Wednesday, January 16, 2013

கோழிப் புத்தி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?


ஏன்னுடன் வேலை செய்பவர்களில் ஆபிரிக்காகாரன ஒருவனுமிருந்தான்.. மிக நல்லவன் நல்ல பகிடிகாரன். ஒரு நாள் மேலதிகாரி ஒருவர் வந்து தேவையில்லாமல் மிக அதிகமாக அவனிடம் கத்தினார். அவனோ மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான் ஏதோ ஆப்பிரிக்க மொழியில் சொல்லிவிட்டு பழையபடி வேலை செய்யத் தொடங்கினான். சிறிது நேரம் அவனது கோபம் அடங்க விட்டு மெதுவாக அவனிடம் என்னநடந்தது என்னக் கேட்டேன். மேலதிகாரி போன பக்கம் பார்த்து 'சிக்கன் மைண்டட் மான்'; என்றான்

இப்போ எனக்கு நடந்த பிரச்சனை பற்றி கேட்ட கேள்வி மேலான ஆவல் போய் கோழிப் புத்தி பத்தி கேட்க வேணும் போல இருந்தது.




மெதுவாக கோழிப் புத்தி பற்றி கேட்டேன். அது என்னடாப்பா  அந்த கோழிப் புத்தி?

மிக ஆறுதலாக என்னைப் பார்த்தான் பின்னர் நடந்ததை நினைத்து வாய் விட்டுச ;சிரித்ததான். பின்னர் சொன்னான் இந்த மேலாளருக்கு எவ்வளவோ வேலைகள் அவர் கண் முன்னால் உள்ளன. அதெல்லாம் விட்டு விட்டு என்னுடைய சிறிய பிழையை பெரிதாக பார்க்கிறார், கத்துகிறார். அதற்குத்தான் என்றான்.

இப்ப பார் கோழிக்கு முன்னால் பெரிய மலையாக அரிசி இருந்தாலும் அது அதனை நேராக கொத்தி சாப்பிடாது ஆனால் அதை கிளறிக் கிளறித்தான் சாப்பிடும் என்றான். நான் வியப்பில் ஆழ்ந்தேன். உண்மையும் அதுதானே? மலையளவு இருந்தாலும்
கோழி அதனைக்  கிளறிக் கிளறித்தானே  சாப்பிடும்.
அந்த மேலதிகாரி முன்னாலுள்ள பெரிய பிரச்சனைகளை காணத்தெரியாமல் எங்கேயோ கிடக்கும் சிறிய பிரச்சனைளைக் கிளறி எடுக்கிறாரே என்பது தான் அவன் கருத்து.

வேண்டுமானால் ஒரு மூடை அரிசியை நிலத்தில் கொட்டிவிட்டு ஒரு கோழியையும் விட்டுப் பாருங்க அது எப்படி சாப்பிடுகிறது என.

பக்கத்திலிருந்த தமிழ் நாட்டுககரரிடம் அவன் சொல்லுகிற ஆபிரிக்க முன்னுதாரணம் நன்றாய் இருக்கிறதுதானே என்றேன். அதற்கு அவர் இவன் சொல்வது நல்லாய் தான் இருகிறது. ஆனால் இவன் மடையன். கோழி கிளறி சாப்பிடுகிறதோ அல்லது சும்மா சாப்பிடுகிறதோ, அது சாப்பிட்ட அரிசி தன் வயிற்றுக்குளதானே; செல்கிறது என்றாரே பார்க்கலாம். 


கோழிகள் புத்தி கூர்மையானவை. இதோ அதற்கான ஆதாரம்.


 

1 comment:

Anonymous said...

good one

Post a Comment