Wednesday, February 20, 2013

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்.







காற்றோடு கலந்து பரவும் விஷக் கிருமிகளைத் தன்பால் கிரகித்துக் கொள்கின்ற சக்தி வெங்காயத்துக்கு மட்டும் உண்டு. தினமும் அதிகாலை ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாழ்நாள் முழவதும் எந்த நோயும் அணுகாது.
                                உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை உண்டு பண்ணுகிற சிறப்புச் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.வெங்காயத்தை 2 துண்டுகளாக வெட்டி முகர்ந்தாலும் வாயில் போட்டு சப்பினாலும் வாந்தியை தவிர்க்கலாம்.
         தொற்று நோய் பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால் கொ}ஞ்சம் வெங்காயம் எடுத்து செல்வது நல்லது.நோய் கிருமிகள் நம்மைப் பாதிக்கா.



வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா?


நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் வெங்காயத்தை வெறுமனேருசிக்காக மாத்திரம் சேர்த்து வருகிறோம்.அது தவிர இதனைப் பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது.இது எப்படிப்பட்டது,இதனை மருத்துவக் குணங்கள் என்ன என்றெல்லாம் எடுத்து நோக்கும் பொழுது வெங்காயத்தின் மகிமையினை உணர்ந்து கொள்ளலாம்.
                                       வெங்காயத்தைச் சாப்பிடும் பொழுது வேகவைத்துச் சாப்பிவதே மிகவும் சிறந்த முறையாகும்.அதற்காகப் பச்சையாகச் சாப்பிடக் கூடாதென்பதல்ல.பச்சையாகச் சாப்பிடுகிறவர்கள் சிறிது நேரம் வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்வதாயின் செல்லவும்.காரணம் பச்சையாக சாப்பிட்டவர்கள்,மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது வெங்காய வாடை வீசும்.
ஏனையோர் அவ்வாடையினால் வெறுப்படைய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.ஏனென்றால்,நூற்றுக்குத் தொண்ணூறு சதவீமானவர்கள் வெங்காய வாடையை வெறுப்பாகள்.
         இவ்வெங்காயத்தினை காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் பொழுது அவ்வுணவு வகைகள் தனிச்சுவை பொற்றுவிடுகின்றன்அது மட்டுமல்ல,இதன் மருத்துவக் குணங்களை எடுத்து நோக்குவோமானால் அது ஒன்றிரண்டு என மட்டுப்படுத்தி விட முடியாது.நிறையவே மருத்துவக் குணங்களை கொண்ட ஒன்று தான் வெங்காயம்.
                            இது பற்றி மருத்துவத்துiயினர் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.வெங்காயம் நச்சுக் கிருமிகளைக் கொல்லுவதுடன் உடற்பருமன் ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கிறது.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வருகையில் உங்கள் குரல் வளம் இனிமை பெறும்.அழகிய குரல் வளம் பெற விரும்புகின்றவர்கள் மேற் கூறிய விடயத்தைக் கைக்கொள்ளலாம்.கிராணி,விஷக்கடி,குழிப்புண் ஆகியவற்றையும் குணமடையச் செய்வதுடன்,பித்தத்தையும் தணியச் செய்யும் குணமும் இதற்குண்டு ம10ளை சுறுசுறுப்பாக இயங்கவும்,காக்கை வலிப்பு போன்ற கெட்ட நோய்கள் நீங்கவும்,வெங்காயம் வழி சமைக்கின்றது.
                  குhலையில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயங்களைத் தனியாகவோ உண்வுகளுடனோ சோர்த்து உண்டு வந்தால் அன்று முழுவதும் உஷணம்,வேறு பிணிகள் எம்மை எட்டிக்கூடப்பார்க்க மறுக்கும்.கோடை காலத்தில் ஒரு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டால்,மயக்கம் போன்ற தன்மைகள் எம்மை அணுகாது என மருத்துவர்கள் கருத்துரைக்கின்றனர்.
                வெங்காயசடசாறு பக்கவாதம்,நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்தாகும்.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வந்தால் பக்கவாதம் ஏற்படாமல் தவிக்க முடியுமென இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று அறிவித்துள்ளது.

      குறிப்பாக புகைபிடிப்பவர்கள் வெங்காயத்தை நாட வேண்டும்.காரணம்,இப்பழக்கத்தினால் நுரையீரல்,இதய நோய்கள் ஏற்படுகின்றன.நச்சுப் பொருளால் இரத்தம் கெடுகின்றது.இவ்வாறன புகைப் பழக்கத்தையுடையவர்கள் வெங்காயத்தை உண்டு வரலாம்.
      இவ்வாறு உண்பதால் புகைப் பழக்கத்தாலேற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.மொத்தத்தில் வெங்காயம் ஒரு உணவுப்பொருளாகவும்,மருத்துவப் பொருளாகவும் இருந்து வருகின்றது.                       

No comments:

Post a Comment