Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, January 10, 2013

கருணா கூரையில் - கடவுள்?


கருணா கடவுள்  பக்தி மிகுந்தவன்.  தினமும் குளித்து 3 முறை  ஆசாடமாக பூசை செய்யத் தவறாதவன், எடுக்காத காவடியா படிக்காத தோத்திரங்களா?
அவனுக்குக் கடவுள் தான் எல்லாமே.
கடவுளும் எல்லாவற்றையும் அவனக்கு மறக்காமல் கொடுத்து வந்தார் .

ஊரில் ஒரு பெரிய வெள்ளம் வந்து ஊரிலுள்ள எல்லோருமே தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு புறப்பட்டு செல்லத் தொடங்கினர். அவ் வேலை சிலர் வந்து  கருணாவையும் தம்முடன் வரும் படி அழைத்தனர்.

 கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.

பின்னர் வெள்ளம்  கூடுவதைக்  கண்ட  பொலிஸ் அவருக்கு ஒரு டிராக் வண்டியை அனுப்பி அதில் அவரை வரச்சொல்லி அழைத்தனர்.
கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மீண்டும் மறுத்து விட்டார்.

வெள்ளம் மிகவும் கூடி கருணா வீட்டுக் கூரையில் தனது உயிரைக்காக்க ஏறியிருந்தார்.
கடற்படையின் படகில்  வந்து அவரை வரும்படி அழைத்தனர். அப்போதும் கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.

பின்னர் விமானப்படையின் ஹெலிகாப்டர் வந்து அவரைக் காப்பாற்ற முன்வந்தனர். அப்போதும் கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.
ஆக மொத்தம் அன்றைய பொழுதில்  கருணா வெள்ளத்தில் மூழ்கி  இறைவனடி சேர்ந்தார்.
அங்கே போனவர் சும்மா இருக்காமல்  கடவுளைத் தேடிபோய் சண்டையிடத் தொடங்கினர்.
கடவுளே உன்னை நான் எவ்வளவு தூரம் நம்பினேன் நீ என்னை வந்து கப்பற்றுவாய்  என. ஆனால்  நீயோ என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவிலலையே. ஏன்  நான் உன் பக்தன் இல்லையா?

அதற்கு கடவுள் மடையா  உ ன்னைக் காப்பாற்ற பொலிஸ் டிராக், கடற்படையின் படகு, விமானப்படையின் ஹெலிகாப்டர் எல்லாவற்றிலும் வந்தனே ஏன் நீ அவ்வேளை என்னுடன் வரவில்லை என்றாரே பார்க்கலாம்.

Monday, January 7, 2013

காமெடி கதைகள் 2

சில வருடங்களுக்கு முன்னர் ரேடியோவில் கேட்டது. சத்தியமாக சொல்லுகிறேன் இது என்னுடைய கதையல்ல. உரிமையாளர் இருப்பின் உரிமை கோரலாம்.
ஓரு ஊருக்கு நம்ப கதாநாயகன் படப்பிடிப்பு சம்பந்தமாகச் சென்றிருந்தார். அவ்வூர் பெரியமனிதர் ஒருவர் அவருக்கு விருந்து வைக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். மறுக்க முடியாமல் கதாநாயகனும் குறித்த நேரத்தில் பெரியமனிதர் வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேர உரையாடலின் பின் வீட்டுக்காரர் தட்டிலா வாழையிலையிலா உணவருந்த விரும்புகிறீர்களெனக் கேட்டார். நம்ப கதாநாயகனும் பெரிதாகத் தலையாட்டியபடி  வாழை இலையிலேயே சாப்பிட்டுருவோமேன்னாரு.


இதைக்கேட்டதும் வீட்டுக்காரர் முகம் வாடிவிட்டது. தம்பி இருந்த வாழை இலையெல்லாம் முன்னாடி வந்தவங்க பாவிச்சிட்டாங்க. இருந்தாலும் அதுல நல்ல ஒண்ண எடுத்து கழுவிக் கொண்டாரேன்னார். நம்பாளு பாஞ்சு விழுந்து நா தட்டிலேயே சாப்பிட்டுக்கிறேன்னு குழறத் தொடங்கினார்.

ஒருமாதிரி உணவருந்தி முடிந்த பின்னர் பெரியமனிதருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார். நம்ப கதாநாயகன் வாசலருகே சென்றிருக்கமாட்டார் மீள வந்து 'சரி ஐயா, நான் வரும் போதும் சரி, போகும் போதும் சரி, உங்க நாய் வாலாட்டிக் கிட்டிருந்தது. ஆனா நான் சாப்பிடும்போது மட்டும் அது ஏன் என்னப்பாத்து உறுமிக்கிட்டேயிருந்திச்சு என்றார்.'
ஓ அதுவா, நம்ம டாமிக்கு யாராச்சும் அதோட தட்டில சாப்பிட்டா அவ்வளவா பிடிக்காது. நீ;ங்க அதோட தட்டில சாப்பிட்டிங்கள்லா, அதுக்குத்தான் அது உறுமிக்கிட்டு இருந்திச்சு என்றார்.

நம்ப கதாநாயகன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து அங்கிருந்த திண்ணையில அமர்ந்திருந்த பொக்குவாய்ப் பாட்டிக்கு அருகிலமர்ந்தார்.
பாட்டிக்கு அருகில் வெற்றிலைப் பெட்டியைக் கண்டதும் இவருக்கு வெற்றிலை போட ஆசை வந்து பாட்டி ஒரு வாய் வெற்றிலை கொடேன் என்றார்.

இந்தாப்பா ஒரு முழுப்பாக்கும் ஒரேயொரு வெற்றிலையும் தான் இருக்கிறது எனக்கொடுத்தாள்.

நம்ப கதாநாயகனும் ஒரே கடியில் பாக்கை உடைத்து வெற்றிலையுடன் மெல்லத் தொடங்கினார். இதைப் பார்த்த பாட்டி அடேங்கப்பா உன் பல்லுங்க சரியான ஸ்ராங்கு. நானும் ஒரு வாரமா இந்தப் பாக்கை உடைக்கணுமுன்னு வாயுக்குள்ளேயே வைச்சிருந்து எவ்வளவோ முயற்சி  செஞ்சேன். ஓண்ணுமே சரிவரல்ல.


பாட்டி ஒரு வாரமா இந்தப் பாக்கை வாயுக்குள்ளேயே வைச்சிருந்தியா எனக்கேட்டார் நம்ப கதாநாயகன்.
ஆமா. ஏன் கசக்குதா என்று பாட்டி கேட்டாள்.

அன்னிக்கு அந்த வீட்டைவிட்டு ஓடத்தொடங்கிய நம்ப கதாநாயகனை யாரும் கண்டதாகத் தகவல் இல்லீங்க.

Sunday, January 6, 2013

காமெடி கதைகள் - 1

மகாராஜா ஒருவர் தான் வாழ்க்கையில் காணத பழம் ஒன்றை கொண்டுவந்து தரும் தனது நாட்டு பிரஜைககு தனது நாட்டிலுள்ள ஒரு ஊரை பரிசாக தருவதாகப்  பறை சாற்றினான்.
லட்சக் கணக்கானோர் அரசனுடைய மாளிகைக்கு வெளியே வரிசையில் தமது அதிர்ஷ்டத்தை பரீட்சிக்க வந்து நின்று கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்துப் பயந்த அரசன் தனது முடிவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அதில் ஒன்று தான்  அப் பழத்தை ஏற்கனவே  பார்த்திருந்தால்  அதனை முழுதாக விழுங்க வேண்டும் என்பதாகும் .

இதை கேட்டவுடன் மாம்பழம் வாழைப்பழம் போன்றவற்றுடன்  நின்றவர்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தனர்.
மற்றவர்கள் மனமாற்றம் இன்றி வரிசையில் நின்றனர்  ஒருவர் தேசிக்காயை அரசனுக்கு காட்டினர் . அரசன் அதை பார்த்துள்ளதாக கூறினான. மனமுடைந்த அவர் அரசன் ஆணைப்படி அந்த தேசிக்காயை முழுதாக விழுங்கினார்.

அடுத்து  வந்த விளாம்பளக்கரரும் கஷ்டத்துடன்  அந்த விளாம்பழத்தை  முழுதாக விழுங்கினார்.

சிரிப்புடன் வந்த பபபா பழக்காரரும்  அழுதபடி அதனை விழுங்கினார்.

பின்னால் வந்தவர் அன்னாசிப்பழம்  கையில் ஏந்தியவண்ணம் அரசனைப் பார்த்து தலை வணங்கி பரிசைக் கேட்டான். அரசன் கோபத்துடன் தன அப் பழத்தை பர்த்துளதாக கூறி அதனை விழுங்க சொன்னான்.

அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் அதை விழுங்குவதும் பின்னர் அதனை வெளியே எடுத்து சிரிப்பதுவுமாக இருந்தான். அவன் வாய்  எல்லாம் ரத்தம் ஓடியபடி இருந்தது. அப்படியும் அவன் சிரிப்பை விடவில்லை.

அரசன் பயங்கர கோபத்துடன் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டான் .
 அதறகு அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் சொன்னான், ராஜாவே நான்  இந்த அன்னாசிப்பழத்துடன் இந்த கஷ்டப்படுகிறேனே பின்னால்  ஒருவன் பலாப்பழத்துடன் அவன் அதனை எப்படி விழுங்கப்போகிறான் என்பதை நினைக்கும் போது இந்த கஷ்டத்துள்ளும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றான்.

அரசன் உடனடியாக  பலாப்பழத்துடன் நிற்பவனை  உள்ளே  வர சொல்லி ஆணை இட்டான். அவன் மகா புத்திசாலி. அன்னாசிப்பழத்துடன் இவன்  படும் கஷ்டத்தை கேள்விப்பட்டவுடன் உடனடியாக பழத்தை வெட்டி அதிலொரு சுளையை மட்டும் எடுத்தக் கொண்டு ராஜா முன் நின்றான்.

அரசன்  தான்  அப் பழத்தை பர்த்துளதாக கூறினாலும் அவனது புத்தி சாதுரியத்தை பாராட்டி சொன்னபடி தனது பரிசை அவனுக்கு வழங்கினான்.
அந்த ஊர் தான் இன்று பழவூர் எனவிருந்து இன்று பளை என்ன அழைக்கப் படுகிறது.