Wednesday, January 30, 2013

Ozone - ஐரோப்பிய கண்டுபிடிப்பு 1930. தமிழர்கள் 2.000 வருடமுன்னரே இதையறிவர்.

ஓஸோன் படை (Ozone Layer) 1930களில் ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் 2.000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப்பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியுமறிவர். அதாவது இது 200–300 வருடங்களுக்கு முன்னரே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. 1970 – 1980 களிலேயே இதன் தாக்கங்கள் பற்றியும் ஆறிய ஆரம்பித்தனர்.


                                     புராணவித்தகர் மு.தியாகராசா அவர்கள் .

ஆதற்கு ஆதாரமாகக் கீழுள்ள பாடல் இலங்கை. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சேர்ந்த புராணவித்தகர் மு.தியாகராசா அவர்களால் புறநானூற்றிலிருந்து (43வது பாடல்)பெறப்பட்டு அவரது விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது.


நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக,
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையேன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி
எக்க ரிட்ட மணலினும் பலவே (43)

(பதப்பொருள் விளக்கம்) நிலமிசை வாழ்நர் அலமரல் தீர - இந்த நிலவுலகில் வாழ்கின்ற மக்களின் துன்பச் சுழற்சியினால் ஏற்படும் பாடுகள் நீங்கும்படியாக,

தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி – வெப்பத்தால் தகிக்கின்ற கதிர்களை உடையதாகிய சூரியனது தீமைபயக்கும் பகுதியாகிய வெம்மையின் ஒரு பகுதியை தாமே ஏற்றுக் கொண்டு, 

கால் உணவாக – தமது உணவாகக் காற்றையே உண்டு,

சுடரொடு கொட்கும் - அச்சூரியனோடேய சுழன்று வருகின்ற,

அவிர்சடை முனிவரும் - ஒளிர்ந்து விளங்கும் சடாமுடியை உடைய முனிவர்களும்,

மருள – வியப்பினால் திகைப்புற்று மயங்க,

 கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தின் - வளைந்த சிறகுகளையும் கூரிய நகங்களையும் கொண்ட பருந்தினது, 

ஏறு குறித்து ஒரீஇ - எறிந்து தாக்கிக் கொல்லும் படி வரும் செயலைக் கண்டு பயந்து பறந்து அவ்விடத்தை விட்டு விலகித் தப்பி,

தன் அகம் புக்க – தன்னிடத்தே அடைக்கலமாகப் புகுந்த,

குறு நடைப் புறவின் தபுதி அஞ்சி - குறுகிய நடையினையுடைய புறாவினுடைய அழிவுக்காக அச்சம் கொண்டு,
சீரை புக்க - தனது அழிவுக்காக எவ்வித அச்சமும் கொள்ளாது துலாக் கோலிற்புகுந்து தன்னை அப்புறாவுக்கா அர்ப்பணித்த, 

வரைய ஈகை உரவோன் மருக – எல்லையில்லாத கொடை வளம் கொண்ட மனோவலிமை மிக்கவனாகிய சிபிச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் உதித்தவனே,


நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் - எதிரிகளைப் போர்முனையில் வெற்றி கொண்டு அம்மாறுபாட்டால் ஆய செல்வச் சிறப்புக் கொண்ட,

தேர்வண் கிள்ளி தம்பி – தேர்ப்படைப் பெருக்கு உடையவனாய நலங் கிள்ளியின் தம்பியே, 

வார்கோல் கொடுமர மறவர் பெரும – நீண்ட அம்பினையும் வளைத்த வில்லையுமுடைய போர்வீரர்களின் பெருமானே,

கடுமான் கைவண் தோன்றல் - மிக்க விரைந்து ஓடும் குதிரையை உன் கைவண்ணத்தால் அடக்கிச் செலுத்தும் தோன்றலே,

ஐயம் உடையேன் - உனது பிறப்பிலே ஐயப்பாடு கொள்கிறேன்.

ஆர்புனை தெரியல் முன்னோர் எல்லாம் - ஆத்தி மலர் மாலை அணிந்த உனது மூதாதையர்கள் எல்லாரும்,

பார்ப்பார் நோவன செய்யார் - பிராமணர்கள் மனம் நோக எதனையும் செய்ததில்லை,

மற்று இது நினக்கு நீர்த்தோ என – அப்படி இருக்க இப்பொழுது பிராமணனாய் தனக்கு சூதாடு காயால் ஊறு செய்தது) இது உனக்கு உன்னுடைய தகைமைக்கு ஏற்றதோ என,

வெறுப்பக் கூறி – (அரசனாகிய) நீ வெறுக்கும் படியாகிய வார்த்தைகளை நான் சொல்லி,

நின் யான் பிழைத்தது நோவாய் எனினும் - உன்னை நான் அவ்வாறு ஏசியதை எண்ணி நீ வருத்தப்பட்டு என்னை என்தவறுக்காக வெறுக்கமாட்டாய் என்றாலும்,

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – நீ தான் ஏதோ பிழை விட்டு விட்டதாக எண்ணி மிக்க நாணத்தோடு எதுவும் பேசாது இருந்து விட்டாயே,


தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் - தமக்குப் பிழை செய்தவர்களைப் பொறுத்தருளும் ஆண்மகனே,

இக்குடிப் பிறந்;தோர்க்கு எண்மை காணும் என - இச்சிறந்த குடியிற் பிறந்தவர்கள் எளிமையோடேயே இருப்பார்கள். காண்பீர்;களாக என,

காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின் - எல்லாராலும் நன்கு அறியப்பட்ட பராக்கிரமம் மிக்கவனே அதைக் காட்டி விட்டாய் அல்லவா,

யானே பிழைத்தனென் - உண்மையில் நான்தன் பிழை விட்டுவிட்டேன். என்னை மன்னிப்பாயாக,

மிக்கு வரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பல – மிகுந்து பெருகி வரும் நன்னிரைக் கொண்ட காவிரியாற்றின் கரையிலே பரந்திருக்கும் மணலின் எண்ணிக்கையிலும் பார்க்கப் பல்லாண்டுகள்,

நின்ஆயுள் சிறக்க – உனது ஆயுளானது சிறந்து நீடிப்பதாக,


(அரும்பொருள்) அலமரல் - துன்பத்தில் சுழலுதல், தெறு – வருத்தும், கனலி - சூரியன், கொட்கும் - சுற்றிச்சுழலும், அவிர் - ஒளிபொருந்திய, கொடும்சிறை – வளைந்த சிறகுகள், ஏறு – எறிதல் (இங்கு கொல்லுதல்) ஒரீஇ - விலகி, தபுதி –அழிவு, சீரை – துலாக்கோல், வரையா – எல்லைஇல்லா, நேரார் - பகைவர், வார்கோல் - நீண்டஅம்பு, கொடுமரம் - வளைந்த வில், கடுமான் - விரையும் குதிரை, ஆர் - ஆத்தி, தெரியல் - மாலை, நீர்த்தோ - இயல்புக்கு ஏற்றதோ, எண்மை – எளிமை, மொய்ம்ப – புயபலம் உடையானே, எக்கர் - கரை.





(பிரதான குறிப்பு) உலகம் இயங்குவதற்கும் உயிர்கள் வாழ்வதற்கும் பெருந்துணை புரிவது சூரியன். அதன் ஒளியினாலும் வெப்பத்தினாலும் நாம் அடையும் பயன் அளவில. யாவரும் அறிந்ததே ஞாயிற்றின் வெப்பமான வெப்ப ஒளி அலைகள் அதன் ஏழு நிறங்களில் செம்மைக்கு முன்னாலும் ஊதாவுக்கு அப்பாலும் உள்ளவை. மனிதக் காட்சிக்கு உட்படுவன அல்ல. ஊதாவுக்கு அப்பாலுள்ள (அல்றாவயலெற்) ஒளி அலைகள் பூமியைச் சேர்ந்தால் மனிதன் கொடிய நோய்க்கு ஆளாவான். அப்படி ஆகாது அதைத் தடுத்து நிறுத்துவது ஓசோன் படலம். இது தனித்த பிராணவாயு அணுக்களால் ஆயதென்றும் வேறு வாயுக்கள் கலந்தால் சீரழிந்து விடுமென்றும் இக்கால விஞ்ஞானிகள் கூறுவது நாம் அறிவோம். இப்படி ஒன்று உண்டென்பது சங்கச் சான்றோர் அறிந்ததொன்று மிக்க ஆற்றல் உள்ள இயற்கையன் நிலைப்பாடுகளை பூதம் என்றோ முனிவர் என்றோ அவர்கள் குறிப்பிடுவதுண்டு. இந்த ஓசோன் தான் 'நிலமிசை....... முனிவரும்' என இப்பாட்டில் குறிப்பிடப்பட்டது. 'விண்செலன் மரபின் ஐயர்' என முருகாற்றுப்படையும், 'சுடரொடு திரிதரு முனிவரும்' எனச் சிலம்பும் கூறின.

மேலும் இதைப்பற்றி படிக்க



http://en.wikipedia.org/wiki/Ozone_depletion#Verification_of_observations

Friday, January 25, 2013

7 மாதக் குழந்தை ஆடும் "கங்னம் ஸ்டைல்" ஆட்டம்.

இக் குழந்தையின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்று. ஆனால் நம்பத்தான் வேண்டும்.கங்னம் ஸ்டைல் கொரிய பாட்டுக்கான ஆட்ட வீடியோ உலகெங்கும் youtube மூலம் பிரசித்த்மான ஒன்று. அதை கிரிக்கெட்  ஆட்டங்களின் போதுமேற்கிந்திய கிரிக்கெட் வீரர் Chris Gayle ஆடிக் காட்டி அதைப் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் வேறு அவர் சொல்லி விட  அந்தப் பாடல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தற்போது பிரபலமாகி அதனை 2,713,109 1,238,260,832 பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
அதனை இந்த 7 மாதக் குழந்தையும் பார்த்து  ஆடத் தொடங்கி விட்டது. 
இதோ அந்த வீடியோ.

 

இதோ அந்த ஒரிஜினல் வீடியோ Gangnam Style .

 

Thursday, January 24, 2013

இந்த படத்தின் பின்னாலுள்ள பெண் முகத்தைப் பாருங்கள்.

இன்டர்நெட்டில் இன்று மிகவும் பிரபலமான படம். பின்னாலுள்ள அந்த முகத்தில் தெரிவது ஆனந்தமா? பொறாமையா? ஏக்கமா? அண்மையில் தான மூன்று வருடமாகக் காதலித்த பெண்ணிடம்  அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் முழங்காலில் நின்று கொண்டு மோதிரத்தை கையில் ஏந்திய வண்ணம்  நீ என்னை மணமுடிப்பாயா என்று காதலன் காதலியிடம் கேட்டான்.


அந்த நிகழ்வை  அவனது நண்பனும் படமெடுத்துள்ளான். படம் வெளியான பின்தான் அந்த நிகழ்வை பின்னால் நின்ற அறிமுகமில்லாத பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்பதை அந்த ஜோடி பார்த்துள்ளனர்.
பிறகென்ன அந்தப் படம் இன்டர்நெட்டில் அவர்களால் போடப்பட்டது.

அவளது  முகபாவம்தான் "photobomping " என இன்று இன்டர்நெட்டைக் கலக்குகின்றது.
அது சரி அவளது முக பாவம் சொல்வது என்ன? ஆனந்தமா? பொறாமையா? ஏக்கமா?

Friday, January 18, 2013

உங்கள் மோட்டார் சைக்கிள் (ரூவீலர்) பெற்றோலைக் குடிக்கிறதா?

மொப்பெட், ஸ்கூட்டி  போன்றவற்றை சரியாக பராமரித்தால் குறைந்தளவு பெட்ரோலில் கூடிய அளவு தூரம் ஓடலாம். ரூவீலர் பராமரிக்க  முக்கியமான தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று, உங்கள் ரூவீலர்
4 ஸ்ற்றொக் என்ஜினா அல்லது 2 ஸ்ற்றொக் என்ஜினா என்பதை.

2 ஸ்ற்றொக் என்ஜினாயின் பெட்ரோல் தாங்கி நிரப்பும் பொழுதோ அல்லது தனியாக ஒரு சிறு பெட்டி ஒன்றினுள்ளோ  எண்ணை  விட வேண்டியிருக்கும்.

4 ஸ்ற்றொக் என்ஜினாயின் பெட்ரோல் மட்டுமே தாங்கியில்  நிரப்புவீர்கள்.

சரி விடயத்திற்கு வருவோம்.
உங்கள்  ரூவீலர் பெட்ரோல் ஆவியையும் சூழலில் இருந்து பெறப்படும் காற்றையும் சரியான அளவில் கலந்து ஓடும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. (1 கிராம்  எண்ணைக்கு  14.7 கிராம் காற்று தேவை.)
இதற்குத் தேவையான காற்று சுத்திகரிப்பியுனூடாகப் (Air Filter) பெறப்படுகிறது.

எனவே  காற்று சுத்திகரிப்பி (Air Filter) அடிக்கடி மாற்றவோ அல்லது சுத்திகரிக்கப்படவோ  வேண்டிய ஒன்று. இதனை செய்யத்தவறும் பட்சத்தில் என்ஜின் காற்றுக்குப் பதிலாக பெட்ரோலை பாவிக்கத் தொடங்கி விடும்.இதற்காக காற்று சுத்திகரிப்பியை (Air Filter) கழற்றி விட்டு ஓடாதீர்கள். இவ்வாறு செய்வதனால் காற்றிலுள்ள மண்  தூசு  போன்றவை இயந்திரத்துள் சென்று அதனைப் பளுதாக்கிவிடும்.
இதுதான்  பெட்ரோல் கூடுதலாகப் பாவிப்பதற்கான   முதலாவது காரணி.








அடிக்கடி பிரேக்(Break) பிடித்தல்,
அடிக்கடி கியர் (Gear)மாற்றுதல்
டாப் கியரில் (top gear) செல்லாமை,
உரிய அளவு காற்று டயர்களில் (Tyre) இல்லாமை
பிரேக் (Break Setting)  சரியான முறையில் பூட்டாமை.
(என்னேரமும் இது உராய்ந்தபடிஇருத்தல்) 
என்பனவும் உங்கள்  பெட்ரோல் பாவனையைக் கூட்டலாம்.

ஒரே லெவலில் (Level) பெட்ரோல் நிரப்பிப்  பாவியுங்கள்.
கூடுதலான அளவில் நிரப்பி பாவித்து விட்டு குறைந்த அளவில் நிரப்பி பாவிப்பீர்களாயின் மேலுள்ள இடத்தில் துருப்பிடித்து அது பெற்றோளுள் விழுந்து பின்னர் அது பெட்ரோல் பில்டர் (Filter) இனுள் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் நடுவழியில் நிற்க நேரிடும்.

மெக்கானிக்கிடம் செல்லும் பொது மறக்காமல்
1.காற்று சுத்திகரிப்பி (Air Filter)


2. பிரேக் Setting 
3. பெட்ரோல் பில்டர் (Filter)
என்பனவற்றை  சோதித்துக் கொள்ளுங்கள்.

அக்சலரேட்டர் கேபிள்,  க்ளட்ச் கேபிள் என்பனவற்றுக்கு அவர்களிடம் சொல்லி எண்ணெய் விட்டுகொள்ளுங்கள். அக்செலரேடர் கேபிள் இலகுவாக இருந்தால் திடீரென எஞ்சின் speed ஆவதைத் தடுக்கலாம்.






4 ஸ்ற்றொக் என்ஜினாயின் இடையிடை  உங்கள் சைலன்சருள்  சிறிதளவு என்ஜின் ஆயில் விட்டு என்ஜினை  சிறிது ஓட  விடவும். இதன்  மூலம்  உங்கள் சைலன்சர் உள்புறமாக துருப் பிடிப்பதை சிறிது தடுக்கலாம்.

2 ஸ்ற்றொக் என்ஜினாயின் என்ஜினுடன் சைலன்சரைப் பூட்டும் இடத்தில் கார்பன் வளர்ந்து  ரூவீலரின் ஓடும் சக்தி குறையும். ஏற்றங்களில் ஏறும்போது
வேகம்  மிகவும் குறையுமாயின் உடன் கார்பன் துப்பரவாக்கப் பட வேண்டும்.


 


Wednesday, January 16, 2013

வீட்டில் அதிகம் மின்சாரத்தை விழுங்கும் சாதனம் எது?

கரண்ட் பில்  வந்தவுடன் அதைப் பார்த்து தலையில் கை வைப்பவர்களுக்கு. கீழுள்ள சாதனங்கள்  வீட்டில் அதிக அளவில் மின்சாரத்தை பாவிக்கக்  கூடியவை. அவற்றை சரியான முறையில் பாவித்து உங்கள் மின் கட்டணத்தை நன்றாகக்  குறைக்க முடியும்.

1.A/C  குளிரூட்டி
2. மின் அடுப்பு
3. குளிர்சாதனப் பெட்டி
4. T V  தொலைக்காட்சி
5. கம்பியூட்டர்
6. சவுண்ட் சிஸ்டம்
7.ரங்க்ஸ்டன் பல்ப்
8. ரேடியோ


A/C  குளிரூட்டி - இதனைப்  பூட்ட முன்னர் வீடு இதற்கென திட்டமிடப் பட்டு கட்டப்பட வேண்டும். அங்கிருந்து காற்றும் குளிரும் வெளியே செல்லப் படாது. கதவுகள் யன்னல்கள் அதே போல கவனமாகச் செய்யப்பட வேண்டும். சூரியனின் நேர் தாக்கம் இந்த அறைக்கு இருக்கப்படாது. அல்லாத பட்டசத்தில் A/C  (குளிரூட்டி) நிற்காமல் தொடர்ந்து ஓடி உங்களுக்கு மாதந்தோறும் பெரிய பில்லைத்  தரமுடியும்.

மின் அடுப்பு (hot plate)
இது வேலை செய்யும் போது இதன் மேலுள்ள சட்டியையோ பானையை  மட்டுமல்லாமல் சுற்று சூழலுக்கும் இது சூட்டை இழக்கிறது. இதனால் இது வீட்டிலுள்ள மின் பாவனைப் பொருட்களில் அதிகம் நஷ்டத்தை பாவனையின்  போ து ஏற்படுத்தக் கூடிய ஒன்று . இதனை வீடுகளில் தவிர்ப்பது  நல்லது


குளிர்சாதனப் பெட்டி.
தேவையிலாத பொருட்களை இதனுள் வைத்திருப்பதும் அடிகடி கதவைத் திறப்பதுவும் இதனைத் தொடந்து ஓடவைத்து மின் கட்டணத்தைக் கூட வைக்கிறது. இதன் பின்புறம் கூலிங் தட்டு இருப்பின் அதனைத் தூசு தட்டி வைத்துக்கொள்ளவும். அதேபோல குளிர்சாதனப் பெட்டியை சுவரில் இருந்து ஒரு அடி முன்பாக வைக்கவும். இது சூட்டு கடத்தலை இலகுவாக்கி அதன் பாவனையை இலகுவாக்குகிறது.

T V  தொலைக்காட்சி.
இது சத்தம் கூடக் கூடக் கரண்டை கூடப் பாவிக்கும். எனவே குறைந்த அளவில் சத்தத்தை வைத்தல் குறைநத அளவில் மின்சாரத்தை பாவிக்கும்



கம்பியூட்டர்
இதுவும் நன்றாக மின்சாரத்தைப் பாவிக்கும். தேவையிலாத நேரத்தில் மறக்காமல் நிறுத்தி விடவும். அல்லது மொனிட்டரை தேவையில்லாத வேளையில் தானாகவே ST/BY க்கு மாறி  மின்சாரத்தை சேமிக்க செய்யலாம்.






ரங்க்ஸ்டன் பல்ப.
இது அதிகளவு மின்சாரத்தை பாவிக்கக்  கூடிய ஒன்று.இதற்குப் பதிலாக டியூப் லைட் அல்லது CFL பல்ப. பாவிப்பது உங்கள்  மின்சார கட்டணத்தை வெகுவாகக் குறைக்கும்.

ரேடியோ
நீங்கள் எந்த அளவுக்கு சத்தம் வைத்தாலும் ரேடியோ ஒரேயளவு மின்சாரத்தையே பாவிக்கும்  ஆனால் tape recorder, CD player என்பன சத்தங்  கூடக் கூட அதிக அளவில்  மின்சாரத்தைப் பாவிக்கும்.
.

கோழிப் புத்தி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?


ஏன்னுடன் வேலை செய்பவர்களில் ஆபிரிக்காகாரன ஒருவனுமிருந்தான்.. மிக நல்லவன் நல்ல பகிடிகாரன். ஒரு நாள் மேலதிகாரி ஒருவர் வந்து தேவையில்லாமல் மிக அதிகமாக அவனிடம் கத்தினார். அவனோ மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான் ஏதோ ஆப்பிரிக்க மொழியில் சொல்லிவிட்டு பழையபடி வேலை செய்யத் தொடங்கினான். சிறிது நேரம் அவனது கோபம் அடங்க விட்டு மெதுவாக அவனிடம் என்னநடந்தது என்னக் கேட்டேன். மேலதிகாரி போன பக்கம் பார்த்து 'சிக்கன் மைண்டட் மான்'; என்றான்

இப்போ எனக்கு நடந்த பிரச்சனை பற்றி கேட்ட கேள்வி மேலான ஆவல் போய் கோழிப் புத்தி பத்தி கேட்க வேணும் போல இருந்தது.




மெதுவாக கோழிப் புத்தி பற்றி கேட்டேன். அது என்னடாப்பா  அந்த கோழிப் புத்தி?

மிக ஆறுதலாக என்னைப் பார்த்தான் பின்னர் நடந்ததை நினைத்து வாய் விட்டுச ;சிரித்ததான். பின்னர் சொன்னான் இந்த மேலாளருக்கு எவ்வளவோ வேலைகள் அவர் கண் முன்னால் உள்ளன. அதெல்லாம் விட்டு விட்டு என்னுடைய சிறிய பிழையை பெரிதாக பார்க்கிறார், கத்துகிறார். அதற்குத்தான் என்றான்.

இப்ப பார் கோழிக்கு முன்னால் பெரிய மலையாக அரிசி இருந்தாலும் அது அதனை நேராக கொத்தி சாப்பிடாது ஆனால் அதை கிளறிக் கிளறித்தான் சாப்பிடும் என்றான். நான் வியப்பில் ஆழ்ந்தேன். உண்மையும் அதுதானே? மலையளவு இருந்தாலும்
கோழி அதனைக்  கிளறிக் கிளறித்தானே  சாப்பிடும்.
அந்த மேலதிகாரி முன்னாலுள்ள பெரிய பிரச்சனைகளை காணத்தெரியாமல் எங்கேயோ கிடக்கும் சிறிய பிரச்சனைளைக் கிளறி எடுக்கிறாரே என்பது தான் அவன் கருத்து.

வேண்டுமானால் ஒரு மூடை அரிசியை நிலத்தில் கொட்டிவிட்டு ஒரு கோழியையும் விட்டுப் பாருங்க அது எப்படி சாப்பிடுகிறது என.

பக்கத்திலிருந்த தமிழ் நாட்டுககரரிடம் அவன் சொல்லுகிற ஆபிரிக்க முன்னுதாரணம் நன்றாய் இருக்கிறதுதானே என்றேன். அதற்கு அவர் இவன் சொல்வது நல்லாய் தான் இருகிறது. ஆனால் இவன் மடையன். கோழி கிளறி சாப்பிடுகிறதோ அல்லது சும்மா சாப்பிடுகிறதோ, அது சாப்பிட்ட அரிசி தன் வயிற்றுக்குளதானே; செல்கிறது என்றாரே பார்க்கலாம். 


கோழிகள் புத்தி கூர்மையானவை. இதோ அதற்கான ஆதாரம்.


 

அமெரிக்க வீஸா லொத்தரில் இந்தியர்களுக்கு ஏன் அனுமதியில்லை?

Green card Lottery எனவும் DV Lottery எனவும் அழைக்கப்படும் அமெரிக்க குடியேற்ற வீஸாக்கள் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 50.000 பேருக்கு கம்பியூட்டர் வொத்தர் மூலம் வழங்கப்படுகிறன. இருப்பினும் இந்தியா. பாகிஸ்தான் மற்றும் வேறு சிலநாடுகளையும் சேர்ந்தோருக்கு இந்த லொத்தரில் பங்கு பற்ற அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளிப்பதில்லை.
ஏன்?
இந்த அமெரிக்க வீஸா லொத்தர் (கிறீன் காட் லொத்தர் எனவும் அழைக்கப்படும்.) ஆனது அமெரிக்காவில் வசிக்கும் பல்லின மக்களினதும் அளவைச் சமப்படுத்தும் வகையில் அங்கு குறைவாகவுள்ள நாட்டு மக்களைக் குடியேற்றும் வகையில் அமெரிக்க அரசினால் இது நடாத்தப்படுகின்றது.
எனவே அமெரிக்க அரசு கடந்த 5 வருடங்களுக்குள் 50,000 க்குக் கூடுதலான அளவில் தமது நாட்டுக் குடியேற்றவாசிகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய நாட்டில் பிறந்தவர்களை இந்தப்போட்டியில் பங்கு பற்ற அனுமதி அளிக்கவில்லை. அவ்வகையில் இந்திய நாட்டில் பிறந்தவர்களும் வேறு சிலநாட்டில் பிறந்தவர்களும் இந்த அமெரிக்க வீஸா லொத்தரில் பங்குபெற அனுமதி அளிக்கப்படவில்லை.







எனினும் ஒரு இந்தியரின் பிறப்பு அமெரிக்க குடியேற்ற வீஸா வொத்தரில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்ட நாட்டில் நடைபெற்றிருப்பின் (இலங்கை, ஆபிரிக்க நாடுகளிலொன்றில்) அவர் இந்தப்போட்டியில் பங்கேற்கமுடியும்.
ஒரு இந்தியர் அமெரிக்க குடியேற்ற வீஸா வொத்தரில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்ட நாட்டில் பிறந்த ஒருவரை மணமுடித்திருப்பின் துணையின் நாட்டினைக் காட்டி இந்த அமெரிக்க வீஸா லொத்தரில் பங்கு பற்ற முடியும். லொத்தரில் வெற்றி பெற்று வீஸாக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் தனியாக அங்கு செல்ல முடியாது கட்டாயம் அவரது துணையுடனேயே செல்லவேண்டும்.

இந்த லொத்தரில் வைத்திருக்கும் பாஸ்போடடோ அல்லது குடியேற்ற அனுமதியோ செல்லுபடியாகாது. உங்கள் பிறப்பு நிகழ்ந்த நாடே இந்த லொத்தரில் பங்கு பற்ற அனுமதியளிக்கமுடியும்.

மேலதிக விபரங்களுக்கு http://www.bbsnetting.com/