Thursday, January 24, 2013

இந்த படத்தின் பின்னாலுள்ள பெண் முகத்தைப் பாருங்கள்.

இன்டர்நெட்டில் இன்று மிகவும் பிரபலமான படம். பின்னாலுள்ள அந்த முகத்தில் தெரிவது ஆனந்தமா? பொறாமையா? ஏக்கமா? அண்மையில் தான மூன்று வருடமாகக் காதலித்த பெண்ணிடம்  அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் முழங்காலில் நின்று கொண்டு மோதிரத்தை கையில் ஏந்திய வண்ணம்  நீ என்னை மணமுடிப்பாயா என்று காதலன் காதலியிடம் கேட்டான்.


அந்த நிகழ்வை  அவனது நண்பனும் படமெடுத்துள்ளான். படம் வெளியான பின்தான் அந்த நிகழ்வை பின்னால் நின்ற அறிமுகமில்லாத பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்பதை அந்த ஜோடி பார்த்துள்ளனர்.
பிறகென்ன அந்தப் படம் இன்டர்நெட்டில் அவர்களால் போடப்பட்டது.

அவளது  முகபாவம்தான் "photobomping " என இன்று இன்டர்நெட்டைக் கலக்குகின்றது.
அது சரி அவளது முக பாவம் சொல்வது என்ன? ஆனந்தமா? பொறாமையா? ஏக்கமா?

1 comment:

JR Benedict II said...

ஆச்சரியமா இருக்கலாமோ? இல்லை குந்திகினு இருக்கிற பயபுள்ள நாலு ஊருக்கு கேட்கிற போல கத்தி சொன்னதால அந்த பெண் பயந்துட்டான்களோ??

Post a Comment