Friday, April 10, 2015

கதிர்காம பயணம்.2015ல். (Going to Kathirgamam)

                                                           

இப்போதெல்லாம் மிக வேகமாக கதிர்காமத்துக்குப்  பயணம் செய்ய முடிகிறது. முன்னர் 10 - 12 மணித்தியாலங்களாக இருந்த பயண நேரம் தற்போது 5 மணித்தியாலங்களாகியுள்ளது.

                                                       கோவிலண்மையில் 
                                                                             

எங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்?
1. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்.
மாத்தறை வரை ரயிலில் சென்று பின் பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்

2.  கொழும்பு கோட்டை பஸ் நிலையம். 32ம் இலக்க பஸ்சில் கதிர்காமம் செல்லலாம். சாதாரண கட்டணம்

 3. கொழும்பு கோட்டை எக்ஸ்பிரஸ் பஸ் நிலையம் 
  எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக கதிர்காமம் செல்லலாம்
கட்டணம் ரூபா 800.00

 5. மகரகம பஸ் நிலையம். இங்கிருந்து எக்ஸ்பிரஸ் பஸ் அதிவேக வீதியூடாக மாத்தறைவரை செல்லு ம். காலை 9.00 மணியில் இருந்து கதிர்காமத்துக்கு நேரடி பஸ் உள்ளது. அல்லது இங்கிருந்து திஸ்ஸ என்று அழைக்கப்படும் திஸ்ஸமஹராமவுக்கு பஸ்சில் சென்று பின் அங்கிருந்து இன்னொரு பஸ்சில் கதிர்காமம் செல்லலாம்.
மகரகம - மாத்தறைவரை கட்டணம் ரூபா 445.00  (2.30 மணித்தியலங்கள் )
மாத்தறை - திஸ்ஸமஹராம கட்டணம் ரூபா 135.00 (3 மணித்தியலங்கள் )
திஸ்ஸமஹராம - கதிர்காமம் கட்டணம் ரூபா 35.00 (20 நிமிடங்கள் )

எங்கு தங்கலாம்?


கதிர்காம யாத்திரிகர் தங்குமிடம்  (இந்து கலாச்சார அமைச்சு)
சாதாரண அறை கட்டணம் ரூபா 350.00 (இரண்டு கட்டில்கள் , நுளம்பு வலை மின்விசிறி இணைந்த குளியல் அறை)

இலங்கை வங்கி ரெஸ்ட்
லேககவுஸ் ரெஸ்ட் (அறை கட்டணம் ரூபா 900.00 இரண்டு கட்டில்கள் )

                                          மாத்தறை பொது பஸ் தரிப்பிடம்
                                           
                                               பஸ்சின் உட்புறம்


                                                   
                                              பஸ்சின் வெளிப்புறம்
                                                     

                                                மாத்தறையில்  டீக்கு நிறுத்தல்

                                                                             








No comments:

Post a Comment