கருணா கடவுள் பக்தி மிகுந்தவன். தினமும் குளித்து 3 முறை ஆசாடமாக பூசை செய்யத் தவறாதவன், எடுக்காத காவடியா படிக்காத தோத்திரங்களா?
அவனுக்குக் கடவுள் தான் எல்லாமே.
கடவுளும் எல்லாவற்றையும் அவனக்கு மறக்காமல் கொடுத்து வந்தார் .
ஊரில் ஒரு பெரிய வெள்ளம் வந்து ஊரிலுள்ள எல்லோருமே தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு புறப்பட்டு செல்லத் தொடங்கினர். அவ் வேலை சிலர் வந்து கருணாவையும் தம்முடன் வரும் படி அழைத்தனர்.
கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.
பின்னர் வெள்ளம் கூடுவதைக் கண்ட பொலிஸ் அவருக்கு ஒரு டிராக் வண்டியை அனுப்பி அதில் அவரை வரச்சொல்லி அழைத்தனர்.
கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மீண்டும் மறுத்து விட்டார்.
வெள்ளம் மிகவும் கூடி கருணா வீட்டுக் கூரையில் தனது உயிரைக்காக்க ஏறியிருந்தார்.
கடற்படையின் படகில் வந்து அவரை வரும்படி அழைத்தனர். அப்போதும் கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.
பின்னர் விமானப்படையின் ஹெலிகாப்டர் வந்து அவரைக் காப்பாற்ற முன்வந்தனர். அப்போதும் கருணா கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மறுத்து விட்டார்.
ஆக மொத்தம் அன்றைய பொழுதில் கருணா வெள்ளத்தில் மூழ்கி இறைவனடி சேர்ந்தார்.
அங்கே போனவர் சும்மா இருக்காமல் கடவுளைத் தேடிபோய் சண்டையிடத் தொடங்கினர்.
கடவுளே உன்னை நான் எவ்வளவு தூரம் நம்பினேன் நீ என்னை வந்து கப்பற்றுவாய் என. ஆனால் நீயோ என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவிலலையே. ஏன் நான் உன் பக்தன் இல்லையா?
அதற்கு கடவுள் மடையா உ ன்னைக் காப்பாற்ற பொலிஸ் டிராக், கடற்படையின் படகு, விமானப்படையின் ஹெலிகாப்டர் எல்லாவற்றிலும் வந்தனே ஏன் நீ அவ்வேளை என்னுடன் வரவில்லை என்றாரே பார்க்கலாம்.
No comments:
Post a Comment