முற்காலத்தில் கப்பலில் செல்லும் தமிழ் கடலோடிகள் தம்முடன் எடுத்துசெல்லும் காகங்களை பறக்க விட்டுப்பார்ப்பார்கள். அவை திரும்பி வந்தால் கரை தூரமாகவுள்ளது எனக் கொள்வர். அவை பறந்தே போய் விட்டால் கரை அண்மையில் உள்ளதென்பர்.
சனி பகவானின் வாகனமாக காகம் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இதற்கு சனிக்கிழமைகளில் அநேகமான வீடுகளில் மதிய உணவு வழங்கப்படும். விசேட நாட்களிலும் அதுவும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் இவற்றிற்கு சாப்பாடு வழங்கவேண்டுமென விரதமிருப்போர் கா கா வென ஓடித்திரிவதை காணமுடியும்.
பெரிய விருந்துகளின் போது காகங்களுக்கு உணவு முதலில் வைத்து விட்டே பந்தியில் உணவு பரிமாறப்படும். முதலில் உண்ட காகம் இறக்காமலிருந்தாலே பந்தியில் உள்ளவர்கள் உணவை சாப்பிட தொடங்குவர்.
ஒரு பழைய பாடலில் காகங்களிடம் காணப்படும் ஆறு நற்குணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் – சாலவே
உற்றாரோ(டு) உண்ணல் உறவாடல் இவ்ஆறும்
கற்பாயே காக்கைக் குணம்.
(விநோத ரச மஞ்சரி)
ஒரு காகம் இறந்து விட்டால் மற்ற காகங்கள் எல்லாம் ஒன்று கூடி அதற்காக அழுவதையும் நீங்கள் காணமுடியும்.
அதே போல இவை தோட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் ஏதாவது சிறு மிருகங்கங்கள் இறந்துவிட்டால் இவை ஒன்றுகூடி அதனை தின்று முடித்துவிடும்.
இவற்றின் இரண்டு கண்களுக்கும் பொதுவாக ஒரு கண்மணியே உள்ளதாக கூறுவர்.
துவக்கை கண்டால் இவை பறந்து விடும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் சூரியனைக் கண்டாலும் காகம் பறந்து விடும்.
இப்போவெல்லாம் மரங்கள் நகரங்களில் இல்லாத படியால் நாய்கள் எல்லாம் மின்சாரக் கம்பங்களில் ஒன்றுக்கு போகின்றன. காகங்களும் தமது கூடுகளை மின்சாரக் கம்பங்களில் கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
முன்னர் போல கூடு கட்ட மரக் குச்சிகள் இல்லாத படியால் மெலிய கம்பிகளை தேடிப் பிடித்து அதன் மூலம் கூடு கட்டுகின்றன.
பாவம் குயில்கள்தான் நகரங்களில் முன்னர் போல மரங்களில் ஒளிந்திருந்து காகக் கூடுகளில் முட்டை இட்டு தமது இனத்தை வளர்க்க முடியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன.
காகங்கள் இரண்டு வகையாக இங்கு பார்க்கப்படுகின்றன.
1. அண்டங்காகம் 2. அரிசிக்காகம்
நாட்டுக்கு நாடு இவை கரைவது (கத்துவது) வித்தியாசமாகவுள்ளது.
காகங்கள் மிகவும் புத்திகூர்மை உள்ளவை.
இதோ ஒரு வீடியோ.

No comments:
Post a Comment