Tuesday, April 7, 2015

வெள்ளைக்காாியின் காவடி ஆட்டம் கதிா்காமத்தில்.

 அழகாக காவடி ஆடிய வெள்ளைக்காரப்பெண்.
வெளிநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உட்பட 9 பேர் அடங்கிய குடும்பமொன்று கதிர்காமக் கந்தனுக்கு காவடி எடுத்ததை அங்கு வழிபாட்டுக்கு வந்திருந்த தமிழ் சிங்கள மக்கள் பெரும் ஆவலுடன் பார்வையிட்டனர். இது நேர்த்திக் கடனுக்கோ அல்லது அவர்களின் ஆவலினால் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. மாணிக்ககங்கையின் மேலுள்ள பாலத்தின் மேலாக ஆடியபடி வந்தவர்கள் பின் பிரதரன வீதியுடாக கோவிலுள் வந்தபோது இரவு பூஜைகள் ஆரம்பித்தபடியால் காவடிகளை இறக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.பின்னர் பூஜைகள் நிறைவு பெற்றபின் மீண்டும் காவடிகளை தோள்களிலேற்றி கோவில் வீதியில்; சுற்றி ஆடியபடி வந்து காவடிகளை இறக்கினர்.

வீடியோ. Here.



No comments:

Post a Comment