Monday, January 7, 2013

காமெடி கதைகள் 2

சில வருடங்களுக்கு முன்னர் ரேடியோவில் கேட்டது. சத்தியமாக சொல்லுகிறேன் இது என்னுடைய கதையல்ல. உரிமையாளர் இருப்பின் உரிமை கோரலாம்.
ஓரு ஊருக்கு நம்ப கதாநாயகன் படப்பிடிப்பு சம்பந்தமாகச் சென்றிருந்தார். அவ்வூர் பெரியமனிதர் ஒருவர் அவருக்கு விருந்து வைக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். மறுக்க முடியாமல் கதாநாயகனும் குறித்த நேரத்தில் பெரியமனிதர் வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேர உரையாடலின் பின் வீட்டுக்காரர் தட்டிலா வாழையிலையிலா உணவருந்த விரும்புகிறீர்களெனக் கேட்டார். நம்ப கதாநாயகனும் பெரிதாகத் தலையாட்டியபடி  வாழை இலையிலேயே சாப்பிட்டுருவோமேன்னாரு.


இதைக்கேட்டதும் வீட்டுக்காரர் முகம் வாடிவிட்டது. தம்பி இருந்த வாழை இலையெல்லாம் முன்னாடி வந்தவங்க பாவிச்சிட்டாங்க. இருந்தாலும் அதுல நல்ல ஒண்ண எடுத்து கழுவிக் கொண்டாரேன்னார். நம்பாளு பாஞ்சு விழுந்து நா தட்டிலேயே சாப்பிட்டுக்கிறேன்னு குழறத் தொடங்கினார்.

ஒருமாதிரி உணவருந்தி முடிந்த பின்னர் பெரியமனிதருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார். நம்ப கதாநாயகன் வாசலருகே சென்றிருக்கமாட்டார் மீள வந்து 'சரி ஐயா, நான் வரும் போதும் சரி, போகும் போதும் சரி, உங்க நாய் வாலாட்டிக் கிட்டிருந்தது. ஆனா நான் சாப்பிடும்போது மட்டும் அது ஏன் என்னப்பாத்து உறுமிக்கிட்டேயிருந்திச்சு என்றார்.'
ஓ அதுவா, நம்ம டாமிக்கு யாராச்சும் அதோட தட்டில சாப்பிட்டா அவ்வளவா பிடிக்காது. நீ;ங்க அதோட தட்டில சாப்பிட்டிங்கள்லா, அதுக்குத்தான் அது உறுமிக்கிட்டு இருந்திச்சு என்றார்.

நம்ப கதாநாயகன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து அங்கிருந்த திண்ணையில அமர்ந்திருந்த பொக்குவாய்ப் பாட்டிக்கு அருகிலமர்ந்தார்.
பாட்டிக்கு அருகில் வெற்றிலைப் பெட்டியைக் கண்டதும் இவருக்கு வெற்றிலை போட ஆசை வந்து பாட்டி ஒரு வாய் வெற்றிலை கொடேன் என்றார்.

இந்தாப்பா ஒரு முழுப்பாக்கும் ஒரேயொரு வெற்றிலையும் தான் இருக்கிறது எனக்கொடுத்தாள்.

நம்ப கதாநாயகனும் ஒரே கடியில் பாக்கை உடைத்து வெற்றிலையுடன் மெல்லத் தொடங்கினார். இதைப் பார்த்த பாட்டி அடேங்கப்பா உன் பல்லுங்க சரியான ஸ்ராங்கு. நானும் ஒரு வாரமா இந்தப் பாக்கை உடைக்கணுமுன்னு வாயுக்குள்ளேயே வைச்சிருந்து எவ்வளவோ முயற்சி  செஞ்சேன். ஓண்ணுமே சரிவரல்ல.


பாட்டி ஒரு வாரமா இந்தப் பாக்கை வாயுக்குள்ளேயே வைச்சிருந்தியா எனக்கேட்டார் நம்ப கதாநாயகன்.
ஆமா. ஏன் கசக்குதா என்று பாட்டி கேட்டாள்.

அன்னிக்கு அந்த வீட்டைவிட்டு ஓடத்தொடங்கிய நம்ப கதாநாயகனை யாரும் கண்டதாகத் தகவல் இல்லீங்க.

1 comment:

அமர்க்களம் கருத்துக்களம் said...

அருமை அருமை..

அன்புடன்
அமர்க்களம் கருத்துக்களம்,
www.amarkkalam.net

Post a Comment