Wednesday, January 30, 2013

Ozone - ஐரோப்பிய கண்டுபிடிப்பு 1930. தமிழர்கள் 2.000 வருடமுன்னரே இதையறிவர்.

ஓஸோன் படை (Ozone Layer) 1930களில் ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் 2.000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப்பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியுமறிவர். அதாவது இது 200–300 வருடங்களுக்கு முன்னரே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. 1970 – 1980 களிலேயே இதன் தாக்கங்கள் பற்றியும் ஆறிய ஆரம்பித்தனர்.


                                     புராணவித்தகர் மு.தியாகராசா அவர்கள் .

ஆதற்கு ஆதாரமாகக் கீழுள்ள பாடல் இலங்கை. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சேர்ந்த புராணவித்தகர் மு.தியாகராசா அவர்களால் புறநானூற்றிலிருந்து (43வது பாடல்)பெறப்பட்டு அவரது விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது.


நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக,
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையேன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி
எக்க ரிட்ட மணலினும் பலவே (43)

(பதப்பொருள் விளக்கம்) நிலமிசை வாழ்நர் அலமரல் தீர - இந்த நிலவுலகில் வாழ்கின்ற மக்களின் துன்பச் சுழற்சியினால் ஏற்படும் பாடுகள் நீங்கும்படியாக,

தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி – வெப்பத்தால் தகிக்கின்ற கதிர்களை உடையதாகிய சூரியனது தீமைபயக்கும் பகுதியாகிய வெம்மையின் ஒரு பகுதியை தாமே ஏற்றுக் கொண்டு, 

கால் உணவாக – தமது உணவாகக் காற்றையே உண்டு,

சுடரொடு கொட்கும் - அச்சூரியனோடேய சுழன்று வருகின்ற,

அவிர்சடை முனிவரும் - ஒளிர்ந்து விளங்கும் சடாமுடியை உடைய முனிவர்களும்,

மருள – வியப்பினால் திகைப்புற்று மயங்க,

 கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தின் - வளைந்த சிறகுகளையும் கூரிய நகங்களையும் கொண்ட பருந்தினது, 

ஏறு குறித்து ஒரீஇ - எறிந்து தாக்கிக் கொல்லும் படி வரும் செயலைக் கண்டு பயந்து பறந்து அவ்விடத்தை விட்டு விலகித் தப்பி,

தன் அகம் புக்க – தன்னிடத்தே அடைக்கலமாகப் புகுந்த,

குறு நடைப் புறவின் தபுதி அஞ்சி - குறுகிய நடையினையுடைய புறாவினுடைய அழிவுக்காக அச்சம் கொண்டு,
சீரை புக்க - தனது அழிவுக்காக எவ்வித அச்சமும் கொள்ளாது துலாக் கோலிற்புகுந்து தன்னை அப்புறாவுக்கா அர்ப்பணித்த, 

வரைய ஈகை உரவோன் மருக – எல்லையில்லாத கொடை வளம் கொண்ட மனோவலிமை மிக்கவனாகிய சிபிச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் உதித்தவனே,


நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் - எதிரிகளைப் போர்முனையில் வெற்றி கொண்டு அம்மாறுபாட்டால் ஆய செல்வச் சிறப்புக் கொண்ட,

தேர்வண் கிள்ளி தம்பி – தேர்ப்படைப் பெருக்கு உடையவனாய நலங் கிள்ளியின் தம்பியே, 

வார்கோல் கொடுமர மறவர் பெரும – நீண்ட அம்பினையும் வளைத்த வில்லையுமுடைய போர்வீரர்களின் பெருமானே,

கடுமான் கைவண் தோன்றல் - மிக்க விரைந்து ஓடும் குதிரையை உன் கைவண்ணத்தால் அடக்கிச் செலுத்தும் தோன்றலே,

ஐயம் உடையேன் - உனது பிறப்பிலே ஐயப்பாடு கொள்கிறேன்.

ஆர்புனை தெரியல் முன்னோர் எல்லாம் - ஆத்தி மலர் மாலை அணிந்த உனது மூதாதையர்கள் எல்லாரும்,

பார்ப்பார் நோவன செய்யார் - பிராமணர்கள் மனம் நோக எதனையும் செய்ததில்லை,

மற்று இது நினக்கு நீர்த்தோ என – அப்படி இருக்க இப்பொழுது பிராமணனாய் தனக்கு சூதாடு காயால் ஊறு செய்தது) இது உனக்கு உன்னுடைய தகைமைக்கு ஏற்றதோ என,

வெறுப்பக் கூறி – (அரசனாகிய) நீ வெறுக்கும் படியாகிய வார்த்தைகளை நான் சொல்லி,

நின் யான் பிழைத்தது நோவாய் எனினும் - உன்னை நான் அவ்வாறு ஏசியதை எண்ணி நீ வருத்தப்பட்டு என்னை என்தவறுக்காக வெறுக்கமாட்டாய் என்றாலும்,

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – நீ தான் ஏதோ பிழை விட்டு விட்டதாக எண்ணி மிக்க நாணத்தோடு எதுவும் பேசாது இருந்து விட்டாயே,


தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் - தமக்குப் பிழை செய்தவர்களைப் பொறுத்தருளும் ஆண்மகனே,

இக்குடிப் பிறந்;தோர்க்கு எண்மை காணும் என - இச்சிறந்த குடியிற் பிறந்தவர்கள் எளிமையோடேயே இருப்பார்கள். காண்பீர்;களாக என,

காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின் - எல்லாராலும் நன்கு அறியப்பட்ட பராக்கிரமம் மிக்கவனே அதைக் காட்டி விட்டாய் அல்லவா,

யானே பிழைத்தனென் - உண்மையில் நான்தன் பிழை விட்டுவிட்டேன். என்னை மன்னிப்பாயாக,

மிக்கு வரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பல – மிகுந்து பெருகி வரும் நன்னிரைக் கொண்ட காவிரியாற்றின் கரையிலே பரந்திருக்கும் மணலின் எண்ணிக்கையிலும் பார்க்கப் பல்லாண்டுகள்,

நின்ஆயுள் சிறக்க – உனது ஆயுளானது சிறந்து நீடிப்பதாக,


(அரும்பொருள்) அலமரல் - துன்பத்தில் சுழலுதல், தெறு – வருத்தும், கனலி - சூரியன், கொட்கும் - சுற்றிச்சுழலும், அவிர் - ஒளிபொருந்திய, கொடும்சிறை – வளைந்த சிறகுகள், ஏறு – எறிதல் (இங்கு கொல்லுதல்) ஒரீஇ - விலகி, தபுதி –அழிவு, சீரை – துலாக்கோல், வரையா – எல்லைஇல்லா, நேரார் - பகைவர், வார்கோல் - நீண்டஅம்பு, கொடுமரம் - வளைந்த வில், கடுமான் - விரையும் குதிரை, ஆர் - ஆத்தி, தெரியல் - மாலை, நீர்த்தோ - இயல்புக்கு ஏற்றதோ, எண்மை – எளிமை, மொய்ம்ப – புயபலம் உடையானே, எக்கர் - கரை.





(பிரதான குறிப்பு) உலகம் இயங்குவதற்கும் உயிர்கள் வாழ்வதற்கும் பெருந்துணை புரிவது சூரியன். அதன் ஒளியினாலும் வெப்பத்தினாலும் நாம் அடையும் பயன் அளவில. யாவரும் அறிந்ததே ஞாயிற்றின் வெப்பமான வெப்ப ஒளி அலைகள் அதன் ஏழு நிறங்களில் செம்மைக்கு முன்னாலும் ஊதாவுக்கு அப்பாலும் உள்ளவை. மனிதக் காட்சிக்கு உட்படுவன அல்ல. ஊதாவுக்கு அப்பாலுள்ள (அல்றாவயலெற்) ஒளி அலைகள் பூமியைச் சேர்ந்தால் மனிதன் கொடிய நோய்க்கு ஆளாவான். அப்படி ஆகாது அதைத் தடுத்து நிறுத்துவது ஓசோன் படலம். இது தனித்த பிராணவாயு அணுக்களால் ஆயதென்றும் வேறு வாயுக்கள் கலந்தால் சீரழிந்து விடுமென்றும் இக்கால விஞ்ஞானிகள் கூறுவது நாம் அறிவோம். இப்படி ஒன்று உண்டென்பது சங்கச் சான்றோர் அறிந்ததொன்று மிக்க ஆற்றல் உள்ள இயற்கையன் நிலைப்பாடுகளை பூதம் என்றோ முனிவர் என்றோ அவர்கள் குறிப்பிடுவதுண்டு. இந்த ஓசோன் தான் 'நிலமிசை....... முனிவரும்' என இப்பாட்டில் குறிப்பிடப்பட்டது. 'விண்செலன் மரபின் ஐயர்' என முருகாற்றுப்படையும், 'சுடரொடு திரிதரு முனிவரும்' எனச் சிலம்பும் கூறின.

மேலும் இதைப்பற்றி படிக்க



http://en.wikipedia.org/wiki/Ozone_depletion#Verification_of_observations

No comments:

Post a Comment