Friday, January 4, 2013

ஜாதி சங்கக்காரங்களையும் ரீவீ காரனுங்களை கவிழ்த்த கமல்.


சுப்பர்ஸ்ரார், தல, தளபதி என அவனவன் (அவளுங்களுந்தான்) தமது தலைவரின் பட ரீலிஸ் அன்னிக்கு தியேட்டருங்க முன்னாடி ஒரு பெரிய திருவிழாவே நடத்தி அந்த தியேட்டர் வீதியை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.
அப்புறமா தியேட்டருக்குள்ளாற போயி சாவகாசமாக படத்தைப் பாப்பானுங்க.

அப்புறமா பாருங்க இந்த திருவிழா கூட்டத்துக்குள்ளாற அடிபட்டு மிதிபட்டு கால் கடுக்க நின்னு காசைக் கொடுத்து பஸ்டு பஸ்டா படத்தை பாக்குறதுக்குன்னே ஒரூ கூட்டமிருக்காங்க.
இவங்க படத்தை பார்த்துட்டு வரும் அழகே அழகு. அப்பத்தான் குளிச்சிட்டு தலதுவட்டாத போல உள்ளே போன வேகத்தை விட அதிவேகத்தில வெளியே வருவாங்க. அத்தோட விட்டாங்களா சகல நண்பர்களுக்கும் கோல் எடுத்து தலவரோட படம் பாத்துக்கிட்டிருந்தனா அதுதான் ஒன்னோட கோலை அற்றரண் பண்ணமுடியலை எம்பான். மறுமுனையிலிருந்து நான் உனக்கு கோல் எடுக்கவேயில்லையே என அலறுவது அருகில் நிற்கும் அனைவர்க்கும் கூட கேட்கும்.
சரி மேட்டருக்கு வருவோம். கமல் சார் படம் தியேட்டரில் இல்லத்தானே ஜனங்க படத்தை பார்த்துட்டு வரும் போது நம்ப ரீவீ காரனுங்க இம்மா ஸைசு மைக்கொன்ன பிடிச்சுக்கிட்டு படம் எப்படிங்கன்னு கேட்டுகிட்டேயிருப்பாங்களா?
நம்பாளுங்களும் ஒன்னொன்னு சொல்லிக்கிட்டே போவாங்களா?

கமல் சார் படத்திக்கு இந்த சான்சே இல்லாம போயிடிச்சே. இனி ரீவீ காரனுங்க இதுக்காக வீடு வீடா திரியணுமோ? இல்ல நல்ல விலைக்கு கமல் சார் இந்த படத்தை டிரக்கடா ரீவீயிலேயே போட்டு தியேட்டகாரங்களை கவுத்திடுவாரோ?

அப்புறம் இன்னொண்ணுங்க நம்ப ஜாதி சங்கக்காரங்களையும் சான்ஸ் இல்லாம பண்ணிட்டாருங்க. நம்ப ஜாதி சங்கக்காரங்க தியேட்டருங்க முன்னாடி நின்னு நம்ப தலைவரை, ஆளுங்களை அப்பிடி சொல்லிட்டார் இப்பிடி காமிச்சுட்டாரென ஆர்ப்பாட்டம் பண்ணமுடியாமலும் செஞ்சிட்டாரே?

படிச்சவரே சொன்னது சரியா பிழையா?
எதுன்னாலும் நான் ஜகா வாங்கமாட்டேன்.

 

1 comment:

Anonymous said...

'சண்டியர்'ன்னு சவடால் பேசின விருமாண்டி கழுத்துல டாக்டர் கிருஷ்ணசாமி மணி கட்டுன மாதிரி இனி ஒரு சம்பவம் நடக்காதுங்கிறிங்க. "மும்பை எக்ஸ்பிரஸ்" திருமாவளவன் புண்ணியத்தில் மும்பை கட்டவண்டி ஆனதையும் மறக்கவில்லை.

Post a Comment