போதும் தான் சிரிப்பது மட்டுமில்லாமல் அவனை அறியாமலே இரண்டு கைகளில் உள்ள விரல்களினாலும் எமது வயிற்றில் கீச்சம் காட்ட தொடங்கி விடுவான் சிரியடா சிரியடாஎன்று. எனவே இவனுக்கும் பக்கத்தில் இருந்து படம் பார்க்கமுடியாது.
ஏற்கனவே அந்த படம் பார்த்த சில நண்பர்கள் பக்கத்தில் இருந்துவிட்டால் பிளாக் மெயில் பண்ணுவார்கள் இன்டர்வெல்லுக்கு கச்சான் வாங்கி தராவிட்டால் படத்தின் கதையை சீன்கள் வருமுன்னே சொல்வோமென. பிறகென்ன கச்சான் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும்.

1 comment:
அழகான அந்தநாட்கள் ஞாபகத்தை அருமையாக பகிர்ந்து இருக்கின்றீர்கள் ஐயா!
Post a Comment