Sunday, November 10, 2013

100 டாலர் (ரூபா 6,250/-) விலைக்கு நச்சு மீனை சாப்பிடும் ஜப்பானியர்கள்.

Fugu எனும் இந்த மீன் வகை கொடிய நஞ்சு கொண்டவை. இவற்றின் ருசியோ அலாதி. இதை ஜப்பானியர்கள் அதிக விலை கொடுத்து விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த Fugu (ஆற்றுப் பன்றி) மீன்களை ரெஸ்டுரன்ட்களில் சமைக்கும் சமையல்காரர் விசேட லைசென்சை இதற்காகவெனப்  பெற்றிருக்கவேண்டும்.
சமைக்கும் போது எதாவது தவறு நேர்ந்தால் அந்த மீனை உண்பவர் அந்த இடத்திலேயே உடல் விறைத்து மரணமடையலாம்.

திறமையான  சமையல்காரர்கள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சி கொடுப்பார்கள் அதாவது அதைச் சாப்பிடுபவர் நாக்கில் சிறிது விறைப்பை சிறிது நேரத்துக்கு ஏற்படசெய்து அம மீனின் நச்சுக்குணத்தை அறியச் செய்வார்கள்.

இதோ அது பற்றிய  வீடியோ.





                                                 இதோ அம்மீனின் படம்.

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது பற்றி அறிந்துள்ளேன். இம்மீனை துப்பரவு செய்து தோல் நீக்குவதிலே மிகத் திறமையான சமையல்காரர் உள்ளார்களாம்.அதனால் ஜப்பானியர் பயமின்றி உண்கிறார்கள்.
இந்த மீனின் தேவை அதிகமாக உள்ளதால் தொகையாக வளர்க்கிறார்கள். அத்துடன் இதன் நச்சுத் தன்மைக்கான காரணத்தை ஆராய்ந்து , அது இயற்கையாக வளரும் போது கடலில் உள்ள ஒரு வகை நச்சுப் பாசியை உண்பதாகவும், அப்பாசி உண்ணாமல் வளர்ந்தபோது ,இம்மீனில் நச்சு தன்மை அற்றிருந்ததால் இப்போது ஏனைய மீனுணவைக் கொடுத்து இதை அடைத்து வளர்த்து உண்கிறார்களாம்

Post a Comment