Sunday, January 9, 2011

பிச்சைகாரர் மீண்டும் வானொலி அறிவிப்பாளர்

அமெரிக்கப் பத்திரிகையொன்றில் வேலை செய்யும் வீடியோ படப்பிடிப்பாளர் வீடு இல்லாமல் வீதியில் வசிப்பவர்களுக்கு சிறு பண உதவி செய்பவர். ஒருமுறை இவ்வாறான ஒருவருக்குப் பண உதவி செய்யும் போது தான் ஒரு பழைய வானொலி அறிவிப்பாளரென மட்டையில் எழுதிவைத்திருந்ததைக் கவனித்துவிட்டார்.
மீண்டும் அவ்வழியாக அவர் தனது வீடியோ கமெராவுடன் வந்தபோது அந்த பிச்சை எடுப்பவரைக் கண்டு அவரது வானொலித் திறமையைக் காண்பிக்கச் சொல்லி அதனைத் தனது வீடியோவில் பதிவு செய்து தனது காரியாலயத்தில் கொடுத்துள்ளார்.
பிச்சைஎடுப்பவரின் கணீர் என்ற குரலைக் கேட்ட காரியாலயத்திலிருந்த ஒருவர் அதனைத் தங்களது இணையத்தில் போட்டுவிட்டார். அங்கு அதனைக் பார்த்துங் கேட்ட ஒருவர் அதனைக் காப்பி பண்ணி யுரியூப் இணையத்தில் போட்டு விட்டார்.
கணீர் என்ற குரலைக்கொண்ட அந்த வீடியோ 48 மணிநேரத்தில் 13,000,000 பார்வையாளர்களால் பர்வையிடப்பட யார் அந்த பிச்சைகாரரென முழு அமெரிக்காவுமே தேடத்தொடங்கியது.
இன்று அந்த பிச்சைகாரர் மீண்டும் தனது வேலையை ஆரம்பிக்கிறார்.
ஆம் பழைய அறிவிப்பாளர் மது; போதை என வாழ்க்கையை தொலைத்தவருக்கு கடவுள் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment