Monday, October 21, 2013

தாக்க வந்த காண்டாமிருகம் ஏன் திரும்பி ஓட்டம்?

வனவிலங்கு படப்பிடிப்பாளர் காட்டுக்குள் மிருகங்களை படமெடுக்க சென்றவேளை எதிர்பாராத விதமாக தான் படமெடுக்க விரும்பிய காண்டாமிருகத்தின் கோபத்திற்காளாகிவிட்டார். சரி, படப்பிடிப்பாளரை மேலுலகத்திற்கு அனுப்புவோம் என தீர்மானித்து தாக்குதலுக்குத் தயாராகி இரண்டு மூன்று தடவை முற்பாய்ச்சல் பாய்ந்தும் காட்டி பயமுறுத்தவும் செய்தது.
இதோ கடைசித் தாக்குத்ல என காண்டாமிருகம் தயாராக படப்பிடிப்பாளர் தைரியமாக ஒரு வேலை செய்ய காண்டாமிருகம் எஸ்கேப் என எடுத்தது ஓட்டம். இங்கே பாருங்கள் video.




படப்பிடிப்பாளர் செய்த வேலை என்ன? சத்தமாக கைகளைத் தட்டினார் அவ்வளவுதான்.

Monday, March 4, 2013

இன்று என்னைக் கவர்ந்த இணையம்.

பணமும் முதலீடும் சேவையும் ஓரிடத்தில் இணைந்துளளதைக்  கண்டேன்.
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ !
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல்

நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ.


நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ?
அகதிகளாகவும் கல்விக்காகவும் தொழில் தேடியும் இலங்கையிலிருந்து வெளியேறி   வெளி நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாங்கள Global Tamils Telecom Ltd என்ற வியாபார நிறுவனமொன்றை £ 10,000 முதலீட்டுடன் இங்கிலாந்தில் நிறுவ எண்ணியுள்ளோம். இதற்கு £ 1 பங்கு வீதம் 10,000 பங்குகள் விற்பதற்கு முடிவு செய்துள்ளோம்.
இந்த முதலீட்டில் கிடைக்கும் வருட வருமானத்தின் 50% பங்குதாரர்களுக்கும் 25% இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வருட சன்மானமாகவும் 25% வறிய மக்களுக்கு உணவளிக்கும் சேவைக்கும் அளிக்கப்படும்.
தொலைபேசி சேவைகள் என்பது சமுத்திரம் போன்றது இந்த சமுத்திரத்தில் பலர் தமது பொருளாதார வசதிக்கு ஏற்றபடி மீன்பிடிக்கின்றார்கள் பணம் படைத்தவர்கள் பெரிய கப்பல்களில் ஆழ்கடலிலும் பணவசதி இல்லாதவர்கள் சிறு கட்டுமரம் தூண்டில்களுடனும் மீன்களைப் பிடித்து தமது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
£ 10,000 முதலீட்டுடன் நாம் தொடங்கவிருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒரு நடுத்தரமானதுதான் இதில் கிடைக்கும் வருமானத்தின் குறிப்பிடத் தக்க பங்கை நாம் மக்களுக்கு உணவளிக்கும் சேவைக்கு அளிப்போம் என்ற எமது எண்ணத்தில் — நோக்கத்தில் நாம் மற்றவர்களிலிருந்து ஒற்றைப் பனை மரம்போல தனித்துவமாக — உயர்ந்து நிற்கின்றோம்.
எமது இந்த மக்கள் நல வியாபாரத்தில் குறைந்தது £ 1 பங்கு வாங்கி எம்முடன் இணைய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

www.globaltamilstelecom.com
E mail : mail@globaltamilstelecom.com
Telephone : 0044 2036087399

Main web site: http://www.globaltamilstelecom.com/

Wednesday, February 27, 2013

கயிறு பாம்பு போல எழுந்து தடியாக மாறுகிறது.

பின்னர் அதில் ஒரு சிறுவன் ஏறுகிறான். அதன் பின் அது மீளவும் கயிறாக கீழே பொததென விழுகிறது. வீடியோவைப் பாருங்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.






Tuesday, February 26, 2013

ஆஸ்கார் விருது சரியான நடிகைக்கே கிடைத்துள்ளது .

பரிசுக்கு மேடைஏறும்போது  தடுக்கி விழுந்தார். தளராமல் மேடையில் பரிசுடன் நின்று  நான் கீழே  விழுந்த படியால் தானே எல்லோரும் எழுந்து நிற்கிறீர்கள் என சிரித்தபடி சொன்னாரே பார்க்கலாம்.



சிரிப்புக்கும் இளமைக்கும் பெயர் போன 21 வயது ஜெனிபர் லோறன்ஸ் தனது முதல் ஆஸ்கார் விருதை பெற்றபின் வழங்கும் பேட்டியை பாருங்கள்.
அந்த பேட்டியை வழங்கும்போது அதை வந்து குழப்பும் 75 வயது நடிகர்  ஜாக் நிக்கல்சனை அவர் கையாளும் விதத்தையும் முகபாவங்களையும் பாருங்கள்.

கடைசியாக தான்  அந்த பெரிய நடிகர்கள் நடிகைகள் பட்டியலில் இடப்பெற்று விட்டதை  ஹாய் ஜாக், ஹாய் ஜெனிபர் சுகமா எனககேட்டு தனது பேட்டியை ஜாலியாக முடிக்கிறார்.

விழுதல்.





பேட்டி( முகபாவங்களைப் பாருங்கள்)




Monday, February 25, 2013

மனிதன் ஆற்றின்மேல் நடக்கும் வீடியோ.

இது இந்துவாதிகளை மிக சந்தோசப்படுத்த, பாருங்கள் எங்கள் யோகிகள் சொன்னது சரிதானேயென்றனர். உண்மையில் நடந்தவர் ஒரு மந்திரவாதி. தனது வரவிருக்கும் டிவி ஷோவிற்கு இதனை விளம்பரமாகப் பயன்படுத்தியுள்ளார். இப்போ உலகம் முழுவதும் இவன் எப்படி நடந்தான் என மண்டையை போட்டு உடைத்த்படியுள்ளனர்.
இது சம்பந்தமாக பலர் இணையத்தளங்களில்  எழுதிக் கொண்டுமுள்ளனர்.
இதோ அந்த வீடியோ.


 இதோ அதற்கான விளக்கம்.




Sunday, February 24, 2013

நீரிழிவினை கட்டுப்படுத்தும் மூலிகை உணவுகள்.

நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற் பயிற்சியின்மையினாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் மூலிகைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள்
கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சளானது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.
நாவல்
நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.
பாகற்காய்
பாகல் இலை, காய், விதைகளில் 'தாவர இன்சுலின்' என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50மூ வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.
வெந்தயம்
வெந்தையத்தில் காணப்படும் 'ட்ரைகோனெல்லின்' அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25மூ அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.
ஆவாரை
ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.
சிறுகுறிஞ்சான்
'சர்க்கரைக் கொல்லி'யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குகிறது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான ர்.னு.டு. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.

கடலழிஞ்சில்

பொன் குறண்டி' எனப்படும் இம் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயர்களுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக 'கடலழிஞ்சில்' நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சீந்தில்

நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான 'இம்யூனோகுளோபுலின் - ஜி' - ன் அளவை, சீந்தில் அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இது சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.

வில்வம்

வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி மூலிகைகள்

மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய சிறப்புகள் உடைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வில்வம் மாத்திரை, சீந்தில் மாத்திரை, கடலழிஞ்சில் மாத்திரை, நாவல்மாத்திரை, நீரிழிவு சூரணம், ஆவாரை, குடிநீர், திரிபலா கற்பம், சிறுகுறிஞ்சான் சூரணம் போன்ற பல மருந்துகளில் ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம். மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்
 

Saturday, February 23, 2013

கலைத்தேன், கடித்தேன், அவன் ருசியாகவிருந்தான்.

 போலீஸ் நாயின்  வாக்குமூலம் அதன் கைஎழுத்துக்குப் பதிலாக கால் விரல் அடையளங்களுடன் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திலுள  நீதி மன்ற வேண்டுகோளை அடுத்தே இது நிகழ்ந்துள்ளது.
நீதி மன்றம் இதில் சம்பந்த பட்டுள்ளது நாயல்ல நிஜ போலீஸ் என நினைத்து அதன் வாக்கு மூலத்தை தரும்படி மீள மீள கேட்டபடியால் போலீஸ் நாயின் காப்பாளர் .பொறுக்க முடியாமல் இப்படியான சாட்சியமொன்றை நாய் தந்தது போல சமர்ப்பித்துள்ளார்.
அதற்கும் நீதி மன்றம் எரிச்சலடைந்து விளக்கம் கேட்டுள்ளது.
இப்போ இநத விடயம் இன்டர்நெட்டில் ஓஹோ என பரவி உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரிக்கிறது.



 இது தான் அந்த ரிப்போர்ட்.

கலைத்தேன், கடித்தேன், அவன் ருசியாகவிருந்தான்.நல்ல பையன். நல்ல பையன் பீச்
கையொப்பம்.
நாயின் கால் அடையாளம்