Sunday, March 26, 2017

ரஜினிகாந்த் இலங்கை வராததையிட்டு மனம் வருந்துவோர்.

இவரது யாழ்ப்பாண விஜயத்தை கைவிட்டதையிட்டு கவலையடைவோர் பட்டியலை பாருங்கள்.சுப்பிரமணியசாமி: அனைத்து சினிமா ஸ்டார்களும் கோழைகள், ரஜினிகாந்த் மட்டும் அதில் வேறுபட்டவர் இல்லை. ( All cinema stars are chicken. Rajnikant no different)

முன்னாள் இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸ:
இலங்கையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. அதன்படி எந்தவொரு நடிகரும் இலங்கை வருவதில் தவறில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்:  நடிகர் ரஜனிகாந்தின் வடக்கு விஜயத்தை அரசியலாக்கி ஏழைகளின் எதிர்ப்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் ஏமாற்றத்தை விதைத்துள்ளார்கள்.

 மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:
 நடிகர் ரஜினிகாந்த் வீடு வழங்க இலங்கை செல்வதில் தவறு இல்லை. தமிழனுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும், எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாக இருந்தால் கூட அவரை பாராட்டுவேன்.

 லொள்ளுசபா நடிகரும், தீவிர ரஜினி ரசிகருமான ஜீவா:
 போரில் பாதிக்கபட்ட மக்களுக்கு வேறு யாராவது வீடு கொடுத்தால், உதவி செய்தால் பிடிக்காது. காரணம் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது.


வடக்குத் தமிழ் மக்களுக்கும் ரஜினிகாந்த்துக்கும் என்ன தொடர்பு?
இவர் யாழ்ப்பாணத்தவரா? இலங்கையரா ? தமிழரா அல்லது தமிழ்நாட்டில்தான்  பிறந்து வளர்ந்தவரா? இவர்  தனது பணத்தில் 150 வீடுகள் கட்டி அவற்றை வழங்க வருகிறாரா? இவற்றில் எதுவுமே இல்லை.
இவரது 2.0  படத்தை எடுக்கும் சர்வதேச முதலாளி(லைகா)யின் நிகழ்வு  ஒன்றுக்கு கூட்டம் சேர்ப்பதற்குத்தான் (சிறப்பு விருந்தினராக) இவர் செல்லவிருந்தார். தற்போது  தமிழ்நாட்டு மக்களின்  எதிர்ப்பையிட்டு பயணத்தை கைவிட்டுள்ளார்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொல் திருமாவளவன் :
வறட்டுக் கவுரவம் பார்க்காமல், வீண்பிடிவாதம் செய்யாமல், எவருடையத் தூண்டுதலுக்கும் இரையாகாமல், மிகவும் தன்னியல்பான வகையில், எங்களது வேண்டுகோளை ஏற்று,
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவரின் இந்த முடிவு அவர் மீதான நன்மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. அவர் மாற்றார் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பவரல்ல. சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர் என்பது இம்முடிவிலிருந்து உணரமுடிகிறது.
நாங்கள் இந்த வேண்டுகோளை விடுத்ததில் அரசியல் உள்நோக்கமோ விளம்பர நாட்டமோ ஏதுவும் இல்லை. ஈழத்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தான் ஊடகங்கள் வாயிலாக இந்த வேண்டுகோளை முன்வைத்தோம்.

No comments:

Post a Comment