கந்தசாமி ஊர்ல சைக்கிள் கடை வைத்துக் கொண்டு தானும் தன்பாடுமாக வெற்றிலை வாயும் பிறிஸ்டல் சிகரட்டுமாக இருந்தவன். மனிசியின் ஆய்க்கினை தாங்காமல் கப்பல் வேலைக்கென ஏஜன்ரிடம் காசு கட்டினான்.
கந்தசாமியின் மனிசி எந்நேரமும் நகைகளையெல்லாம் அவனுக்கு முன் நீட்டி பிடித்தபடி இந்தா பாரப்பா மோகன் கப்பல்ல உழைச்சு லட்ச்ச லட்ச்சமா கொண்டுவந்து கொட்டுறான். நீ இப்பவே போய் ஏஜன்ரிடம் காசு கட்டு இந்தா இந்த நகைகளை அடவு வை அல்லது வில் என்னக்கு நகை பிரச்சினை இல்லை. நீ நல்ல உழைத்து கொண்டு வரவேண்டும் அது தான் என்னக்கு தேவை.
ஒருமாதிரி கப்பல் வேலைக்கும் கந்தசாமி வந்து சேந்திட்டான் . பாஷைப் பிரச்சனை. இங்கிலீஷ் தெரியாது. தமிழ் ஆக்கள் இருந்தபடியால் கும்பல்ல கோவிந்தா எல்லோரடையும் சேர்ந்து கூட்டல் கழுவல் என்ன வேலை போகும்.
வீடுச்சாப்பாடும் இல்லை மனிசியும் இல்லை. மனிசியின் போட்டோ முன்னால் இருந்து திட்டுவது இரவில் அடுத்த அறைக்காரனை தூக்கமில்லால் பண்ணிவிடும். காலையில் சாப்பிடபோகும்போது கந்தசாமிக்கு நல்ல மங்களம் விழும்.
அண்ணா கோவிக்காதே எண்டு காலில் விழாக்குறையாக சமாளித்து விடுவான்.
ஒருநாள் கப்பலில் வேலை செய்த ஒருவர் காண்ட்ராக் முடிந்து வீடு சென்று விட்டார். புதிதாக வருபவருக்கு அறை சுத்தம் பண்ணும் பணி கந்தசாமிக்கு கிடைத்தது. எல்லாவற்றையும் அழகாக சுத்தம் செய்து விட்டு பழைய கடலோடி விட்டு சென்ற சாமான்கள் சம்பூ, சோப்பு செருப்பு என்ன எல்லாவற்றையும் கந்தசாமி தனது அறைக்கு கொண்டு போய்விட்டான்.
கந்தசாமிக்கு இங்கிலீஷ் தெரியாது தானே கொண்டுபோன சாமான்களை இரவு ஒவ்வொன்றாக பாவித்து பார்த்துள்ளான்.
காலையில் வந்து சொன்னான் தனக்கு ஒரு டூத் பேஸ்ட் கிடைத்துள்ளதாகவும் அதனைப் போட்டு பல் விளக்கினால் நுரை நுரயாகவே வருவதாகவும் கழுவவே முடியவில்லை என்றும் சொன்னான்.
அதை பார்ப்போம் எண்டு போய்ப் பார்த்தால் அது டூத் பேஸ்ட் இல்லை ஷேவிங் க்ரீம். அதை அவனுக்கு விளங்கபடுத்தி சொன்னபோது அண்ணை இதை ஆரிட்டையும் சொல்லிப்போடதேங்கோ என்று கெஞ்சினான் . சரி பிழைச்சுப் போ எண்ண்டு விட்டாச்சு.
இன்னொருமுறை கந்தசாமியும் கப்டனும் பேசுவதை கேட்க முடிந்தது.
கப்டன் இங்கிலீஷ்ல் சொன்னான் இதை முதலில் மூடு
கந்தசாமி ஓகே சார் .
கப்டன் மீளவும் இங்கிலீஷ்ல் சொன்னான் இதை கழுவி வை
கந்தசாமி ஓகே சார் .
இப்படியாக கப்டன் 4 - 5 வேலை சொன்னான் கந்தசாமியும் எல்லாத்துக்கும் ஓகே சார், ஓகே சார் என்று சொன்னான்.
அடே கந்தசாமி கப்டன் இங்கிலீஷ்ல சொன்னதெல்லாத்துக்கும் ஓகே சார், ஓகே சார் எண்டியெ உனக்கு இங்கிலீஷ் விளங்குமாடப்பா?
நீங்கதான் பக்கத்தில நிண்டு கேட்டனீங்க தானே அதுதான் ஓகே சொன்னனான.
என்னென்ன வேலை அவன் சொனவன் அண்ணை எண்டானே பார்க்கலாம்
கடைசியாக கிடைத்த செய்தியின் படி மோட்டார் சைக்கிள் ஓடத் தெரியாத கந்தசாமி கப்பல் காசில் புதிதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி முதன் முதலாக அதில் கோவிலுக்கு போவோமென்று சொல்லி மனிசியையும் பினால் ஏற்றிக்கொண்டு அதனை ஸ்டார்ட் பண்ணி நேராக ஓடிக் கொண்டுபோய் லைட் போஸ்டில் அடித்து முழங்கால் சில்லு உடைந்து வைத்தியசாலையில் இருப்பதாக கேள்விப்பட்டோம்.

No comments:
Post a Comment