Sunday, January 6, 2013

காமெடி கதைகள் - 1

மகாராஜா ஒருவர் தான் வாழ்க்கையில் காணத பழம் ஒன்றை கொண்டுவந்து தரும் தனது நாட்டு பிரஜைககு தனது நாட்டிலுள்ள ஒரு ஊரை பரிசாக தருவதாகப்  பறை சாற்றினான்.
லட்சக் கணக்கானோர் அரசனுடைய மாளிகைக்கு வெளியே வரிசையில் தமது அதிர்ஷ்டத்தை பரீட்சிக்க வந்து நின்று கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்துப் பயந்த அரசன் தனது முடிவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அதில் ஒன்று தான்  அப் பழத்தை ஏற்கனவே  பார்த்திருந்தால்  அதனை முழுதாக விழுங்க வேண்டும் என்பதாகும் .

இதை கேட்டவுடன் மாம்பழம் வாழைப்பழம் போன்றவற்றுடன்  நின்றவர்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தனர்.
மற்றவர்கள் மனமாற்றம் இன்றி வரிசையில் நின்றனர்  ஒருவர் தேசிக்காயை அரசனுக்கு காட்டினர் . அரசன் அதை பார்த்துள்ளதாக கூறினான. மனமுடைந்த அவர் அரசன் ஆணைப்படி அந்த தேசிக்காயை முழுதாக விழுங்கினார்.

அடுத்து  வந்த விளாம்பளக்கரரும் கஷ்டத்துடன்  அந்த விளாம்பழத்தை  முழுதாக விழுங்கினார்.

சிரிப்புடன் வந்த பபபா பழக்காரரும்  அழுதபடி அதனை விழுங்கினார்.

பின்னால் வந்தவர் அன்னாசிப்பழம்  கையில் ஏந்தியவண்ணம் அரசனைப் பார்த்து தலை வணங்கி பரிசைக் கேட்டான். அரசன் கோபத்துடன் தன அப் பழத்தை பர்த்துளதாக கூறி அதனை விழுங்க சொன்னான்.

அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் அதை விழுங்குவதும் பின்னர் அதனை வெளியே எடுத்து சிரிப்பதுவுமாக இருந்தான். அவன் வாய்  எல்லாம் ரத்தம் ஓடியபடி இருந்தது. அப்படியும் அவன் சிரிப்பை விடவில்லை.

அரசன் பயங்கர கோபத்துடன் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டான் .
 அதறகு அன்னாசிப்பழம் கொண்டுவந்தவன் சொன்னான், ராஜாவே நான்  இந்த அன்னாசிப்பழத்துடன் இந்த கஷ்டப்படுகிறேனே பின்னால்  ஒருவன் பலாப்பழத்துடன் அவன் அதனை எப்படி விழுங்கப்போகிறான் என்பதை நினைக்கும் போது இந்த கஷ்டத்துள்ளும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றான்.

அரசன் உடனடியாக  பலாப்பழத்துடன் நிற்பவனை  உள்ளே  வர சொல்லி ஆணை இட்டான். அவன் மகா புத்திசாலி. அன்னாசிப்பழத்துடன் இவன்  படும் கஷ்டத்தை கேள்விப்பட்டவுடன் உடனடியாக பழத்தை வெட்டி அதிலொரு சுளையை மட்டும் எடுத்தக் கொண்டு ராஜா முன் நின்றான்.

அரசன்  தான்  அப் பழத்தை பர்த்துளதாக கூறினாலும் அவனது புத்தி சாதுரியத்தை பாராட்டி சொன்னபடி தனது பரிசை அவனுக்கு வழங்கினான்.
அந்த ஊர் தான் இன்று பழவூர் எனவிருந்து இன்று பளை என்ன அழைக்கப் படுகிறது.

Friday, January 4, 2013

ஜாதி சங்கக்காரங்களையும் ரீவீ காரனுங்களை கவிழ்த்த கமல்.


சுப்பர்ஸ்ரார், தல, தளபதி என அவனவன் (அவளுங்களுந்தான்) தமது தலைவரின் பட ரீலிஸ் அன்னிக்கு தியேட்டருங்க முன்னாடி ஒரு பெரிய திருவிழாவே நடத்தி அந்த தியேட்டர் வீதியை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.
அப்புறமா தியேட்டருக்குள்ளாற போயி சாவகாசமாக படத்தைப் பாப்பானுங்க.

அப்புறமா பாருங்க இந்த திருவிழா கூட்டத்துக்குள்ளாற அடிபட்டு மிதிபட்டு கால் கடுக்க நின்னு காசைக் கொடுத்து பஸ்டு பஸ்டா படத்தை பாக்குறதுக்குன்னே ஒரூ கூட்டமிருக்காங்க.
இவங்க படத்தை பார்த்துட்டு வரும் அழகே அழகு. அப்பத்தான் குளிச்சிட்டு தலதுவட்டாத போல உள்ளே போன வேகத்தை விட அதிவேகத்தில வெளியே வருவாங்க. அத்தோட விட்டாங்களா சகல நண்பர்களுக்கும் கோல் எடுத்து தலவரோட படம் பாத்துக்கிட்டிருந்தனா அதுதான் ஒன்னோட கோலை அற்றரண் பண்ணமுடியலை எம்பான். மறுமுனையிலிருந்து நான் உனக்கு கோல் எடுக்கவேயில்லையே என அலறுவது அருகில் நிற்கும் அனைவர்க்கும் கூட கேட்கும்.
சரி மேட்டருக்கு வருவோம். கமல் சார் படம் தியேட்டரில் இல்லத்தானே ஜனங்க படத்தை பார்த்துட்டு வரும் போது நம்ப ரீவீ காரனுங்க இம்மா ஸைசு மைக்கொன்ன பிடிச்சுக்கிட்டு படம் எப்படிங்கன்னு கேட்டுகிட்டேயிருப்பாங்களா?
நம்பாளுங்களும் ஒன்னொன்னு சொல்லிக்கிட்டே போவாங்களா?

கமல் சார் படத்திக்கு இந்த சான்சே இல்லாம போயிடிச்சே. இனி ரீவீ காரனுங்க இதுக்காக வீடு வீடா திரியணுமோ? இல்ல நல்ல விலைக்கு கமல் சார் இந்த படத்தை டிரக்கடா ரீவீயிலேயே போட்டு தியேட்டகாரங்களை கவுத்திடுவாரோ?

அப்புறம் இன்னொண்ணுங்க நம்ப ஜாதி சங்கக்காரங்களையும் சான்ஸ் இல்லாம பண்ணிட்டாருங்க. நம்ப ஜாதி சங்கக்காரங்க தியேட்டருங்க முன்னாடி நின்னு நம்ப தலைவரை, ஆளுங்களை அப்பிடி சொல்லிட்டார் இப்பிடி காமிச்சுட்டாரென ஆர்ப்பாட்டம் பண்ணமுடியாமலும் செஞ்சிட்டாரே?

படிச்சவரே சொன்னது சரியா பிழையா?
எதுன்னாலும் நான் ஜகா வாங்கமாட்டேன்.

 

Thursday, January 3, 2013

ஏர்போட்டில் பப்பிளிக்கா ஒன்னுக்குப் போன நடிகர்-வீடியோ.

ஏர்போட்டில் பப்பிளிக்கா ஒன்னுக்குப் போன நடிகர்.
பயணிகள் விமானம் ஏறுவதற்காக காத்திருக்கும் மண்டபத்தில் இந்த 26 வயது நடிகர் எவரையும் சட்டை செய்யாமல் சகலரும் பார்க்கும் வண்ணம் அந்த மண்டபத்தில் ஏக அமர்க்களமாய் இதனைச் செய்துள்ளார்.

வேறு ஒன்றுமல்ல மிக நல்ல இளைஞன் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளளார். 'ரூவிலைற்'  மூலம் பிரபலமான புறன்ஸன் பெல்ரியரே இவ்வாறு அமெரிக்க லொஸ்ஏன்ஞலிஸ் விமான நிலையத்தில் நடந்து கொண்டுள்ளார்.

அவ்விடத்திற்கு விரைந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி அவரை நிலத்தில் வீழ்த்தி கைவிலங்கிட்டு அழைத்து சென்றுள்ளார்.

போது இடத்தில் குடிபோதையில அநாகரீகமாக நடந்ததற்கு இவருக்கு 6 மாத சிறையும் 1,000 டொலர் அபராதமும் இம்மாதம் கிடைக்கலாம்.

Twilight' Actor Bronson Pelletier PEEING in the Airport Terminal.




Wednesday, January 2, 2013

இந்த தியேட்டர் ஓனர்களை ஓட ஓட உதைச்சா என்னாங்க?

இந்த தியேட்டர் ஓனர்களை ஓட ஓட உதைச்சா என்னாங்க?

இன்னி டேற்ல திமிரு பிடிச்ச கமல் டீடீஎச்லயும் விஸ்வரூபத்தை போடுவேன்னுட்டாரு. தியேட்டர் ஓனர்மாரு கூட்டம்போட்டு கமல் படம் எதனையும் தியேட்டர்ல காட்டமாட்டேன்னுட்டாங்க. அத்தோட விட்டாங்களா இனி டீடீஎச்ல போடுற எந்த படத்தையும் தியேட்டர்ல காட்டமாட்டோம்னு சத்தியம் வேற செய்யிறாங்க.

யப்பா ஓனர்மாருங்களே காலத்திற்கேற்ப உழைப்பதற்காக நீங்கமட்டும் மாறலாம். மத்தவங்க மாறப்படாதா?
ஒங்க தாத்தாமாரா தியேட்டர் கட்டும்போது ஏசி, box plan, digital sound, dolby,  balcony, canteen, bar, பார்க்கிங், எல்லாம் போட்டுக்கட்டினாங்க?. நீங்கதானே வருமானம் கூடணுங்கிறதுக்காக இதெல்லாம் செஞ்சீங்க. இன்னமும் செய்யுறீங்க.
கமல் ஏதும் புதுசா செஞ்சு போட்ட பணத்தையும் லாபத்ததையும் எடுக்கணும்னா நீங்கெல்லாமா சேர்ந்து ரூம் போட்டு குடிச்சிட்டு வந்து விடமாட்டோம்னு நிக்கிறீங்களே கேனப்பயலுகளா.

யப்பா தியேட்டர் ஓனர்மாருங்களே நீங்கதானே விஜய் படம் ஊத்திக்கிடிச்சு தல படம் ஊத்திக்கிடிச்சு என பணங்கேட்ட ஆளுங்க?
மறக்கமாட்டோம்.
அதென்ன பிட்டு படம் போட்டு காலத்தை தள்ளலாமுன்னு பாக்கிறீங்களா பன்னாடய்ங்களா?

தெரிஞ்சுக்கங்க டீடீஎச்லயோ இல்ல அடுத்த மாநிலத்தில சரி இந்தப்படத்தை நாங்க பாக்கத்தான் போறம்.
உங்களுக்ககுத்தான் நட்டம்.
தெளிவா சொல்றம் படத்தை போடு. ஊரோட ஒத்ததுப்போ.

ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே தியேட்டர் பிஸினஸ் படுத்துப்போச்சு. ரவு ஸோவுக்கு பொண்ணுங்க  வரமாட்டாங்களாம் அதால பசங்களும் வரமாட்டாங்க. பிஸினஸ் நாறப்போவுது.
தெளிவா சொல்றம் படத்தை போடு. ஒம் பொண்ணோட கல்யாணத்துக்கு பணம் சேரும்.
இந்தக் கட்டுரை சார்பான மற்றவர்களின் பதிவுகள்

விஸ்வரூப வில்லங்கங்கள்-ஒரு அலசல்

DTH தொழில்நுட்பம் : திருட்டு வீடியோ பதிவு செய்ய முடியுமா?

இதைப் படிச்சவங்களே என்ன நினைக்கிறீங்க?
அவுங்க படத்த   போடணும்தானே?.
அவங்களுக்கு ஒறைக்கிற மாதிரி இங்க எழுதுங்க.
அப்படிப்போடு  சப்போர்ட்ட .



Friday, September 14, 2012

திட்டுவோம் வாருங்கள் .


ஒருவரை மற்றவர் திட்டுவதென்பது உண்மையில்  ஒரு கலைதான் . ஒரு சிலரால் திட்டவே முடியாது. ஒரு சிலருக்கு மற்றவர்களைத்  திட்டாமல் இருக்கவே முடியாது.
இவர்கள் திட்டும் சொற்களும் வார்த்தைகளும் இவர்கள் கண்டு பிடித்தவை அல்ல. இவர்கள் பிறப்பின்போதே இவர்களுக்குள் பதிவாகி  வந்தவைதான்  அவை.
இதோ சாம்பிளுக்கு சில.

சரியான அலுகோசு.
அலுகோசு என்பது போர்த்துக்கேய மொழியில் தூக்கிலிடுபவன்

சரியான எம்டன்
எம்டன் என்பது ஜெர்மனியின் அழிக்க முடியாதென கருதப்பட்ட பிரபல சண்டைக் கப்பல்

பரதேசி - பிச்சைக்காரன்

பன்னாடை - பனை ஓலை வளரும் இடத்தில் உள்ளது.

கொள்ளையில் போவானே
கொள்ளை என்பது எலியினால் பரவிய பிளேக் என்னும்காய்ச்சல்.

கோதாரியில போவானே
கோதாரி என்பது காலரா என அழைக்கப்படும் நோய்

பாடையில போவானே
பாடை என்பது இறந்த ஒருவரை சுடலைக்கு கொண்டு செல்ல பயன்படுவது.

முண்டம் 
முண்டம் தலை இல்லாத உடல்.



Sunday, September 9, 2012

வீடுகளில் அதிகம் தேடப்படும் பொருள் எது?

இன்று பாமரன் முதல் பணக்காரன் வீடுவரை காலையிலிருந்து இரவு நித்திரைக்குப் போகும் வரை சிறுவர் முதல் பெரியோர்வரை பாய்ந்து பாய்ந்து தேடி தமக்குப் பக்கத்தில் பதுக்கி வைக்கும் பொருள் எது?
கண்டுபிடிக்க முடியவில்லையா?
ரீவி றிமோட் கொன்றோல்தான்.
இளைய தலைமுறையினர் விளம்பரத்தைக் கண்டவுடன் மள மளவென சனல்களை மாற்றிச்செல்வார்கள். பெரியோர்களால் அந்த வேகத்தில் அதனைப் பார்த்துக் கிரகிக்க முடியாது.
இளைய தலைமுறையினரின் நினைவாற்றல் மிகப்பயங்கரமானது. 10 செக்கன்களுக்குள் 15 சனல்களைப் பார்த்து அவற்றில் எது டிராமா, எது படம், எது சீரியல் என அடையாளங் கண்டுகொள்வர். புடமாயின் அதைப்பற்றிய பூரணவிபரங்களையும் தமது மூளையின் பதிவிலிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

  பெரியோர்களால் ரீவி சனலில் மாறுங் காடசிகளைக் கிரகிக்க முடியாது. சினங்கொண்டு ரீவி றிமோட் கொன்றோல் பாவிக்கும் சிறுவர்மேல் சீறுவர். அல்லது அவர்கள் வருமுன் அதனை எடுத்து ஒளித்து விடுவார்கள்.

Sunday, September 2, 2012

கொத்து ரொட்டி என்ற பெயரில் கொத்தாத ரொட்டி.


மொக்கன் கடை புட்டும் ஆட்டிறைச்சிக் கறியும் குடிக்கவும் விட்டுச் சாப்பிடவும் எலும்பு ரசமும் என்றிருந்த காலம் மாறி கொத்து ரொட்டியும் கொக்கோ கோலாவும் என இளைஞர்கள் மாற்றமடையப்பட வைக்கப்பட்டுள்ளனர்.  இரவு 11 – 12க்கும் கூட டண டண என கொத்து ரொட்டி கொத்தின காலமும் இருந்தது. அப்பெல்லாம் நைற் கடைகளிருந்தன ஆனால் இரவு 2 மணிக்குக்கு கொத்து செக்ஸன் மட்டும் பூட்டப் பட்டுவிடும். இப்பவும் பின்னேரத்திலயிருந்து விடிய விடிய கொத்து ரொட்டியிருக்கு ஆனால் அந்தக் கொத்திற சத்தந்தானில்லை.


கொத்துரொட்டி தயாரிப்பும் பயங்கரமாக முன்னேறி பல வகையான கொத்துரொட்டிகள் வந்துவிட்டன.
1. கோழிக் (சிக்கன் ) கொத்துரொட்டி.
றோஸ்ட் சிக்கனா? கறிக்குள் போட்ட சிக்கனா?;
றோஸ்ட் சிக்கன் எண்டால் உடைத்துப் போடுவதா முழுசா போடுறதா?
2. மீன்; கொத்துரொட்டி.
3. சீஸ் கொத்துரொட்டி.
4. முட்டை கொத்துரொட்டி.
5. மரக்கறிக் கொத்துரொட்டி.
அதென்ன கொத்தாத ரொட்டி?
இப்போ கொழும்பில் எதற்கெடுத்தாலும் வழக்கு வழக்கு அதற்குமேல் தண்டனை.
கொத்து ரொட்டி கடைகளுக்கு அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் தங்களுக்கு தூக்கம் கெடுவதாக கொத்து ரொட்டி கடைகளுக்கு எதிராக வழக்கு போடப்போவதாக மிரட்டுவதனால் கடை முதலாளிகள் முதல் நாள்  கொத்து ரொட்டிக்கெனப்போடப்படும் ரொட்டியை தூளாக வெட்டி வைத்துக்கொள்வார்கள்.


யாராவது கொத்து ரொட்டி ஓடர் செய்தால் முட்டையை உடைத்து கொத்து ரொட்டி தட்டில் பொரியவிட்டு பின் கொத்து ரொட்டிக்கான சகல சாமான்களையும் அத்துடன் போட்டு 4 புரட்டல், 2 சுழாவல், 2 தட்டல். ஆகா உங்கள் கொத்து ரொட்டி ரெடி. சத்தமே இல்லாத கொத்தாத கொத்து ரொட்டி இதுதான்.
(கொத்து ரொட்டியின் பெயரை மாற்றி புரோட்டா புரட்டு என்போமா?)
வேணுமா வேணாமா? ஓட்டுப்போடுங்க.