Friday, January 18, 2013

உங்கள் மோட்டார் சைக்கிள் (ரூவீலர்) பெற்றோலைக் குடிக்கிறதா?

மொப்பெட், ஸ்கூட்டி  போன்றவற்றை சரியாக பராமரித்தால் குறைந்தளவு பெட்ரோலில் கூடிய அளவு தூரம் ஓடலாம். ரூவீலர் பராமரிக்க  முக்கியமான தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று, உங்கள் ரூவீலர்
4 ஸ்ற்றொக் என்ஜினா அல்லது 2 ஸ்ற்றொக் என்ஜினா என்பதை.

2 ஸ்ற்றொக் என்ஜினாயின் பெட்ரோல் தாங்கி நிரப்பும் பொழுதோ அல்லது தனியாக ஒரு சிறு பெட்டி ஒன்றினுள்ளோ  எண்ணை  விட வேண்டியிருக்கும்.

4 ஸ்ற்றொக் என்ஜினாயின் பெட்ரோல் மட்டுமே தாங்கியில்  நிரப்புவீர்கள்.

சரி விடயத்திற்கு வருவோம்.
உங்கள்  ரூவீலர் பெட்ரோல் ஆவியையும் சூழலில் இருந்து பெறப்படும் காற்றையும் சரியான அளவில் கலந்து ஓடும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. (1 கிராம்  எண்ணைக்கு  14.7 கிராம் காற்று தேவை.)
இதற்குத் தேவையான காற்று சுத்திகரிப்பியுனூடாகப் (Air Filter) பெறப்படுகிறது.

எனவே  காற்று சுத்திகரிப்பி (Air Filter) அடிக்கடி மாற்றவோ அல்லது சுத்திகரிக்கப்படவோ  வேண்டிய ஒன்று. இதனை செய்யத்தவறும் பட்சத்தில் என்ஜின் காற்றுக்குப் பதிலாக பெட்ரோலை பாவிக்கத் தொடங்கி விடும்.இதற்காக காற்று சுத்திகரிப்பியை (Air Filter) கழற்றி விட்டு ஓடாதீர்கள். இவ்வாறு செய்வதனால் காற்றிலுள்ள மண்  தூசு  போன்றவை இயந்திரத்துள் சென்று அதனைப் பளுதாக்கிவிடும்.
இதுதான்  பெட்ரோல் கூடுதலாகப் பாவிப்பதற்கான   முதலாவது காரணி.








அடிக்கடி பிரேக்(Break) பிடித்தல்,
அடிக்கடி கியர் (Gear)மாற்றுதல்
டாப் கியரில் (top gear) செல்லாமை,
உரிய அளவு காற்று டயர்களில் (Tyre) இல்லாமை
பிரேக் (Break Setting)  சரியான முறையில் பூட்டாமை.
(என்னேரமும் இது உராய்ந்தபடிஇருத்தல்) 
என்பனவும் உங்கள்  பெட்ரோல் பாவனையைக் கூட்டலாம்.

ஒரே லெவலில் (Level) பெட்ரோல் நிரப்பிப்  பாவியுங்கள்.
கூடுதலான அளவில் நிரப்பி பாவித்து விட்டு குறைந்த அளவில் நிரப்பி பாவிப்பீர்களாயின் மேலுள்ள இடத்தில் துருப்பிடித்து அது பெற்றோளுள் விழுந்து பின்னர் அது பெட்ரோல் பில்டர் (Filter) இனுள் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் நடுவழியில் நிற்க நேரிடும்.

மெக்கானிக்கிடம் செல்லும் பொது மறக்காமல்
1.காற்று சுத்திகரிப்பி (Air Filter)


2. பிரேக் Setting 
3. பெட்ரோல் பில்டர் (Filter)
என்பனவற்றை  சோதித்துக் கொள்ளுங்கள்.

அக்சலரேட்டர் கேபிள்,  க்ளட்ச் கேபிள் என்பனவற்றுக்கு அவர்களிடம் சொல்லி எண்ணெய் விட்டுகொள்ளுங்கள். அக்செலரேடர் கேபிள் இலகுவாக இருந்தால் திடீரென எஞ்சின் speed ஆவதைத் தடுக்கலாம்.






4 ஸ்ற்றொக் என்ஜினாயின் இடையிடை  உங்கள் சைலன்சருள்  சிறிதளவு என்ஜின் ஆயில் விட்டு என்ஜினை  சிறிது ஓட  விடவும். இதன்  மூலம்  உங்கள் சைலன்சர் உள்புறமாக துருப் பிடிப்பதை சிறிது தடுக்கலாம்.

2 ஸ்ற்றொக் என்ஜினாயின் என்ஜினுடன் சைலன்சரைப் பூட்டும் இடத்தில் கார்பன் வளர்ந்து  ரூவீலரின் ஓடும் சக்தி குறையும். ஏற்றங்களில் ஏறும்போது
வேகம்  மிகவும் குறையுமாயின் உடன் கார்பன் துப்பரவாக்கப் பட வேண்டும்.


 


No comments:

Post a Comment